தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Special Article Related To The Completion Of 13 Years Since The Release Of Pathinaaru Movie

13 Years of Pathinaaru Movie: நல்ல கதையம்சம்.. பலவீனமான திரைக்கதையால் திணறிய 'பதினாறு’

Marimuthu M HT Tamil
Jan 28, 2024 07:40 AM IST

பதினாறு திரைப்படம் வெளியாகி 13 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது தொடர்பான சிறப்புக் கட்டுரையினைக் காண்போம்.

பதினாறு திரைப்படம்
பதினாறு திரைப்படம்

ட்ரெண்டிங் செய்திகள்

பதினாறு திரைப்படத்தின் கதை என்ன? இப்படத்தில் சிவனும் இந்து கோபாலகிருஷ்ணனும் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். இந்த காதல் விஷயத்தை, இந்து தனது தந்தையிடம் சொல்ல, இந்துவின் தந்தை கோபாலகிருஷ்ணனும், அவரது தாயும் அவர்களது காதலை எதிர்க்கிறார்கள். மேலும், இந்துவின் தாய் ‘பதினாறு’ என்னும் தலைப்பிடப்பட்ட புத்தகத்தை, காதலிக்கும் இருவரும் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறார்.

தற்போது கதைக்குள் இன்னொரு கதை விரிகிறது. அதில் கோபியும் இளவரசியும் பள்ளிப் பருவத்தில் ஒருவரையொருவர் காதலிக்கின்றனர். கோபி, வசதி இல்லாத வீட்டுப்பையன். இளவரசி, செல்வந்தர் வீட்டுப் பெண். இறுதியாக இருதரப்பு வீட்டிலும் எதிர்ப்பு உருவாக, இருவரும் வீட்டைவிட்டு, ஓட முடிவு செய்கின்றனர். அப்போது, பெற்றோரால் கையும்களவுமாக பிடிபடுகின்றனர். அப்போது தனக்கு எந்தவொரு சொத்துகளும் வேண்டாம் என்றும் கூறும் இளவரசி, தனது காதலனிடம் உனது வருமானத்தில் ஒரு சேலை வாங்கித்தந்தால் இவ்வூரை விட்டுச் செல்லலாம் எனக் கூறுகிறார். அதன்பின், கோபி இளவரசியின் பேச்சைக்கேட்டு, சம்பாதிக்க பக்கத்து ஊருக்குக் கிளம்புகிறான். ஆனால், துரதிர்ஷ்டவசமாக, ஒரு விபத்தில் சிக்குகிறான். அவனை ஒரு லாரி டிரைவர் காப்பாற்றுகிறார். ஒரு சில மாதங்களுக்குப் பின், இளவரசியைப் பார்க்க கிராமத்துக்குப்போகிறார், கோபி. அப்போது, இளவரசிக்கு வேறு ஒருவருடன் திருமணம் முடிவு ஆனதை அறிந்து அவ்வூரை விட்டு வெளியேறுகிறான், கோபி. அதனோடு புத்தகம் முடிவடைகிறது. மேலும், அந்தப் புத்தகம், இந்துவின் தந்தையுடைய உண்மைக்கதை என்பதை, இந்துவின் தாயார் கூறுகிறார். இதனால் மனம்மாறும் இந்து, பெற்றோரின் பேச்சைக்கேட்டு காதலை கைவிட முடிவு எடுக்கிறாள்.

இந்நிலையில் சிவன், இளவரசியைத் தேடி கண்டுபிடிக்கிறார். அங்கு கோபியின் நினைவாக அநாதை இல்லம் நடத்தி வரும் இளவரசியிடம், கோபி என்னும் கோபாலகிருஷ்ணனை அழைத்துச் சென்று காட்டுகிறார், சிவன். மேலும், கடைசி நேரத்தில் கல்யாணம் செய்யாமல், கோபாலகிருஷ்ணனின் நினைவில் வாழ முடிவு எடுத்து, அவ்வாறு நடந்து வருவதை அறிந்த கோபாலகிருஷ்ணனுக்கு குற்றவுணர்ச்சி மேலோங்குகிறது. மேலும், குற்றவுணர்வில் சிவனுக்கும் தனது மகள் இந்துவுக்கும் திருமணத்தை நடத்தி வைக்க முயற்சிக்கிறார், கோபாலகிருஷ்ணன். இவ்வாறாக முடிவு அடைகிறது, இக்கதை!

நடித்தவர்கள் விவரம்: இப்படத்தில் சிவனாக, மிர்ச்சி சிவாவும், இந்து கோபாலகிருஷ்ணனாக மது ஷாலினியும் நடித்துள்ளனர். கோபாலகிருஷ்ணனாக, சின்னத்திரை பிரபலம் அபிஷேக சங்கரும், இந்துவின் தாயாக அமிர்தாவும் நடித்துள்ளனர். இளவரசியாக நடிகை கஸ்தூரி சிறப்புத்தோற்றத்தில் நடித்திருந்தார்.

நல்ல கதையம்சம் கொண்ட படமாக இருந்தாலும், பலவீனமான  திரைக்கதை மற்றும் வசனங்களால் இப்படம் தோல்வி அடைந்தது. இருப்பினும், படத்தை டிவியில் போடும்போது ரசிக்கலாம்.

இப்படத்தில் கேமரா மேனாக பணிபுரிந்த அருள்தாஸ், தற்போது நடிகராக வலம் வருகிறார். இப்படத்தில் மிர்ச்சி சிவாவின் நண்பனாக நடித்த தர்புகா சிவா, பிரபல இசையமைப்பாளராக மாறியுள்ளார். சினிமா தான் எத்தனை விசித்திரமானது. 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.