HBD D.Imman: துள்ளும் டிரம்ஸ் சத்தம்.. தூக்கும் மண்வாசம்.. இசையில் வெற்றி வாகை சூடிய டி.இமானின் கதை!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd D.imman: துள்ளும் டிரம்ஸ் சத்தம்.. தூக்கும் மண்வாசம்.. இசையில் வெற்றி வாகை சூடிய டி.இமானின் கதை!

HBD D.Imman: துள்ளும் டிரம்ஸ் சத்தம்.. தூக்கும் மண்வாசம்.. இசையில் வெற்றி வாகை சூடிய டி.இமானின் கதை!

Marimuthu M HT Tamil
Jan 24, 2024 07:09 AM IST

இசையமைப்பாளர் டி.இமானின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக்கட்டுரை இதோ..

இசையமைப்பாளர் டி.இமானின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக்கட்டுரை
இசையமைப்பாளர் டி.இமானின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக்கட்டுரை

யார் இந்த டி. இமான்? மதுரை மாவட்டம், மேலூரைப் பூர்வீகமாக கொண்டிருந்தாலும் டி.இமான் வளர்ந்தது எல்லாம், சென்னையில் தான். டி.இமான் 24 ஜனவரி 1983ஆம் ஆண்டு பிறந்தவர். பெற்றோர் இவருக்கு இட்ட பெயர் டி.இம்மானுவேல் வசந்த் தினகரன் ஆகும்.

இசையமைப்பாளர்களான ஆதித்யனிடம் கீபோர்டு வாசிக்கக் கற்றுக்கொண்ட டி.இமான், தனது 15 வயது முதலே இசைத்துறைக்கு வந்து விட்டார். ஆரம்பத்தில் சன் டிவியில் ஒளிபரப்பான கிருஷ்ணதாசி நாடகத்துக்கான தீம் பாடல் மற்றும் பின்னணி இசை செய்த அவர், பின்னர், கோலங்கள், மந்திர வாசல், போலீஸ் டைரி ஆகிய சீரியல்களுக்கும் இசை அமைத்தார். இந்த சீரியல்களை எல்லாம் தயாரித்த குட்டி பத்மினி தான் தயாரித்த முதல் திரைப்படமான காதலே சுவாசம் படத்திற்குண்டான இசையினை செய்ய, டி.இமானுக்கு வாய்ப்பளித்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அப்படம் வெளியாகவில்லை. இருப்பினும், அவரது இசைப்பற்றிய பேச்சு கோலிவுட்டுக்குச் செல்ல, மணிரத்னத்தின் அண்ணனும் தயாரிப்பாளருமான ஜி.வெங்கடேஸ்வரன் டி.இமான் இசையமைத்த பாடல்களைக் கேட்டு மயங்கி, தான் விஜயினை வைத்து தயாரித்த தமிழன் திரைப்படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை தந்தார். இப்படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட்டடித்தன. குறிப்பாக ‘’மாட்டு மாட்டு’’னு என்னும் பாடலை டி.இமான் அனுராதா ஸ்ரீராமுடன் இணைந்து பாடினார். தவிர, விஜயையும் பிரியங்கா சோப்ராவையும் தமிழன் படத்தில் ‘உள்ளத்தைக் கிள்ளாதே’ என்னும் பாடலைப் பாடவைத்தார். அப்பாடலும் ஹிட்டானது.

அடுத்து இவர் இசையமைத்த விசில் படத்தில் அனைத்துப் பாடல்களும் ஹிட்டாகின. பின் சுந்தர் சியின் கிரி படத்தில் டி. இமான் இசையமைத்து இருந்தார்.பின் ஏபிசிடி படத்தில் இவர் அமைத்த இசை பேசப்பட்டது. தலைநகரம் படம் மிகப்பெரிய ஹிட்டாக, இவரது இசையில் வந்த ஏதோ நினைக்கிறேன் என்றப் பாடலும் முக்கியம் என்றால் அது மிகையல்ல. பின் சரியான ஹிட் இல்லாமல் தவித்த, டி. இமானுக்கு இசையில் 25ஆவது படமான மருதமலை ஓரளவுக்குக்கை கொடுத்தது. பின் ஜீவாவின் நடிப்பில் வந்த கச்சேரி ஆரம்பம் ஓரளவுக்கு ஹிட்டானது. ஆனால், இமான் கம்பேக் கொடுத்த படம் என்றால், அது மைனா தான். முழுக்க முழுக்க அனைவரும் கேட்கும் ரிப்பீட் ரகப் பாடல்களைத் தந்தார்.

பின் இமானுக்குப் பெரிய பெரிய வாய்ப்புகள் வரத்தொடங்கின. கும்கி, கயல், பாண்டியநாடு, ஜீவா, ஜில்லா, விஸ்வாஸம், மனம்கொத்திப் பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா, நம்ம வீட்டுப்பிள்ளை,மருது, வெள்ளக்கார துரை, அண்ணாத்த எனப் பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்து பல ஹிட் பாடல்களைக் கொடுத்தார், டி.இமான்.

விஸ்வாசம் திரைப்படத்தில் இசையமைத்ததற்காக தேசிய விருதையும் பெற்றார், இமான் என்பது குறிப்பிடத்தக்கது. 

அத்தகைய டி.இமானின் பிறந்தநாளுக்கு வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் நிறுவனம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.