Meesaya Murukku: 'தோத்தாலும் ஜெயித்தாலும் மீசைய முறுக்கு’.. காதல் தோல்வி வலியைத் தாண்டி இசைக்கலைஞர் ஜெயித்த கதை
Meesaya Murukku: 'தோத்தாலும் ஜெயித்தாலும் மீசைய முறுக்கு’ என்னும் டேக் லைனுடன், காதல் தோல்வி வலியைத் தாண்டி இசைக்கலைஞர் ஜெயித்த கதையைப் பேசுகிறது,’மீசைய முறுக்கு’திரைப்படம்.

Meesaya Murukku: கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம் என ஆறு பணிகளை செய்து ஏழாவதாக ஹிப்ஹாப் தமிழா ஆதி ஹீரோவாகவும் நடித்து வெளியான திரைப்படம் தான், மீசையமுறுக்கு. இப்படத்தில் விவேக், ஆர்.ஜே.விக்னேஷ்காந்த், விஜயலட்சுமி, புதுமுகம் ஆத்மிகா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம், 2017ஆம் ஆண்டு, ஜூலை 21ஆம் தேதி ரிலீஸாகி சூப்பர் ஹிட்டானது.
இப்படத்தினை அவ்னி மூவிஸ் சார்பில் சுந்தர் சியும், குஷ்பூவும் தயாரித்து இருந்தனர். இப்படத்துக்குண்டான ஒளிப்பதிவினை யு.கே.செந்தில் குமார் மற்றும் கீர்த்தி வாசனும் செய்ய எடிட்டிங்கினை ஃபென்னி ஒலிவரும் செய்திருந்தனர். ’மீசைய முறுக்கு’ திரைப்படம் வெளியாகி 7 ஆண்டுகளை நிறைவுசெய்த நிலையில் அப்படம் குறித்து பேச நம்மிடம் ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் பார்ப்போம்.
மீசைய முறுக்கு திரைப்படத்தின் கதை என்ன?
கோவையைச் சேர்ந்த ஆதியும் ஜீவாவும் பள்ளி காலம்முதல் நெருங்கிய நண்பர்கள். ஆதியின் அப்பா, பேராசிரியர் ராமச்சந்திரன். ஆதியின் பள்ளிப்படிப்பின்போது, அவரது இசை மற்றும் பிறத் திறமைகளுக்கு உதவி புரிகிறார். பள்ளி முடிந்ததும் ஆதி, எலக்ட்ரிக்கல் துறையில் இன்ஜினியரிங் படிக்கிறார். அப்போது, தன் வகுப்புத்தோழியான நிலாவைப் பார்த்ததும் விரும்புகிறாள். ஏனெனில், நிலா ஆதியின் பள்ளிக்காலத்தோழி. ஆனால், நிலாவின் வீட்டில் இதற்கு மறுப்புத்தெரிவிப்பார்கள் என்று தெரிந்து இருந்தும் நிலா, ஆதியை விரும்புகிறாள்.