Tamil News  /  Entertainment  /  Special Article Related To Actress Aathmika's Birthday

HBD Aathmika: கோவைப் பொண்ணு.. எந்தவொரு சினிமா பின்னணியும் இல்லாத ஆத்மிகாவின் கதை!

Marimuthu M HT Tamil
Feb 09, 2024 07:15 AM IST

நடிகை ஆத்மிகாவின் பிறந்தநாள் தொடர்புடைய சிறப்புக் கட்டுரையினைக் காணலாம்.

நடிகை ஆத்மிகா
நடிகை ஆத்மிகா

ட்ரெண்டிங் செய்திகள்

யார் இந்த ஆத்மிகா? நடிகை ஆத்மிகா தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியைச் சார்ந்தவர் ஆவார். குறிப்பாக, 1993ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி பிறந்தவர். இவர் சென்னையின் எம்.ஓ.பி. வைஸ்ணவ மகளிர் கல்லூரியில் பட்டப்படிப்பைப் படிப்பதற்காக சென்னை வந்தார். பின், சென்னையிலேயே தங்கி சினிமாக்களில் நடித்து வருகிறார். இவரது குடும்பத்துக்கும் திரைப்படத்துறைக்கும் எந்தவொரு தொடர்போ, பின்புலமோ கிடையாது. கொரோனா ஊரடங்கின்போது, ஆத்மிகாவின் தந்தை 26 ஜூன், 2020ல் இதய நோய்க்கோளாறு காரணமாக உயிரிழந்தார்.

நடிப்புத்துறையில் ஆத்மிகா: சென்னை எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் படிக்கும்போது, ஆத்மிகாவுக்கு நடிப்பு மீது ஆர்வம் வந்தது. அப்போது கல்லூரியில் எடுக்கப்பட்ட சில குறும்படங்களிலும் சில மாடலிங் விளம்பரங்களிலும் நடித்தார். பின், ராஜீவ் மேனன் இயக்கிய குறும்படத்தில் நடித்தார். அது கோலிவுட் வட்டாரத்தில் நல்ல வரவேற்பினைப் பெற்றது. மேலும் இவரது ஆன்லைன் ஃபுரோபைலைப் பார்த்த கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட, ஹிப்ஹாப் தமிழா ஆதி, தான் இயக்கி நடித்த ‘மீசைய முறுக்கு’ படத்தில் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார். அப்படத்தை கோவையைச் சார்ந்த சுந்தர்.சி தயாரித்து இருந்தார்.

அதனைத் தொடர்ந்து துருவங்கள் பதினாறு படம் மூலம் பிரபலமான,இயக்குநர் கார்த்திக் நரேக் ‘நரகாசுரன்’ என்னும் படத்தை இயக்கினார். அதில் ஆத்மிகா நடித்துள்ளார். பொருளாதாரப் பிரச்னைகளால் இப்படம் வெளியாவதில் சிக்கல் நீடிக்கிறது. 2017ஆம் ஆண்டு ஓப்போ சென்னை டைம்ஸ் ஃபிரெஸ் ஃபேஸ் போட்டியில் நடுவராகப் பங்கேற்றார்.

மேலும், 2018ஆம் ஆண்டு ‘காட்டேரி’ என்னும் படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்தார், ஆத்மிகா. ஆனால் அப்படம் 2021ஆம் ஆண்டு வெளியானது. பின் உதயநிதி ஸ்டாலின் மு.மாறன் என்பவரது இயக்கத்தில் நடித்த ‘கண்ணை நம்பாதே’ படத்தில் கதாநாயகியாக நடித்தார். அப்படம் 2023ஆம் ஆண்டு வெளியானது. மேலும், இயக்குநர் ஆனந்த் கிருஷ்ணன் இயக்கத்தில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக ‘கோடியில் ஒருவன்’படத்தில் ஆத்மிகா நடித்தார். பின் திருவின் குரல் என்னும் படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாகவும் இயக்குநர் பாரதிராஜாவுடனும் நடித்தார்.

'விருமன்’ படம் 2022ஆம் ஆண்டு வெளியானபோது, இயக்குநரின் ஷங்கரின் மகளான நடிகை அதிதி ஷங்கருக்கு திரைத்துறையில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைக் கண்டு கொதித்து எழுந்தார், நடிகை ஆத்மிகா. மேலும் திரைத்துறையில் நடக்கும் வாரிசு அரசியலை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது தவிர, 2022ஆம் ஆண்டு, இசையமைப்பாளர் அனீவியின் ‘மயக்குறீயே’ஆல்பத்தில் நடித்து இருந்தார். 

நல்ல வடிவழகியாகயும் நடிகையாகவும் திகழும் கோவையைச் சார்ந்த தமிழ்ப்பெண் நடிகை ஆத்மிகா திரைத்துறையில் மிளிர வாழ்த்துகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

WhatsApp channel

டாபிக்ஸ்

பொழுதுபோக்கு மற்றும் பிக்பாஸ் , கோலிவுட் தொடர்பான அப்டேட் செய்திகளை இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் மூலம் உடனுக்குடன் அறியலாம்.