தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Srividya Cousin Vijayalakshmi Latest Interview About Srividya Kamal Haasan Love

Srividya: கள்ள கபடம் இல்லாமல் காத்திருந்த காதல்;ஜெயில் ஜன்னலாக நின்று கட்டம் கட்டிய அம்மா!- கமல் ஸ்ரீவித்யா பிரிவு கதை!

Kalyani Pandiyan S HT Tamil
Jan 19, 2024 04:30 AM IST

வித்யா, அம்மாவிடம் நீ பேசு என்று என்னுடைய கணவரான சங்கரிடம் மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறார்.ஆனால் எந்த முயற்சியும் கை கொடுக்கவில்லை. அதன் பின்னர் ஸ்ரீவித்யாவும் அவரது அம்மாவும் அமெரிக்காவில் சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தார்கள்.

ஸ்ரீவித்யா
ஸ்ரீவித்யா

ட்ரெண்டிங் செய்திகள்

அவர் பேசும் போது, “கமல் சாரும் என்னுடைய கணவர் சங்கரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இந்த நிலையில் ஒருநாள்  கமல்ஹாசன் சங்கரிடம்  தனக்கு ஸ்ரீவித்யா மீது அபிப்பிராயம் இருப்பதாகச் சொல்லி இருக்கிறார்.

உடனே என்னுடைய கணவர்.. இதை நீ அவர்கள் வீட்டில் பேசு என்று சொல்லி இருக்கிறார். இதனையடுத்து கமல்ஹாசன் ஸ்ரீவித்யாவின் அம்மா  சென்று பேசினார். 

அப்போது ஸ்ரீவித்யாவின் அம்மா, இருவருமே இப்போதுதான் சினிமாவில் கேரியரை ஆரம்பித்து இருக்கிறீர்கள்.. அப்படி இருக்கும் போது… எப்படி என்று இழுத்தவர்,  கமல்ஹாசன் ஸ்ரீவித்யாவை விட ஒன்றரை வருடம் வயது குறைவானவர் என்பதையும் சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும் அதனை காரணங்களாக வைத்து அவர்களது காதலை நிராகரித்திருக்கிறார். இது ஸ்ரீவித்யாவிற்கு கலக்கத்தை உண்டாக்கியிருக்கிறது.. கமல்ஹாசனுக்கும்.. 

இருப்பினும் வித்யா அம்மாவிடம் நீ பேசு என்று என்னுடைய கணவரான சங்கரிடம் மீண்டும் மீண்டும் சொல்லி இருக்கிறார் ஆனால் எந்த முயற்சியும் கை கொடுக்கவில்லை. அதன் பின்னர் ஸ்ரீவித்யாவும் அவரது அம்மாவும் அமெரிக்காவில் சென்று நடன நிகழ்ச்சிகளை நடத்த ஆரம்பித்தார்கள். 

அதாவது அம்மா பாடுவார்; ஸ்ரீவித்யா ஆடுவார்; அந்த சமயத்தில் ஸ்ரீவித்யாவின் அழகை பார்த்து மயங்கிய சயின்டிஸ்ட் ஒருவர் எனக்கு எதுவுமே வேண்டாம், ஸ்ரீவித்யாவை மட்டும் எனக்கு கல்யாணம் செய்து கொடுக்கும்படி கேட்டார். ஆனால் அம்மா மறுத்துவிட்டார்; அதனைத் தொடர்ந்து பெரிய பெரிய இடங்களில் இருந்து ஸ்ரீ வித்யாவை கல்யாணம் செய்து கொள்ள வாய்ப்புகள் வந்தன. ஆனால் அதை எதையுமே ஸ்ரீவித்யா ஏற்றுக்கொள்ளவில்லை” என்று பேசினார். 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.