45 Years of Neeya: பழிவாங்கும் பாம்பு! தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படம் - டிரெண்செட்டராக இருந்த நீயா? திரைப்படம்
பொதுவாவே பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்ற பழமொழி உண்டு. ஆனால் பாம்பு என்று வார்த்தையை கேட்டாலே கொலை நடுங்க வைத்த வைத்த படமாக நீயா? இருந்தது.

தமிழில் கல்ட் கிளாசிக் அந்தஸ்தை பெற்ற படங்களில் ஒன்றாக ஸ்ரீப்ரியா கதையின் நாயிகியாக நடித்த நீயா படம் உள்ளது. பழிவாங்கல் கதைதான் என்றாலும் பாம்பாக வந்து வில்லன்களை கொல்வது என பீதியை கிளப்பும் விதாக ஹாரர் பாணியில் படத்தை உருவாக்கியிருப்பார்கள்.
இது மாதிரியான கதையம்சம் தமிழ் சினிமாவுக்கு புதிதாக இருந்தது. சொல்லப்போனால் இதுவொரு ட்ரெண்ட் செட்டிங்காக இருந்ததோடு விலங்குகளை வைத்தும், விலங்குகள் பழவாங்கும் அமைசத்திலும் தமிழில் கதைகளை உருவாக்குவதற்கான விதைபோட்ட படமாகவும் நீயா அமைந்தது.
1976இல் பாலிவுட்டில் டாப் நடிகையாக இருந்த ரீனா ராய் பிரதான கதாரத்திரத்தில் நடிக்க சூப்பர் ஹிட்டான நாகின் படத்தின் ரீமேக்காக தான் நீயா உருவானது. அதுமட்டுமில்லாமல் தமிழில் அப்போது முன்னணி நடிகர்களாக இருந்து விஜய குமார், ஸ்ரீகாந்த், ரவிச்சந்திரன், ஜெய் கணேஷ், எம்என் நம்பியார், சுதிர் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள்.
கமல்ஹாசன் ஹீரோவாகவும், மஞ்சுளா, தீபா, லதா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள். அந்த வகையில் அதிக சினிமா நட்சத்திரங்களின் நடிப்பில் வெளியான படம் என்கிற அந்தஸ்தும் நீயா படத்துக்கு உண்டு. இத்தனை நடிகர்கள் இருந்தாலும், தனது அற்புத நடிப்பாற்றலால் ஒற்றை ஆளாக பாராட்டையும், புகழையும் பெற்று சென்றார் ஸ்ரீப்ரியா.
தனது காதலனை கொன்றவர்களை பாம்பு ரூபத்தில் வந்து நாயகி பழிவாங்குவது தான் படத்தின் ஒன்லைன். இதை விறுவிறுப்பும், திகலும் கூடிய திரைக்கதையுடன் உருவாக்கியிருப்பார்கள். படத்துக்கு கலைமணி திரைக்கதை எழுத, துரை இயக்கியிருப்பார்.
இந்த படத்தின் ஒரிஜினல் பதிப்பான நாகின் படத்தால் இம்ரஸ் ஆன ஸ்ரீப்ரியா, தனது தயாரிடம் கூறி படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை பெற்று மிகப் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் நீயா படத்தை உருவாக்கினர். புதுமையான கதைகளம், பல்வேறு ஸ்டார்களின் நடிப்பு, பாடல்கள் என ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நீயா, பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்து 100 நாள்களுக்கு மேல் ஓடியது.
நீயா படத்துக்கு சங்கர் கணேஷ் இசையமைக்க பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகின. நீயா என்ற படத்தின் பெயரை கேட்டாலே ஒரே ஜீவன் ஒன்றே என்ற கண்ணதாசன் எழுதிய பாடல் நினைவுக்கு வரும். இந்தியிலும் இதே ட்யூனில் அமைந்திருக்கும் இந்த பாடலால் வெகுவாக கவரப்பட்ட ஸ்ரீப்ரியா, தமிழிலும் அந்த ட்யூனை அப்படியே பயன்படுத்துமாறு கேட்டுக்கொண்டார்.
விமர்சக ரீதியாக பெரும் பாராட்டை பெற்ற இந்த படத்தின் இரண்டாம் பாகம், முதல் பாகத்தின் மைய கதையுடன் பொருந்தி 2019இல் வெளியானது. தமிழ் சினிமாவில் 70களில் வெளியான படங்களில் குறிப்பிடும்படியாக அமைந்திருக்கும் நீயா வெளியாகி இன்றுடன் 45 ஆண்டுகள் ஆகிறது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9

டாபிக்ஸ்