தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Director Panju: தமிழ் சினிமாவின் புரட்சிகர இரட்டை இயக்குநர்களில் ஒருவரான பஞ்சுவின் பிறந்த நாள் இன்று!

Director Panju: தமிழ் சினிமாவின் புரட்சிகர இரட்டை இயக்குநர்களில் ஒருவரான பஞ்சுவின் பிறந்த நாள் இன்று!

Marimuthu M HT Tamil
Jan 24, 2024 05:32 AM IST

இரட்டை இயக்குநர்கள் என அழைக்கப்படும் கிருஷ்ணன் -பஞ்சு கூட்டணியில், இயக்குநர் பஞ்சுவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இயக்குநர் பஞ்சுவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது
இயக்குநர் பஞ்சுவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது

ட்ரெண்டிங் செய்திகள்

யார் இந்த பஞ்சு?: தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டத்தில் இருக்கும் உமையாள்புரத்தில் ஜனவரி 24ஆம் தேதி, 1984ஆம் ஆண்டு பிறந்தவர் தான், பஞ்சு. இவரது செல்லப்பெயர் பஞ்சாபி. தனது திரைவாழ்வின் தொடக்கமாக பி.கே. ராஜா சாண்டோவிடம் உதவி படத்தொகுப்பாளராகவும்; எல்லிஸ் ஆர். டங்கள் என்ற இயக்குநரிடம் கடைசி உதவி இயக்குநாகவும் அனுபவம் பெற்றவர். அதன் பஞ்சாபி என்னும் புனைப்பெயரில், சினிமா எடிட்டராகவும் இருந்தார்.

கிருஷ்ணனும் பஞ்சுவும் மனுநீதிச்சோழன் என்னும் படத்தில் பி.கே.ராஜா சாண்டோ என்னும் உதவி படத்தொகுப்பாளரிடம் பணியாற்றும்போதுதான், நண்பர்கள் ஆனார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தனது நண்பர் கிருஷ்ணனுடன் சேர்ந்து கிருஷ்ணன் - பஞ்சு கூட்டணியில் ஏறத்தாழ 50க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இயக்குநராக பஞ்சு: பழங்காலத்தில் புராணங்களும் இறை நம்பிக்கைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பேசும் படங்கள் தமிழில், 1930ஆம் ஆண்டு வாக்கில் வெளியாகி சக்கைப்போடுவிட்டன. அதற்கு அப்படத்தின் இயக்குநரும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். ஆனால், சாமானிய மக்களின் கதைகளைப் பேச வைத்த தமிழ் சினிமாக்கள் மெல்ல மெல்லத்தான் வருகின்றன.

அப்படி இருக்கையில் பஞ்சுவின் திறமையைப் பார்த்த பி.கே.ராஜா சாண்டோ ’பூம்பாவை’ என்னும் படத்தில் இயக்குநராகும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கிருஷ்ணன் - பஞ்சுவின் பெயர் இப்படத்தில் இயக்குநர் பெயரில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், காலம்  இந்த சினிமா இயக்குநர்களுக்கு மூன்று ஆண்டுகள் கழித்து தன் கதவைத் திறந்தது. ‘பைத்தியக்காரன்’ என்னும் என்.எஸ்.கிருஷ்ணன் தயாரித்து நடித்த படத்தினை இயக்கும் வாய்ப்பினை இருவரும் பெற்றனர். பின் அதே பேனரின் கீழ் 'நல்லதம்பி' என்னும் படத்தை இயக்கினர்.

அடுத்து தமிழின் முக்கிய படமான ‘பராசக்தி’ திரைப்படத்தை, நேஷனல் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்கி, புரட்சிகர இயக்குநர் ஆகினர், கிருஷ்ணன் - பஞ்சு. இப்படத்தின் மூலம் தான் சிவாஜி கணேசன் திரைவாழ்வில் முதன்முதலாக நடிகராக அறிமுகம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாய் அமைந்த வசனத்தை கலைஞர் கருணாநிதி எழுதியிருந்தார். 

அடுத்து கிருஷ்ணன் - பஞ்சு இயக்கத்தில் ரத்தக் கண்ணீர் திரைப்படம் எடுக்கப்பட்டது. இப்படமும் எம்.ஆர். ராதாவின் நடிப்பில் 100 நாட்களைக் கடந்து வெற்றிபெற்றது. இப்படத்தில் பிறரின் சொத்துக்களைப் பறிக்கும் தவறான நடத்தைகொண்ட கதாபாத்திரமான ‘காந்தா’கதாபாத்திரம் மிகவும் பிரசித்திபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இவை தவிர, குல தெய்வம், புதையல் தெய்வப்பிறவி, சர்வர் சுந்தரம், பெற்றால் தான் பிள்ளையா, உயர்ந்த மனிதன், இதயவீணை, அணையா விளக்கு, சக்ரவர்த்தி ஆகியப் பல படங்களை இயக்கியுள்ளனர்.

இந்த இரட்டை இயக்குநர்கள்,தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் இந்தி மொழியிலும் திரைப்படங்களை எழுதி இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

டி20 உலகக் கோப்பை 2024

டாபிக்ஸ்