தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Special Article Related To The 10th Anniversary Of The Release Of The Movie Cuckoo

10 Years Of Cuckoo: பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளின் பேரன்புமிக்க காதல் தான் ‘குக்கூ’!

Marimuthu M HT Tamil
Mar 21, 2024 12:20 PM IST

10 Years Of Cuckoo:குக்கூ திரைப்படம் வெளியாகி இன்றுடன் 10 ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.

குக்கூ
குக்கூ

ட்ரெண்டிங் செய்திகள்

இப்படத்தை ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்து இருந்தது. இசையினை சந்தோஷ் நாராயணனும், ஒளிப்பதிவினை பி.கே.வர்மாவும் செய்திருந்தனர். 

குக்கூ படத்தின் கதை என்ன?:

கதையின் நாயகன் தமிழ், ஒரு இசைக்குழுவில் பாடும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. திருமண நிகழ்வு ஒன்றில் பாடல் பாடச் சென்ற தமிழ், ஆசிரியையாக முயன்றுகொண்டிருக்கும் பார்வையற்ற மாற்றுத்திறனாளி சுதந்திரக் கொடியினை சந்திக்கின்றார். அப்போது பரிசு கொடுக்க காத்திருக்கும் சுதந்திரக்கொடியை கலாய்த்துவிட்டுச் செல்கிறார், தமிழ். மறுநாள் மின்சார ரயிலில் செல்லும் சுதந்திரக்கொடிக்கு ரயில்வே ஸ்டேஷனில் இறங்க தவறாக வழிகாட்டுகின்றனர், தமிழ் மற்றும் அவரது நண்பன். இதனால், முதல் நாள் பயிற்சி வகுப்பு, சுதந்திரக்கொடிக்கு தாமதம் ஆகிறது. இந்நிலையில் அடுத்த நாள் மின்சார நாளில் பயணிக்கும்போது, சுதந்திரக்கொடியை தவறான ஸ்டேஷனில் இறக்கிவிட்டதைப் பெருமையாகப் பேசுகிறார், தமிழ். அப்போது அந்தப் பெட்டியில் நின்று இருக்கும் சுதந்திரக் கொடிக்கு இது பற்றி கேட்கவும், பார்வையற்ற மாற்றுத்திறனாளியினர் பயன்படுத்தும் ஸ்டிக்கினால் கதையின் நாயகன் தமிழை அடிக்கிறார். தான் ஸ்டிக்கினால் தமிழை அடித்தது தவறு என்பதை உணர்ந்த சுதந்திரக் கொடி, அடுத்தமுறை தமிழை சந்திக்கும்போது மன்னிப்புக் கேட்கிறார். அதன்பின் இருவரும் நண்பர்களாகிவிடுகின்றனர். அப்போது, தமிழ் ஒரு தலையாக, சுதந்திரக் கொடியைக் காதலிக்கத் தொடங்குகிறார். தன் காதலை ஒரு நாள் கவிதையாக எழுதி, சி.டி.யில் அதைப் பதிந்து, சுதந்திரக்கொடியின் பையில் வைத்து விடுகிறார்.

அதன்பின் சுதந்திரக்கொடி, பார்வையுடய ஒருவரை திருமணம் செய்துகொள்ள ஆசைப்படுவதை அறிந்துகொள்கிறான், தமிழ். ஆனால், திடீர் திருப்பமாக, சுதந்திரக்கொடி தான் ஒரு தலையாக காதலிக்கும் வினோத், தன்னுடைய வருங்காலத் துணையை சுதந்திரக்கொடியிடம் அறிமுகப்படுத்துகிறார். இதனால் ஏமாற்றமடையும் சுதந்திரக்கொடி வருத்தப்படுகிறார். அதன்பின், வீட்டில், தன் பேக்கில் இருக்கும் சி.டி.யை ஒலிபரப்ப முயல்கையில், தமிழின் குரல் பதிவு செய்த சி.டி.யை கேட்கிறார், சுதந்திரக்கொடி. ஆச்சரியப்படுகிறாள். அதன்பின்னர், தன் மறைந்த தந்தையின் குரல் இறுதியாக இருக்கும் கடிகாரத்தினைத் தவறவிடுகிறாள், சுதந்திரக்கொடி. 

அதனையறிந்த கதையின் நாயகன் தமிழ், அதை எப்படியாவது கண்டுபிடித்துக்கொடுக்க முயற்சிக்கிறான். அதை அறிந்த சுதந்திரக்கொடி, தன் மீது தமிழ் வைத்திருக்கும் காதலின் ஆழத்தைப் புரிந்துகொள்கிறார். பின் இருவரும் காதலிக்கத் தொடங்குகின்றனர். இதில் ஒரு டிவிஸ்ட்டாக சுதந்திரக்கொடியின் பேராசை பிடித்த மூத்த சகோதரர், அவளை வேறு ஒருவருக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார். இதில் தமிழும் சுதந்திரக்கொடியும் வீட்டைவிட்டு வெளியேற முயற்சிக்கின்றனர். இதற்கிடையே விதி விளையாடி ஆளுக்கொரு திசையில் பிரிகின்றனர்.  

தமிழுக்கு ஒரு விபத்து ஏற்படுகிறது. பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளான இருவரும் பல்வேறு புறச்சூழல்களைச் சந்திக்கமுடியாமல் தவிக்கின்றனர். சுதந்திரக்கொடி மும்பை போய் விடுகிறார். அப்போது, ஒரு நிருபரின் உதவியுடன் தமிழுக்கு, சுதந்திரக்கொடி மும்பையில் இருப்பதை அறிகிறான். அவனும் சுதந்திரக்கொடியை நோக்கி பயணப்படுகிறான். இயற்கையின் பல்வேறு சூழல்களுக்கு மத்தியில் தமிழும் சுதந்திரக்கொடியும் ஒன்றுசேருவதுதான் உருக்கமான கிளைமேக்ஸ்.

குக்கூ படத்தின் கதை, உண்மையில் வாழ்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளான தமிழ் மற்றும் சுதந்திரக்கொடியின் உடையது. 

இப்படத்தில் இடம்பெற்ற மனசுல சூற காத்தே, பொட்ட புள்ள தொட்டதுமே, ஆகாசத்த நான் பாக்குறேன், கல்யாணமாம் கல்யாணமாம் காதலி பொண்ணுக்கு கல்யாணம், கோடையில மழைபோல ஐந்து பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தன. 

குக்கூ படத்தில் தமிழ் என்னும் கதாபாத்திரத்தில் அட்டகத்தி தினேஷ் நடித்துள்ளார். சுதந்திரக்கொடி கதாபாத்திரத்தில் மாளவிகா நாயர் நடித்துள்ளார். ஆடுகளம் முருகதாஸ், தமிழின் நண்பன் கவாஸாக நடித்துள்ளார்.

ஐந்து கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இப்படம், சுமார் 25 கோடி ரூபாய் வரை வசூலித்து ஹிட்டடித்தது. படம்வெளியாகி 10 ஆண்டுகள் ஆனாலும், பார்வையற்றத் திறனாளிகளின் வலியை காமெடியுடன் பார்த்து ரசிக்கும் வகையில் படம் உள்ளது. 

IPL_Entry_Point

டாபிக்ஸ்