26 Years of Veera Thalattu: சொத்துக்கு ஆசைபட்டு தம்பியைக் கொல்லும் அண்ணன்.. சிதறும் குடும்பங்கள் இறுதியில் என்ன ஆனது?
26 Years of Veera Thalattu: வீரத்தாலாட்டு திரைப்படம் வெளியாகி 26 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

26 Years of Veera Thalattu: 1998ஆம் ஆண்டு, கஸ்தூரி ராஜா இயக்கத்தில் முரளி, வினிதா, குஷ்பூ, ராஜ்கிரண், ராதிகா, லட்சுமி ஆகியோர் நடித்து, ஏப்ரல் 10ஆம் தேதி ரிலீஸான திரைப்படம், வீரத்தாலாட்டு. இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார்.
வீரத்தாலாட்டு திரைப்படத்தின் கதை என்ன?
கிராமத்தில் வசிக்கும் ஆதரவற்ற இளைஞர் பாண்டியன். பாண்டியனை சிறுவயதில் இருந்து வளர்த்து வருகிறார், நாகலட்சுமி. இதற்கிடையே பாண்டியனை அவ்வூரைச் சேர்ந்த கிராமத்து பெண்மணி விரும்புகிறார். அவரது தந்தையாக சுந்தர்ராஜனும் அப்பெண்ணின் பாட்டியாக மனோரமாவும் நடித்துள்ளனர். இதற்கிடையே சம்பந்தம் பேசுகையில், அப்பெண்ணின் தாய், பாண்டியனுக்குத் தந்தை யார் எனக் கேள்வி கேட்கிறார். இதனால் ஆத்திரம் அடையும், பாண்டியன், தனது தாய் நாகலட்சுமியிடம் தனது தந்தை குறித்து கேட்கிறான். அப்போது நாகலட்சுமியின் வீட்டில், சிறுசிறுவேலைகள் செய்துகொண்டு தங்கி இருக்கும் ராதாரவி, அப்போது பாண்டியனின் உண்மையான தாய் பற்றியும், அவரது தந்தை பற்றியும் கூறுகின்றார்.
இதனையறிந்த பாண்டியன் சிறையில் சென்று தனது அம்மாவை பார்க்கின்றான். சிறைவாசம் முடித்து வெளியில் வந்தவுடன் ராதிகாவின் உண்மையான அண்ணன் ராதா ரவி எனத்தெரிகிறது.