10 Years of Thegidi: புலன் விசாரணைக்குப் பின் இறக்கும் 3 நபர்கள்.. அடுத்த டாஸ்கில் காதலி.. என்ன ஆகிறது என்பதே கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  10 Years Of Thegidi: புலன் விசாரணைக்குப் பின் இறக்கும் 3 நபர்கள்.. அடுத்த டாஸ்கில் காதலி.. என்ன ஆகிறது என்பதே கதை!

10 Years of Thegidi: புலன் விசாரணைக்குப் பின் இறக்கும் 3 நபர்கள்.. அடுத்த டாஸ்கில் காதலி.. என்ன ஆகிறது என்பதே கதை!

Marimuthu M HT Tamil
Feb 28, 2024 07:37 AM IST

தெகிடி திரைப்படம் வெளியாகி 10ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

10 Years of தெகிடி
10 Years of தெகிடி

தெகிடி படத்தின் கதை என்ன? கிரிமினாலஜி படித்த மாணவர் அசோக் செல்வன். ஒரு துப்பறியும் நிறுவனத்தில் பணிக்கு சேர்கிறார். வெற்றி தனது நெருங்கிய நண்பர் நம்பியுடன் தங்குகிறார்.

வெற்றிக்கு 3 பேரை உளவுபார்த்து, அவர் குறித்த தகவல்களை நிறுவனத்தில் சொல்லும் பணி இருந்தது. அதை செய்துமுடித்தபின், மதுஸ்ரீ என்னும் பெண் குறித்த தகவல்களைச் சேகரித்து தருமாறு கூறுகிறது. இதற்கிடையே மதுஸ்ரீ என்னும் பெண்ணைப் பார்த்ததும் காதலிக்கத்தொடங்குகிறார். பின் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. வெற்றி சேகரித்து கொடுத்த நபர்களில் மூவரும் அடுத்தடுத்து மர்மமாக கொல்லப்படுகின்றனர். இதனால் அதிர்ச்சிக்குள்ளாகிறார். இந்நிலையில் மதுஸ்ரீ-யின் தகவல்களைச் சேகரித்துத் தரும்படி கேட்கிறது, பணிசெய்யும் நிறுவனம். இதனால் அதிர்ச்சியடையும் வெற்றி, அவளை அவருக்குத் தெரியாமல் காப்பாற்றப்போராடுகிறான்.

வெற்றி நடந்ததை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரகுராமிடம் சொல்கிறார். அதன்பின், ரகுராமுக்கும் வெற்றிக்கும் அப்படி ஒரு துப்பறியும் நிறுவனம் இல்லை என்பது புலனாகிறது. இதனால் தான் வேலை செய்த முதலாளிகள் மீது வெற்றிக்கு சந்தேகம் வருகிறது. அதன்பின் முதலாளிகளாக இருந்து பணி கொடுத்த சைலேஷ் மற்றும் சடகோபனை கண்காணிக்கின்றார். 

அதில் சடகோபன், ஆயுள் காப்பீட்டு நிறுவன மேலாளர் என்றும் ஆள் ஆதரவு இல்லாத நபரின் தகவல்களைத் தருவதை வைத்து, சைலேஷ் அவரைக் கொல்வதும், அதன்மூலம் கிடைக்கும் பணத்தை இருவரும் பங்குபோட்டுக்கொள்வதோடு, கோவர்தன் என்னும் வெற்றியின் பேராசிரியரிடமும் ஒரு பகுதியைக் கொடுக்கின்றனர்.

பின்னர் தான் வெற்றிக்குப் புரிகிறது தனது புலனாய்வுத்திறனை, தமது பேராசிரியர் கோவர்தன் தவறாகப் பயன்படுத்துபவர்களிடம் சொல்லி வேலை வாங்கி கொடுத்ததும், அந்த கும்பலில் அவரே ஒரு குற்றவாளி ஆக இருப்பதும்.

இறுதியில் பேராசியர் கோவர்தன், வெற்றியிடம் மன்னிப்புக்கேட்டுவிட்டு தற்கொலை செய்துகொள்கிறார். இந்த கண்டுபிடிக்கும் டாஸ்கில் சைலேஷ் குமார் கொல்லப்படுகிறார். இறுதியில் ரகுராம் யார், இந்த கும்பலுக்கு மூலமாக இருக்கும் இன்னொரு நபர் யார், வெற்றி மதுஸ்ரீயுடன் ஜோடி சேர்கிறாரா என்னும் விடைகொடுத்து முடிந்தால், தெகிடி.

இப்படத்தில் வெற்றியாக அசோக் செல்வனும், மதுஸ்ரீயாக ஜனனியும் நடித்துள்ளனர். சைலேஷ் வேடத்தில் ஜெயக்குமாரும், சடகோபனாக பிரதீப் கே.விஜயனும், நடித்துள்ளனர். கோவர்த்தனாக ராஜன் ஐயரும் இன்ஸ்பெக்டர் ரகுராமனாக ஜெயபிரகாஷும் நடித்துள்ளனர். வெற்றியின் நண்பன் நம்பியாக காளிவெங்கட் நடித்திருந்தார்.

இசை தந்த பங்களிப்பு: விண்மீன் விதையில், யார் எழுதியதோ ஆகியப் பாடல்கள் இன்றும் பலரால் கேட்கப்படும் பாடல்கள். நிவாஸ் கே. பிரசன்னா இந்த இரு பாடல்களில் உச்சம் தொட்டதோடு புலனாய்வுப் படத்துக்குண்டான பின்னணி இசையிலும் பட்டையைக் கிளப்பியிருந்தார். இப்படத்தின் வெற்றிக்கு வழிவகுத்த 4 பாடல்களை கவிஞர் கபிலன் எழுதியிருந்தார்.

படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகள் ஆனாலும், எப்போது டிவியில் போட்டாலும் சலிக்காமல் நகரும் படம், தெகிடி. இயக்குநர் ரமேஷூக்கு வாழ்த்துகள். 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9    

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.