Srividya: முதுகெலும்பில் கேன்சர்.. வெளியே வந்த கண்கள்.. மஞ்சளாக மாறிய முகம்..ஸ்ரீவித்யா மடிந்த கதை!
காலப்போக்கில் அந்த கேன்சர் அவளுடைய முதுகெலும்பிற்கு பரவ ஆரம்பித்துவிட்டது. இதன் நிலையில்தான் திடீரென்று ஸ்ரீவித்யா அவரது இறுதி கால நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு பத்திரிக்கை செய்தி வந்தது.
ஸ்ரீவித்யாவின் இறப்பு தொடர்பான இறுதி நிமிடங்கள் குறித்து அவரது உறவினர் விஜயலட்சுமி கலாட்டா பிங்க் சேனலில் அண்மையில் பேசினார். அவர் பேசும் போது, “ 2003இல் அவருக்கு கேன்சர் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 2004 ஆம் ஆண்டு அவர் மார்பக புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை செய்திருக்கிறார்.இது எதையுமே ஸ்ரீ வித்யா எங்களிடம் சொல்ல வில்லை. சில வருடங்களுக்குப் பின்னர் தான் ஸ்ரீவித்யாவிற்கு கேன்சர் என்பது எங்களுக்கு தெரிந்தது.
காலப்போக்கில் அந்த கேன்சர் அவளுடைய முதுகெலும்பிற்கு பரவ ஆரம்பித்துவிட்டது. இதன் நிலையில்தான் திடீரென்று ஸ்ரீவித்யா அவரது இறுதி கால நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார் என்று ஒரு பத்திரிக்கை செய்தி வந்தது.
அதன் பின்னர்தான், அவருடைய அண்ணனும் என்னுடைய கணவருமான சங்கரை உடனே ஸ்ரீவித்யா இருக்கும் இடத்திற்கு அனுப்பி வைத்தேன். அங்கே சென்று அவர் பார்த்த போது ஸ்ரீவித்யாவிற்கு முடி எல்லாம் கொட்டி, முகமெல்லாம் மஞ்சு நிறமாக மாறி இருந்தார்.இதைப் பார்த்த சங்கர் பயங்கரமாக கத்தி இருக்கிறார்.ஆனால்,அஸ்ரீவித்யாவவோ ஏன் இங்கே வந்தாய் என்று கேட்டிருக்கிறார்.
தொடர்ந்து நீ அங்கே சென்று உன்னுடைய குடும்பத்தை பார்த்துக் கொள் என்று ஸ்ரீவித்யா சொல்ல, சங்கரோ இல்லை நான் செல்ல மாட்டேன் இங்கு தான் இருப்பேன் என்று அடம் பிடித்திருக்கிறார் ஸ்ரீவித்யா என்னை பார்ப்பதற்கெல்லாம் ஆட்கள் இருக்கிறார்கள் என்று சொல்லி சமாதானம் செய்திருக்கிறார். அன்றைய தினம் மதியம் கமல் ஸ்ரீவித்யாவை பார்த்தார்.
அதன் பின்னர் நாங்கள் அவரை சென்று பார்க்கும் பொழுது அவர் கண்ணெல்லாம் வெளியே வந்து, மூகமெல்லாம் மஞ்சள் படிந்து கையெல்லாம் காய்ந்து போய், சுயநினைவு இழந்து ஸ்ரீவித்யா இருந்தார். சில மணி நேரங்கள் தான் அவள் உயிரோடு இருக்கப் போகிறாள் தெரிந்து விட்டது. எங்கள் கண்முன்னே அவள் உயிர்பிரிந்தது.
அதன் பின்னர் அவளை வண்டியில் ஏற்றி இறுதி ஊர்வலம் நடத்தி, 14 குண்டுகள் முழங்க அவளுக்கு எங்கள் முறைப்படி இறுதிச் சடங்கை செய்தோம். அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கு வாத்தியார்கள் வரவில்லை. கேட்டால் அவள் பிராமணர் இல்லை என்று சொன்னார்கள்” என்று
டாபிக்ஸ்