8 Years of Miruthan: ஜாம்பி வைரஸ் தாக்குதலும் அதில் இருந்து தப்ப முயலும் போராட்டமும் தான் மிருதன்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  8 Years Of Miruthan: ஜாம்பி வைரஸ் தாக்குதலும் அதில் இருந்து தப்ப முயலும் போராட்டமும் தான் மிருதன்!

8 Years of Miruthan: ஜாம்பி வைரஸ் தாக்குதலும் அதில் இருந்து தப்ப முயலும் போராட்டமும் தான் மிருதன்!

Marimuthu M HT Tamil
Feb 19, 2024 07:31 AM IST

மிருதன் திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆகிறது.

மிருதன்
மிருதன்

மிருதன் திரைப்படத்தின் கதை என்ன? :

ஊட்டியில் ஒரு ரசாயன ஆய்வகத்தில் இருந்து விஷ திரவம் கசிகிறது. அதை நாய் உட்கொண்டு ஜாம்பி நோய்ப் பாதிப்புக்குள்ளாகிறது. அது மனிதனைக் கடிக்கும்போது, அவர்களும் ஜாம்பி நோய்க்கு ஆளாகின்றனர். ஜாம்பி நோய்க்கு ஆளாகும்போது, ஒரு பேயைப்போல, ஒரு ரத்தம் பிதுங்கிய கொடூர மிருகம்போல முகம் மாறி, விலங்கு போல அமைப்பே மாறிவிடுகிறது.

இதனிடையே ஊட்டியில் இருக்கும் போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக், ரேணுகா என்ற பெண்ணைக் காதலிக்கிறார். மேலும், கார்த்திக் தனது தங்கை வித்யா மற்றும் நண்பர் சின்னமலையுடன் வசித்து வருகின்றனர். அப்போது போக்குவரத்தில் இருக்கும்போது அமைச்சர் குருமூர்த்தி கான்வாயில், கர்ப்பிணிப் பெண்ணை அனுமதித்து அவரது உயிரைக் காப்பாற்ற முயற்சிக்கிறார், கார்த்திக். இதனால் அமைச்சரின் கோபத்திற்கு ஆளாகி, அமைச்சர் அவரது தங்கையைக் கடத்துகிறார்.

அப்போது ஜாம்பி பரவுவதாக ஒரு தகவல் வருகிறது. மேலும் ஜாம்பி பரவியவர்களைக் கண்டவுடன் சுட உத்தரவு வருகிறது. அப்போது ஜாம்பிக்கு நீர் ஒவ்வாமை இருப்பதை அறிந்துகொள்கிறார், கார்த்திக். பின், பல்வேறு போராட்டங்களுக்குப் பின், வித்யாவை மீட்கிறார்.

ஒரு பக்கம் மருத்துவர்கள் குழு, அதற்கு மருந்து கண்டறியும் முயற்சியில் ரகசியமாக ஈடுபட்டுள்ளனர். அக்குழுவில் மருத்துவர் கமலுக்குப் பக்கபலமாக தரண், ரேணு, கார்த்திக், சின்னமலை ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் மருத்துவரின் குழுவைத் தாக்க ஜாம்பிஸ் கூட்டம் அலைமோதுகிறது. 

பின்னர் நவீன் என்பவரும் மருந்து கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். இதனிடையே மருத்துவருக்குப் பக்கபலமாக இருந்த தரண் என்பவர், ஜாம்பி தாக்குதலில் தெரியாமல் ஏற்பட்ட கீறலால் ஜாம்பியாகிறார். அவர் வித்யாவைத் தாக்குகிறார். ஆனால், வித்யாவுக்கு உடலில் தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி இருப்பதால் ஜாம்பியாக மாறவில்லை. அவரது ஆன்டிபாடிகளை வைத்து, ஜாம்பிக்கு மருந்து கண்டறிய முடியும் என்று மருத்துவர் கூறுகின்றனர். அவரை வைத்து ஆராய்ச்சியில் ஈடுபடுகின்றனர். 

அப்போது ஜாம்பிகள் பலரைத்தாக்கமுயலும்போது, ஒரு கட்டத்தில் மருத்துவக்குழுவில் இருப்பவர்களை கார்த்திக் காப்பாற்றுகிறார். ரேணுவைக் காப்பாற்ற முயற்சிக்கும்போது, கார்த்திக்கும் ஜாம்பியாகிறார். அப்போது கார்த்திக் மீதான தன் காதலை உணர்கிறார், ரேணு. பின், அவரை சுடச்சொல்கிறார், கார்த்தி. ஆனால், அரைகுறையுமாக சுடுகிறார், கார்த்தி.

இது இவ்வாறு இருக்க ஒரு பக்கம் மாற்று மருந்தைக் கண்டுபிடிக்க, தீவிரம் காட்டுகிறது, மருத்துவக் குழு. மறுபக்கம், ஒரு பேருந்தின்மேல் முழு ஜாம்பியாக மாறி நிற்கிறார், கார்த்திக். இரண்டாம் பாகத்திற்கான லீடுடன் படம் முடிகிறது.

இப்படத்தில் கார்த்திக்காக ஜெயம் ரவியும், ரேணு என்கிற ரேணுகாவாக லட்சுமி மேனனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வித்யாவாக அனிகாவும், தரணாக ஜீவா ரவியும் நடித்திருந்தனர். 

படத்திற்கான இசையை டி.இமான் செய்து இருந்தார். முன்னாள் காதலி, மிருதா மிருதா மிருதா ஆகியப் பாடல்கள் இப்படத்தில் இருந்து இன்றும் பலரால் கேட்கும் ரகம் ஆகும். படம் வெளியாகி 8 ஆண்டுகளைக் கடந்தாலும் விறுவிறுப்பான திரைக்கதையால் இப்படம் பலரையும் ஈர்க்கிறது.

 சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.