HBD Nalan Kumarasamy: சூது கவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமியின் பிறந்தநாள் இன்று!-special article on the birthday of director nalan kumarasamy - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Nalan Kumarasamy: சூது கவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமியின் பிறந்தநாள் இன்று!

HBD Nalan Kumarasamy: சூது கவ்வும் இயக்குநர் நலன் குமாரசாமியின் பிறந்தநாள் இன்று!

Marimuthu M HT Tamil
Feb 10, 2024 07:06 AM IST

இயக்குநர் நலன் குமாரசாமியின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அதுதொடர்பான சிறப்புக் கட்டுரை இது!

இயக்குநர் நலன் குமாரசாமி பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு
இயக்குநர் நலன் குமாரசாமி பிறந்த நாள் சிறப்புப் பகிர்வு

யார் இந்த நலன் குமாரசாமி? திருச்சியில் குமாரசாமி மற்றும் ஜோதிராணி ஆகிய தம்பதியினருக்கு 1980ஆம் ஆண்டு, அக்டோபர் 25ஆம் தேதி பிறந்தவர், நலன் குமாரசாமி.

இவர் திருச்சியிலுள்ள கேம்பியன் உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பையும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரியில் பொறியியல் படிப்பினையும், தஞ்சை சாஸ்த்ரா கல்லூரியில் எம்.டெக் படிப்பினையும் முடித்திருந்தார். நலன் குமாரசாமி, தனது கல்லூரி காலங்களில் , சென்னை ஐஐடி நடத்தும் சாரங் நிகழ்ச்சியில் தீவிரமாகப் பங்கேற்றார்.

குறும்படத்தில் இருந்து சினிமா என்னும் ட்ரெண்ட்டை உருவாக்கியவர்: கலைஞர் டிவி தொடங்கப்பட்ட புதிதில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி, நாளைய இயக்குநர் சீசன் 1. இந்த நிகழ்ச்சி, சினிமாவில் இயக்குநர் ஆகும் கனவில் இருக்கும் நபர்களை குறும்படம் எடுக்க வைத்து, அதில் நல்ல குறும்படங்களைத் தேர்ந்தெடுத்து, இறுதியில் பெரிய பரிசு ஒன்றைக் கொடுத்து ஊக்கப்படுத்தியது. மேலும் இந்நிகழ்ச்சியின் மூலம் பெற்ற கவனம் பலரையும் இயக்குநர் ஆக்கியது. அதில் மிக முக்கியமானவர், நலன் குமாரசாமி ஆவார். 

கல்லூரி முடித்து, ஈவேன்ட்மேனேஜ்மென்ட் மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த நலன் குமாரசாமி, நாளைய இயக்குநர் நிகழ்ச்சியைப் பற்றி நிகழ்ச்சி தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பு, நண்பர் ஒருவர் மூலமாக அறிந்து, அதையே கருவாக மாற்றி ‘ஒரு படம் எடுக்கணும்’ என்னும் கனவுடன் எடுத்துமுடித்திருத்தார். அதில் வரும் நம்பிக்கை தும்பிக்கை என்னும் வசனமும், குறும்படத்தில் கடைசி நேர டிவிஸ்ட்டும் நலன் குமாரசாமியை ‘நாளைய இயக்குநர்’ நிகழ்ச்சியில் நிலைநிறுத்தியது.

பின் அடுத்தடுத்த சுற்றுகளுக்கு முன்னேறினார், நலன் குமாரசாமி. அதில் துரும்பிலும் இருப்பார் மற்றும் பல்வேறு குறும்படங்கள் இவரை நாளைய இயக்குநர் சீசன் 1 நிகழ்ச்சியின் இறுதி கட்டத்திற்குக் கூட்டிச்சென்றது. நக்கலான வசனங்கள், கிளைமேக்ஸ் டிவிஸ்ட், காமெடியான திரைக்கதை ஆகியவை இவரது ஒவ்வொரு குறும்படங்களிலும் மிளிர்ந்தன. இவர் இறுதியாக இயக்கிய நெஞ்சுக்கு நீதி என்னும் குறும்படத்தைப் பார்த்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, விழுந்து விழுந்து சிரித்தார். அதுதான், அந்தப் போட்டியில் இவரை முதல் பரிசை வெல்ல வைத்தது.

அப்போது நாளைய இயக்குநர் நிகழ்ச்சிக்கு நடுவராக வந்த இயக்குநர் சுந்தர் சி., இவரது திறமையை உணர்ந்து தனது ’தீய வேலை செய்யணும் குமாரு’ படத்தில் வசனம் எழுதும் வாய்ப்பினைக் கொடுத்தார். அப்போது’இது இட்லின்னு சொன்னால் சட்னி கூட நம்பாது’; ‘தேங்காய் வேணும்னா தென்னைமரம் ஏறித்தான் ஆகணும் குமாரு’ஆகியவை இவரது சிரிப்பு வசனங்களுக்கு உதாரணம்.

பின் சூது கவ்வும் என்னும் படத்தை இயக்கினார். 11 இயக்குநர்கள் சேர்ந்து இயக்கிய எக்ஸ் என்னும் படத்தில் ஒரு போர்ஷனை இயக்கினார், நலன். பின், தமிழில் விஜய்சேதுபதியை வைத்து காதலும் கடந்துபோகும் படத்தை இயக்கினார். பின், மாயவன் என்னும் படத்திலும், சூப்பர் டீலக்ஸ் படத்திலும் வசனம் மற்றும் கூடுதல் திரைக்கதையில் பங்களித்தார். பின், தற்போது நடிகர் கார்த்தி, கீர்த்தி ஷெட்டியை வைத்து ‘வா.. வாத்தியாரே’ என்னும் படத்தை எடுத்துள்ளார்.

இப்படி தமிழ் சினிமாவின் வரலாற்றினை குறும்படத்தில் இருந்து தொடங்கிய நலன் குமாரசாமியின் பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.