தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Special Article Related To The Completion Of 30 Years Of The Release Of The Movie Captain

30 Years of கேப்டன்: அந்தக் காலத்திலேயே உருவான பைலிங்குவல்.. வைரமுத்து வசனம்.. வழக்கமான ஆக்‌ஷன் கதை!

Marimuthu M HT Tamil
Feb 25, 2024 07:27 AM IST

கேப்டன் திரைப்படம் வெளியாகி 30 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

30 Years of கேப்டன்
30 Years of கேப்டன்

ட்ரெண்டிங் செய்திகள்

கேப்டன் படத்தின் கதை என்ன?: சென்னையில் நில அபகரிப்புக்குப் பெயர் பெற்ற தாதா கண்ணாயிரம். இவரது மகன்கள் விஜயா மற்றும் ஜெயா. ஒருநாள் அநாதை ஆசிரமத்துக்குண்டான நிலத்தை ராமசாமியிடம் இருந்து பிடுங்க விஜயா மற்றும் ஜெயா ஆகிய இருவரும் மிரட்டுகின்றனர். ஆனால், அவர் மறுக்கவே, கொலை செய்துவிடுகின்றனர். இதை கெளரி அவரது தம்பி, சிவாவிடம் தெரியப்படுத்துகிறார். சிவா பொறுத்தவரை, அவர் ராணுவத்தில் பணிபுரிந்தவர், விடுமுறை தரமறுத்ததால், ராணுவ முகாமில் இருந்து தப்பி வந்தவர், கோபக்காரர். சிவா உமா என்னும் பெண்ணை காதலித்து இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, அவர் விமான விபத்தில் மரணமடைந்தார். இறுதியாக, சிவா, தனது வழக்கறிஞர் லட்சுமி நாராயணன் மூலமாக, கண்ணாயிரத்துக்கு எதிராகப் புகார் அளிக்கிறார்.

லட்சுமி நாராயணனின் மகள் கெளரி. இந்த வழக்கில் இருக்கும் ஒரே சாட்சி அவள் தான். ஆனால், இயற்கையாகவே அவளுக்கு வாய்ப்பேசமுடியாது. இத்தகைய சூழ்நிலையில் இறுதியில் யார் வெற்றிபெற்றது என்பது தான் படத்தின் கதை. இப்படத்துக்குண்டான வசனத்தை கவிஞர் வைரமுத்து எழுதியிருந்தார். 

இப்படத்தில் கேப்டன் சிவா கேரக்டரில் சரத் குமாரும், உமாவாக நடிகை சுகன்யாவும், கெளரி கதாபாத்திரத்தில் நடிகை ரஞ்சிதாவும் நடித்து இருந்தனர். கண்ணாயிரம் என்னும் வில்லனாக ரகுவரனும், ராமசாமியாக சரத் பாபுவும் நடித்து இருந்தனர். ஜனகராஜ், லட்சுமி நாராயணனாக நடித்து இருந்தார். ரவுடி விஜயாவாக ராக்கியும், ஜெயாவாக தேவனும் நடித்து இருந்தனர். படத்துக்குண்டான இசையை சிற்பி வழங்கியிருந்தார். இப்படத்தில் இடம்பெற்ற ‘கண்ணத்திலே வை’ என்னும் பாடல், இன்றும் பலரால் ரசிக்கப்படும் பாடலாகும். இப்படம் தயாரிப்பாளருக்கு வெற்றிப்படமாகவே அமைந்தது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

IPL_Entry_Point

டாபிக்ஸ்