Actress Sukumari: பழம்பெரும் நடிகை சுகுமாரியின் நினைவு நாள் - பூவெல்லாம் உன் வாசம் செல்லாவின் பாட்டியை மறக்க முடியுமா?
Legendary actress Sukumari: பழம்பெரும் நடிகை சுகுமாரியின் நினைவுநாள் தொடர்பான சிறப்புக் கட்டுரை..

Legendary actress Sukumari: பழம்பெரும் நடிகை சுகுமாரி, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், சிங்களம், ஒடியா, ஆங்கிலம் ஆகியப் பல்வேறு இந்திய மொழிகளில் துணைக் கதாபாத்திரங்களில் நடித்து மறைந்தவர். இவரைப் பற்றி அறிந்துகொள்ளவும் நினைவுகூரவும் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
யார் இந்த நடிகை சுகுமாரி? அன்றைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் (தற்போது தமிழ்நாடு), நாகர்கோவிலில் வங்கி மேலாளர் மாதவன் நாயர், சத்ய பாமா தம்பதியினருக்கு, 1940ஆம் ஆண்டு அக்டோபர் 6ஆம் தேதி, மகளாகப் பிறந்தார். சுகுமாரி அம்மா பூஜப்புரா எல்.பி. பள்ளியில் இரண்டாம் வகுப்பு வரை படித்தார். அதன்பின், அவர்களது குடும்பம் சென்னைக்குப் புலம் பெயர்ந்தது.
சுகுமாரி அம்மாவுக்கு, ராஜகுமாரி, ஸ்ரீகுமாரி, ஜெயஸ்ரீ மற்றும் கிரிஜா ஆகிய நான்கு சகோதரிகளும், சங்கர் என்கிற ஒரு சகோதரரும் உடன்பிறந்தவர்கள் ஆவார். மேலும் சுகுமாரி, திருவாங்கூர் சகோதரிகள் எனப்படும் லலிதா, நடிகை பத்மினி, ராகிணி ஆகிய மூவரின் உறவினர் ஆவார்.