8 Years of Manithan:கண்டிக்கும் காதலி.. மனசாட்சிக்குக் கட்டுப்படும் வழக்கறிஞர்.. 'மனிதனை’ கொண்டுசேர்த்த அவள் குரல் பாடல்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  8 Years Of Manithan:கண்டிக்கும் காதலி.. மனசாட்சிக்குக் கட்டுப்படும் வழக்கறிஞர்.. 'மனிதனை’ கொண்டுசேர்த்த அவள் குரல் பாடல்

8 Years of Manithan:கண்டிக்கும் காதலி.. மனசாட்சிக்குக் கட்டுப்படும் வழக்கறிஞர்.. 'மனிதனை’ கொண்டுசேர்த்த அவள் குரல் பாடல்

Marimuthu M HT Tamil
Apr 29, 2024 09:02 AM IST

8 Years of Manithan: உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மனிதன்’ திரைப்படம் வெளியாகி 8 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

8 Years of Manithan:கண்டிக்கும் காதலி.. மனசாட்சிக்குக் கட்டுப்படும் வழக்கறிஞர்.. 'மனிதனை’ கொண்டுசேர்த்த அவள் குரல் பாடல்
8 Years of Manithan:கண்டிக்கும் காதலி.. மனசாட்சிக்குக் கட்டுப்படும் வழக்கறிஞர்.. 'மனிதனை’ கொண்டுசேர்த்த அவள் குரல் பாடல்

விரைவாகப் பணம் மற்றும் புகழைச் சம்பாதிப்பதற்காக, போராடும் வழக்கறிஞர் ஒருவர் லஞ்சம் வாங்கி, ஒரு வழக்கில் சாட்சியாக நடிக்கும் ஒருவருடன் கைகோர்க்கிறார். இருப்பினும், அவரது மனசாட்சி அவரை நீதிக்காக போராட கட்டாயப்படுத்துகிறது. இதுதான் படத்தின் ஒன்லைன்.

மனிதன் படத்தின் கதை என்ன? பெரும் பணக்காரரின் மகனான ராகுல் திவான், தனது டொயோட்டோ லேண்ட் குருசெர் ப்ரடோ காரில், நன்கு குடித்துவிட்டு ரேஸ் விடுகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக இரவில் சாலையின் ஓரத்தில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து ஆகிறது.

அடுத்த காட்சியில் ஒரு சிறுநகரத்தில் வழக்கறிஞராக இருக்கும் சக்திவேல் என்ற சக்தி, ஒரு பொதுநல வழக்கில் தோற்கிறார். பின், விரக்தியாகும் சக்தி,சென்னைக்கு செல்ல முடிவு எடுக்கிறார்.

அப்போது சென்னை செசன்ஸ் நீதிமன்றத்தில், பிரபலமான கிரிமினல் வழக்கறிஞர் ஆதி சேஷன், குடித்துவிட்டு காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய ராகுல் திவானுக்கு ஆதரவாக வாதாடுவதை அறிகிறார். இருந்தாலும், ஆதிசேஷனுக்கு, ராகுல் திவான் அளிக்கும் வழக்கறிஞர் ஃபீஸில் உடன்பாடு இல்லை.

மறுபுறம் இவ்வழக்கில் ராகுல் திவானின் விடுதலைக்கு எதிராக, பணம் மற்றும் புகழுக்கு ஆசைப்பட்டு, பொதுநல மனுவைத் தாக்கல் செய்கிறார், சக்தி. பின் நீதிபதி தனபால் முன்னிலையில், விபத்தின்போது அதனை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் விஜய் நாயரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சாட்சி சொல்ல வைக்கிறார். இதனால் ராகுல் திவான் நீதிமன்றத்தில் ஆஜராகக் கோரி, சம்மன் அனுப்பப்பட்டது.

ஆகையால், ஒரு நாள் இரவில் சக்தி பிரபலமாகின்றார். மூர்த்தி என்பவர் தனது உணவகத்தில், சக்திக்கு ஒரு அறை ஒதுக்குகின்றார். இப்படியிருக்க கதையில் ஒரு டிவிஸ்ட் நடக்கிறது.இதில் சாட்சி என்றுகூறப்படும் விஜய் நாயர், தான் ஆதிசேஷனின் ஆள் என்றும், அவருக்கு ராகுல் தரும் ஊதியம் போதாததால், அவர் தன் மூலம் அதைப் பெற முயற்சிப்பதாகவும் கூறுகிறார், விஜய் நாயர். 

இவ்வாறு செய்ய தனக்கு வழங்கப்பட்ட தொகையில் ஒரு பகுதியை, வழக்கறிஞர் சக்தியிடம் தருகின்றார். ஆரம்பத்தில் அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொள்கிறார், சக்திவேல். உணவகத்தில் அறை தந்த நபர் மூர்த்திக்கு இவ்வுண்மை தெரிந்து, சக்தியை கன்னத்தில் அறைகிறார். மேலும், சக்தி, தன் காதலியிடமும் அவப்பெயரைச் சம்பாதிக்கிறார். இதனால் மனம்மாறும் சக்தி, அந்தப் பணத்தை விஜய் நாயரிடம் கொடுத்து ஆதி சேஷனிடம் கொடுக்குமாறு கூறுகிறார். மேலும், தான் இந்த வழக்கை வென்றுகாட்டுவதாகவும் சவால் விடுகின்றார்.

சக்தி, தனது மாமா வழக்கறிஞர் சூர்யாவின் உதவியோடு, விபத்தை ஏற்படுத்திய கார் குறித்த விசுவல்களையும், அந்த விபத்தை ஏற்படுத்தியது ராகுல் திவான் தான் எனவும் நீதிபதி தனபாலிடம் முறையிடுகின்றார். இதனால் சக்தி, ஆதிசேஷனின் உதவியாளர்களால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படுகிறார். இதனை அறிந்த நீதிபதி சக்திக்கு காவல்துறை மெய்க்காவலர்களை நியமிக்க உத்தரவு இடுகிறார். அப்போது சக்தி தனது காதலியான பிரியா மூலம் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரின் உறவினரான முத்துப்பாண்டி குறித்து அறிந்து, அவரிடம் ஆதாரங்களைப் பெற முயற்சிக்கின்றனர். ஆனால், அது முடியவில்லை. ஒரு கட்டத்தில் பிரியாவை சிலர் லாரி ஏற்றி கொல்ல முயற்சித்ததில் அவர் மருத்துவமனையில் காயங்களோடு இருக்கிறார். அப்போது அங்கு வரும் முத்துப்பாண்டி, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் வந்தவாசியில் இருப்பதாக கூறுகின்றார். இதனைத்தொடர்ந்து அவ்விடம் செல்லும் சக்தி மற்றும் பத்திரிகையாளர் ஜெனிஃபர் விசாரணையைத் தொடங்குகின்றனர். இதனால் தனக்கு சிக்கல் வரும் நினைத்த இன்ஸ்பெக்டர் செல்வம், பாதிக்கப்பட்டவரை கடத்தி வைத்துக்கொள்கிறார்.

மறுநாள், சக்தி, உண்மையான சாலைவிபத்தில் பாதிக்கப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகிறார். மேலும் கமலக்கண்ணன், தனது குடும்பத்தினர் மீது வாகனங்களை ஏற்றியது ராகுல் திவான் தான் என சாட்சி சொல்கிறார்.

இறுதியில் இரண்டு தரப்பு வாதங்களின் முடிவில், சாலை விபத்தை ஏற்படுத்தியது ராகுல் திவான் தான் என உறுதியாகிறது. மேலும், சாட்சிகளை மறைக்க முயன்றதாக, இன்ஸ்பெக்டர் செல்வம் மீது குற்றவியல் விசாரணையைத் தொடங்குமாறு கூறுகிறார்,நீதிபதி தனபால். மேலும் அவரை பணியில் இருந்து பணியிடை நீக்கம் செய்கிறார். மற்றொருபுறம், ராகுலுக்கு 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை கிடைக்கிறது. பிரபல வழக்கறிஞரான ஆதிசேஷன் முதன்முறையாக வழக்கில் தோற்கிறார்.

இப்படத்தில் சக்திவேலாக உதயநிதி ஸ்டாலினும், பிரியா தர்மலிங்கமாக ஹன்சிகா மோத்வானியும்,பத்திரிகையாளர் ஜெனிஃபராக ஜஸ்வர்யா ராஜேஷூம் நடித்துள்ளனர். மேலும் ஆதிசேஷனாக பிரகாஷ் ராஜூம், சூர்யாவாக விவேக்கும், மூர்த்தியாக சங்கிலி முருகனும், விஜய் நாயராக கிருஷ்ண குமாரும் நடித்துள்ளனர். 

ராகுல் திவானாக சூரஜூம், முத்துப்பாண்டியாக சக்திவேலும், கமலக்கண்ணனாக ராஜரிஷியும் நடித்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் ஐந்து பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் பிரதீப் குமார் மற்றும் பிரியா ஹேமேஷ் சேர்ந்து பாடிய ‘அவள் குரல் உதித்திடும்’ என்னும் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்து,படத்திற்கு நல்ல மைலேஜாக இருந்தது.

உதயநிதி ஸ்டாலினின் நடிப்பிலேயே ரசிக்கும்படியான ஒரு படமாக இருந்தது, மனிதன். இப்படம் வெளியாகி 8 ஆண்டுகள் ஆனாலும் தற்போது பார்த்தாலும் செம ஃபிரெஷ்ஷாகவே இருக்கிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.