தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Rajiv Menon: ஒளிப்பதிவு, இயக்கத்தில் தனித்துவமானவர்; கவுதம் மேனனுக்கு தொழில் சொல்லி தந்த ராஜீவ் மேனனின் பிறந்தநாள்

HBD Rajiv Menon: ஒளிப்பதிவு, இயக்கத்தில் தனித்துவமானவர்; கவுதம் மேனனுக்கு தொழில் சொல்லி தந்த ராஜீவ் மேனனின் பிறந்தநாள்

Marimuthu M HT Tamil
Apr 20, 2024 10:20 AM IST

HBD Rajiv Menon:இயக்குநர் ராஜீவ் மேனன் இன்று தனது 61ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரைப் பற்றிய சிறப்புக் கட்டுரை..

ராஜீவ் மேனன் பிறந்தநாள் தொடர்புடைய சிறப்புக் கட்டுரை
ராஜீவ் மேனன் பிறந்தநாள் தொடர்புடைய சிறப்புக் கட்டுரை

ட்ரெண்டிங் செய்திகள்

யார் இந்த ராஜீவ் மேனன்?: ராஜீவ் மேனன் ஏப்ரல் 20, 1963ஆம் ஆண்டு கேரள மாநிலத்தின் கொச்சி நகரில் பிறந்தவர். இவரது தந்தை இந்திய கடற்படை அலுவலராக இருந்ததால், சிறுவயதிலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளில் வளரக்கூடிய சூழல் இவருக்குக் கிடைத்தது. குறிப்பாக, ராஜீவ் மேனனின் குடும்பம், இவரது சிறுவயதில் விசாகப்பட்டினத்திற்கு புலம்பெயர்ந்தபோது, சாஹிப் பீபி அவுர் குலாம்(1962), செம்மீன்(1965), ஆகியப் படங்களைப் பார்த்து ஈர்க்கப்பட்டார். அதன்பின், தனது 15 வயதில் சென்னைக்கு குடிபெயர்ந்தது, ராஜீவ் மேனனின் குடும்பம். அப்போது அவரது அண்டைவீட்டுக்காரரும் தி இந்துவின் புகைப்பட பத்திரிகையாளருமான தேசிகன், ஒரு கேமராவை, ராஜீவ் மேனனுக்குப் பரிசளித்தார். அது அவரது வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. அதன்பின், புகைப்படம் எடுப்பதில் ஆர்வமான ராஜீவ் மேனன், மெட்ராஸ் ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் பல்வேறு முயற்சிகளுக்குப் பின் சேர்ந்து படித்தார்.

அதன்பின் ஒரு ஸ்டில் போட்டோகிராஃபராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ராஜீவ் மேனன், ஃபேஷன் ஷூட்களிலும் அதன்பின், விளம்பரப் படங்களை இயக்கும் பணியையும் செய்தார். 1980களின் இறுதிகட்ட பகுதியில் ராஜீவ் மேனன் நிலக்கடலை எண்ணெய்க்கான விளம்பரம், ஏசியன் பெயின்ட்ஸ் போன்றவற்றின் விளம்பரங்களை இயக்கிய ராஜீவ் மேனனுக்கு, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து கொடுத்திருந்தார். இது பரவலாக கவனிக்கப்பட்டது. 

திருப்புமுனை - சினிமாவுக்குள் என்ட்ரி:

ராஜீவ் மேனன், கிரீஷ் கர்னாட் மற்றும் ஷியாம் பெனகல் ஆகிய திரைப்பட இயக்குநர்களின் ஆவணப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து கொடுத்தார். இதன்மூலம் ஜோகுமாரசுவாமி என்னும் கன்னடத் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யும் வாய்ப்பினைப் பெற்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அந்தப் படத்தின் ஹீரோ விபத்தில் இறந்ததால், அந்தப் படம் நிறுத்தப்பட்டது. பின், அக்னி புத்ரியம் படத்திலும் ராஜீவ் மேனன் ஒளிப்பதிவாளர் என அறிவிப்பு வந்து, பின் ரத்தானது. பின்னர் 1991ஆம் ஆண்டு நாகார்ஜூனா நடித்த சைதன்யா திரைப்படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகம் ஆனார், ராஜீவ் மேனன். அதன்பின், செலுவி என்னும் கன்னடப் படத்தில் பணிபுரிந்த ராஜீவ் மேனன், 1995ஆம் ஆண்டு ‘பம்பாய்’ திரைப்படத்தின் ஒளிப்பதிவாளராக, தமிழில் அறிமுகம் ஆனார். இப்படத்தின்மூலம் இயக்குநர் மணிரத்னத்தின் நெருங்கிய நண்பர் ஆனார், ராஜீவ் மேனன். அதனைத்தொடர்ந்து 1997ஆம் ஆண்டு, ஏ.வி.எம் புரொடக்‌ஷன்ஸ் தனது 50ஆவது ஆண்டினை கொண்டாடும் விதமாக தனது தயாரிப்பு நிறுவனத்தின் கீழ், எடுக்க முடிவு செய்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானை முதலில் கமிட் செய்தது. அதன்பின், அவரின் பரிந்துரையின் கீழ், மின்சார கனவு படத்தை இயக்கும் வாய்ப்பினைப் பெற்றார், ராஜீவ் மேனன். அப்படம் நகரங்களில் வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பின், ரூ.4 கோடி பட்ஜெட்டில் ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’திரைப்படத்தை இயக்கிய ராஜீவ் மேனன், இம்முறை கிராமப்பகுதிகளிலும் ஓடவைக்கவேண்டும் என்னும் முனைப்பில் சில கிராம போர்ஷன்களையும் சேர்த்தார். படம் நல்லபெயரையும் வசூலையும் பெற்றது.

சினிமா போராட்டங்கள்: அதன்பின், கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளேவின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதிய கதை; அதன்பின், இந்தி படம் ஒன்று; அதன்பின், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட படங்களை இயக்க முயற்சித்த ராஜீவ் மேனனின் முயற்சி, நடக்காமல் போனது. பின், மைண்ட்ஸ்கிரீன் ஃபிலிம் இன்ஸ்டியூட் என்னும் பயிற்சி நிறுவனத்தைத்தொடங்கி, அதில் ஆசிரியராகவும் பின் தனது பழைய பணியான விளம்பரப் படங்களையும் இயக்குதலையும் செய்துகொண்டிருந்தார், ராஜீவ் மேனன். பின், மணிரத்னத்தின் குரு(2007), கடல் (2013) ஆகியப் படங்களில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். பின், சமீபத்தில் சர்வம் தாளமயம் என்னும் படத்தை ஜி.வி.பிரகாஷ் குமாரை வைத்து,இயக்கினார், ராஜீவ் மேனன். இப்படம் சராசரி வெற்றியைப்பெற்றது.

பின் புத்தம் புது காலை என்னும் ஆந்தாலஜி படத்தில், ஒரு போர்ஷனை இயக்கியிருந்தார். மேலும் சமீபத்தில் வெளியான விடுதலை பகுதி 1 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், ராஜீவ் மேனன்.

மேலும் இவரது உதவி இயக்குநராகப் பணிபுரிந்தவர் தான், கவுதம் மேனன் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி ஒளிப்பதிவாளர், இயக்குநர், விளம்பரப்பட இயக்குநர் என்னும் பல்வேறு பணிகளை செய்யும் திறன் படைத்த ராஜீவ் மேனன், இன்று தனது 61ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அவரை வாழ்த்துவதில் பெருமிதம்கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

IPL_Entry_Point

டாபிக்ஸ்