Sruthi Shanmuga Priya: 'ஏன் இவ்ளோ சீக்கிரம்.. அவனுடன் வாழ்ந்த நாட்கள் பத்தல' -மறைந்த கணவரை நினைத்து வாடும் சண்முக பிரியா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sruthi Shanmuga Priya: 'ஏன் இவ்ளோ சீக்கிரம்.. அவனுடன் வாழ்ந்த நாட்கள் பத்தல' -மறைந்த கணவரை நினைத்து வாடும் சண்முக பிரியா

Sruthi Shanmuga Priya: 'ஏன் இவ்ளோ சீக்கிரம்.. அவனுடன் வாழ்ந்த நாட்கள் பத்தல' -மறைந்த கணவரை நினைத்து வாடும் சண்முக பிரியா

Aarthi Balaji HT Tamil
Jan 22, 2024 08:13 AM IST

Shanmuga Priya: நடிகை ஸ்ருதி சண்முக பிரியா மறைந்த கணவர் குறித்து மிகவும் உருக்கமாக பேட்டி அளித்து உள்ளார்.

ஸ்ருதி சண்முக பிரியா
ஸ்ருதி சண்முக பிரியா

இவருக்கும் சென்னையைச் சேர்ந்த ஃபிட்னஸ் மாடலான அரவிந்திற்கும் கடந்த 2022 ஆண்டு திருமணம் நடந்தது. இந்த ஜோடி சமூக ஊடகங்களில் சுறுசுறுப்பாக இருந்தது, மேலும் அவர்கள் ஒன்றாக செய்த ரீல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றன.

திருமணமாகி 1 வருடத்தில் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த ஆண்டு, ஆகஸ்ட் மாதம் அரவிந்த் உயிரிழந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத சண்முக பிரியா உடைந்து போனார். தற்போது மெல்ல மெல்ல தனது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார். 

இதனிடையே தன் கணவர் இல்லாத நிலையில் அதனை எப்படி சமாளிக்கிறேன் என்பதை வெளிப்படுத்தி உள்ளார்.

இது தொடர்பாக SS Music யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “என் கணவரின் இறப்பிற்குப் பிறகு நான் ஒரு நேர்காணல் கொடுக்கிறேன். இன்னும் என் கணவர் அரவிந்த் உயிருடன் இல்லை என நான் நினைக்கவே இல்லை. அவர் உடம்பு மட்டும் தான் என்னுடன் இல்லை. ஆனால் அவரின் ஆன்மா என்னை சுற்றி மட்டுமே இருக்கிறது. 

என்னால் அதை உணர முடிந்தது. என்னை சுற்றியவர்களுக்கு நான் எப்படி இருக்கிறேன் என நன்கு தெரியும். அதனால் என்னுடைய மனநிலைமை பற்றி சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து அதை வெளிக்காட்ட விரும்பவில்லை.

முன்பு இருந்ததை விட அரவிந்த் மேல் இருக்கும் காதல் இப்போது அதிகமாகவே உள்ளது. நான் எங்கு சென்றாலும் அவர் என்னுடன் இருப்பதாகவே உணர்கிறேன். நான் எங்கு சென்றாலும் அரவிந்த் புகைப்படம் எடுத்து செல்வேன். அவன் என்னுடன் வருவது போன்றே இருக்கும். அவனுடன் நான் வாழ்ந்த நாட்கள் பத்தவே இல்லை. ஒரு வருடத்திற்குள் நாங்கள் நிறைய செய்து இருக்கிறோம். அது எல்லாம் நினைவாக இருக்கிறது.

அரவிந்தின் மரணத்தின் கடைசி நிகழ்வுகளை நிறைய பேர் ஆராய்ச்சி செய்தார்கள். அது ரொம்ப கடினமாக இருந்தது. அவரின் மரணத்துக்கு என்ன காரணம் என தெரிந்து என்ன நடக்க போகிறது. என்னுடைய மனநிலைமை மோசமாக இருந்தது. இருந்தாலும் அவன் இறந்து இரண்டாவது நாளே இது போன்று ஆராய்ச்சி செய்ய வேண்டாம் என வீடியோ பதிவிட்டேன்.

ஜிம்மில் ஒர்க் அவுட் செய்த போது அரவிந்த் இறந்து விட்டதாக வதந்தி பரப்பினார்கள். அதனால் என்ன கிடைக்கப் போகிறது.

அவரவர்கள் தங்களின் உடல்நலனை ஆரோக்கியமாக பார்த்துக் கொள்ளுங்கள். ஒரு நெகட்டிவ் விஷயங்களைப் பரப்பி, பணத்திற்காகப் பண்ண வேண்டாம். அதற்கு ஆறுதலாக என்னுடன் நின்றால் நன்றாக இருக்கும். நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன். பல சமயங்களில் இந்த விஷயம் எப்படி செய்வது என தெரியாமல் இருக்கும் போது அரவிந்திடம் கேட்பேன். நண்பர்கள், பெற்றோர்கள் யார் மூலமாக அவர் அதை எனக்கு சொல்லிவிடுவார்.

ரொம்ப ஸ்ட்ராங்காக மாற யோகா, பயணம் செய்வது எனக்கு மிகவும் உதவியது. எனக்கு அழுகை வரும். ஆனால் அதனை எல்லாம் வெளியே காட்ட விருப்பமில்லை. ஆனால் இந்த வலியிலிருந்து தப்பிக்க முடியாது. காலம் முழுக்க அவன் மேல் காதல் இருந்து கொண்டே இருக்கும். அவன் திரும்பி வந்தால் என்னை ஏன் வீட்டு சென்றாய் என்ற ஒரு கேள்வி மட்டும் தான் கேட்பேன் ” என்றார்.

நன்றி: SS Music

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.