தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sridevi : 'Bless Me To Have Your Darshan Daily' Sridevi Memorial Day

Sridevi : 'உன் தரிசனம் தினசரி கிடைத்திட வரம் கொடும்மா' ஸ்ரீதேவி நினைவு தினம்

Pandeeswari Gurusamy HT Tamil
Feb 24, 2024 06:00 AM IST

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்கை வரலாறு தற்போது புத்தகமாக வர இருக்கிறது. இந்த புத்தகம் ‘ஸ்ரீதேவி- தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட்’ என்ற பெயரில் வரவிருக்கிறது. இந்தப்புத்தகத்தை தீரஜ் குமார் எழுதியிருக்கிறார்.

ஸ்ரீதேவி நினைவு நாள்
ஸ்ரீதேவி நினைவு நாள்

ட்ரெண்டிங் செய்திகள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் கலக்கியவர் ஸ்ரீதேவி. பெரும்பாம் ஆண்கள் கோலோச்சும் திரைத்துறையில் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் ஆண் கதாநாயகர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது. அதையெல்லாம் முறியடித்து தனது திறமை மற்றும் உழைப்பால் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்ற நடிகையாக வலம் வந்தவர் ஸ்ரீதேவி.

திரை வாழ்க்கை

ஸ்ரீதேவி 1963ம் ஆண்டு ஆகஸ்ட் 13ம் தேதி சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தவர். இவரது பெற்றோர் ஐயப்பன் – ராஜேஸ்வரி ஆவர். இவரது தந்தை ஒரு வழக்கறிஞர் ஆவார். ஸ்ரீதேவியின் இயற்பெயர் ஸ்ரீஅம்மா. சினிமாவிற்காக தனது பெயரை ஸ்ரீதேவி என மாற்றி கொண்டார்.

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, துணைவன் என்ற புராண கதையில் முருகன் வேடத்தில் நடித்து புகழ் பெற்றார். கந்தன் கருணை படத்தில் குழந்தை நட்சத்திரமாக 1967ம் ஆண்டு நடித்தார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாகவே தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என அறிமுகமானார். திருமாங்கல்யம் படத்தில் இவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுடன் இணைந்து நடித்தார்.

மூன்று முடிச்சு படத்தில் பாலச்சந்தர் இயக்கத்தில் இவர் கதாநாயகியாக அறிமுகமானார். முதலில் இவர் கதாநாயகியாக நடித்த காயத்திரி படம் வெளியானது. தொடர்ந்து கவிக்குயில், 16 வயதினிலே வெளியானது. 16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியின் மயிலு கதாபாத்திரம் மக்கள் மனதில் இன்றளவும் நீங்காத இடம் பிடித்துள்ளது என்றால் மிகையில்லை. தன் சமகாலத்தில் பிரபலமாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் உலகநாயகன் கமலுடன் சேர்ந்து அதிக எண்ணிக்கையிலான படங்களில் நடித்துள்ளார்.

தமிழில் முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார் ஸ்ரீதேவி. தமிழ் மட்டுமல்ல இந்தியில் 1979ம் ஆண்டு சொல்வா சாவான் படத்தில் அறிமுகமானார். அனைத்து மொழிகளிலும் கதாநாயகி பாத்திரத்தில் நடிக்க துவங்கி, தென்னிந்திய திரையுலகை கலக்கினார். தமிழகத்தில் இருந்து சென்று பாலிவுட்டை கலக்கிய ஸ்ரீதேவி, அனைத்து மொழிகளிலும் முன்னணி கதாநாயகர்களுடன் நடித்து ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.

1996ம் ஆண்டு ஸ்ரீதேவி பாலிவுட்ட திரைப்பட தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் அவரது தாயார் இறந்துவிட ஸ்ரீதேவி திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டிருந்தார். சிறிய இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையிலும், மீண்டும் திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார்.

ஸ்ரீதேவிக்கு ஜான்வி, குஷி என்ற இரு மகள்கள் உள்ளனர். அவர்கள் இருவருமே தற்போது பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்கள்.

சிஎன்என் ஐபிஎன் நடத்திய வாக்கெடுப்பில் 100 ஆண்டுகளில் சிறந்த நடிகைகளுள் ஒருவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேசிய விருது, பல்வேறு மாநில அரசு விருதுகள் என்று பல விருதுகளை பெற்றார். 

இவர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் திரைத்துறையில் கலக்கினார். காமெடி முதல் கனமான பாத்திரங்கள் வரை அனைத்திலும் கலக்கியவர். இவர் அமைதியான குணம் கொண்டவர். ஆனால் திரையில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்துபவர். இவருக்கு இந்திய அரசு நாட்டின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை 2013ம் ஆண்டு பெற்றார். ‘இங்கிலீஷ் விங்கிலிஷ்’ ‘ மாம்’ ஆகிய படங்களில் இறுதியாக நடித்தார்.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத வண்ணம் 2018ம் ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி துபாயில் ஓட்டலில் தங்கியிருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.

இந்த நிலையில் ஸ்ரீதேவியின் வாழ்கை வரலாறு தற்போது புத்தகமாக வர இருக்கிறது. இந்த புத்தகம் ‘ஸ்ரீதேவி- தி லைஃப் ஆஃப் எ லெஜண்ட்’ என்ற பெயரில் வரவிருக்கிறது. இந்தப்புத்தகத்தை தீரஜ் குமார் எழுதியிருக்கிறார்.

அவரது நினைவு நாளான இன்று ஸ்ரீதேவியின் வாழ்க்கை குறித்த தகவல்களை பகிர்ந்து இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் பகிர்ந்து கொள்கிறது.

IPL_Entry_Point

டாபிக்ஸ்