தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  7 Years Of Saravanan Irukka Bayamaen:'எம்புட்டு இருக்குது ஆசை’தந்த மைலேஜ்.. உதயநிதிக்கு லாபம் தந்த சரவணன் இருக்க பயமேன்

7 Years Of Saravanan Irukka Bayamaen:'எம்புட்டு இருக்குது ஆசை’தந்த மைலேஜ்.. உதயநிதிக்கு லாபம் தந்த சரவணன் இருக்க பயமேன்

Marimuthu M HT Tamil
May 12, 2024 12:51 PM IST

7 Years Of Saravanan Irukka Bayamaen: உதயநிதி ஸ்டாலின், ரெஜினா,சூரி ஆகியோர் நடித்த சரவணன் இருக்க பயமேன் திரைப்படம் வெளியாகி 7ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

7 Years Of Saravanan Irukka Bayamaen:'எம்புட்டு இருக்குது ஆசை’தந்த மைலேஜ்.. உதயநிதிக்கு லாபம் தந்த சரவணன் இருக்க பயமேன்
7 Years Of Saravanan Irukka Bayamaen:'எம்புட்டு இருக்குது ஆசை’தந்த மைலேஜ்.. உதயநிதிக்கு லாபம் தந்த சரவணன் இருக்க பயமேன்

ட்ரெண்டிங் செய்திகள்

சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தின் கதை என்ன?

சரவணன், வேலையற்ற பட்டதாரியாக இருந்து தனது நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். சரவணனின் நண்பன், கல்யாணம். இவர் ‘தோ ஜிந்தகி’என்னும் ஒரு கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் புகைப்படக்காரர்கள் சிலர் எடுத்த விநோதமான போட்டாவால், போலீஸில் தேடும் குற்றவாளியாகிறார், கல்யாணம். பின் சரவணனின் உதவியின்மூலம், துபாக்கு செல்கிறார். அங்கு சென்றபின் தான், கல்யாணத்துக்கு ஒட்டகம் மேய்க்கும் பணி என்று தெரிகிறது.

கல்யாணம் துபாயில் இருப்பதால், ‘தோ ஜிந்தகி’ கட்சியின் தலைவராக சரவணன் ஆக்கப்படுகிறார். பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், சரவணனின் வீட்டுக்கு அவரது மாமாவும், அவரது மாமாவின் மகள் தேன்மொழியும் வருகின்றனர்.

பின் இரண்டு ஆண்டுகளுக்குப் பின், சரவணனின் வீட்டுக்கு வரும் தேன்மொழி, இந்த வீடு சரவணனின் மாமாவுக்குச் சொந்தமானது என்றும், அவரது மாமாவின் மகள் தான் தான் என்றும்; தற்போது கட்சி அலுவலகமாகப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, அதை சுத்தப்படுத்தி தங்களுக்குக் கொடுக்கும்படியும் கூறுகிறார். அதன்பின் தான் சரவணனுக்குத் தெரிகிறது, சரவணனும் தேன்மொழியும் பள்ளியில் ஒன்றாகப் படித்துக்கொண்டவர்கள் என்று. அதன்பின், கல்யாணத்தின் மனைவி சரஸ்வதி, தனது கணவருக்குத் தெரியாமல் கட்சி அலுவலகத்திற்குத் தனது வீட்டைவிடுகிறார்.

ஒரு நாள் துபாயில் இருந்து வந்து பார்க்கும் கல்யாணம், தன் வீட்டின் நிலையைப் பார்த்து ஷாக் ஆகிறார்.

இதன்பின், சரவணனையும் தேன்மொழியையும் பழிவாங்க நினைக்கிறார், கல்யாணம்.

பல்வேறு குழப்பங்களுக்கு மத்தியில் வீரசிங்கத்தின் மகன் ராஜதுரைக்கும் தேன்மொழிக்கும் நிச்சயம் ஆகிவிடுகிறது. இது தேன்மொழியை காதலிக்கும் சரவணனுக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. மேலும் தேன்மொழியும் சரவணனை மிஸ் செய்ததை உணர்கிறார். இதற்கிடையே சரவணனை ஒருதலையாக காதலித்த பாத்திமா என்ற பெண், அகால மரணத்துக்குப் பின், தேன்மொழி உடலில் புகுகிறாள். இதன்பின்னர் நடக்கும் பல்வேறு கலவரங்களுக்குப் பின், சரவணன் தேன்மொழியைக் கரம்பிடித்தால், அது தான் ‘சரவணன் இருக்க பயமேன்’.

சரவணன் இருக்க பயமேன் திரைப்படத்தில் நடித்தவர்கள் விவரம்

இப்படத்தில் சரவணனாக உதயநிதி ஸ்டாலினும், தேன்மொழியாக ரெஜினா கசாண்ட்ராவும், பாத்திமாவாக ஸ்ருஷ்டி டாங்கேவும் கல்யாணமாக சூரியும் நடித்துள்ளனர். மேலும், கல்யாணத்தின் மனைவி சரஸ்வதியாக ஜாங்கிரி மதுமிதாவும், வீரசிங்கமாக மன்சூர் அலிகானும், வீரசிங்கத்தின் மகன் ராஜதுரையாக சாம்ஸும் நடித்துள்ளனர். சரவணனின் நண்பன் பாபுவாக யோகி பாபுவும், தேன்மொழியின் தந்தையாக லிவிங்ஸ்டனும் நடித்திருந்தனர். தவிர, இப்படத்தில் மனோ பாலா, ஜோ மல்லூரி, ஜி.எம். குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் உள்ளன. அதில் எம்புட்டு இருக்குது ஆசை, லாலா கடை சாந்தி ஆகியப் பாடல்கள் டி.இமானின் இசையில் மிகப்பெரிய ஹிட்டடித்தன. இப்பாடல்களைப் பார்க்கவே பலர் தியேட்டருக்குப் படையெடுத்தனர். அதேபோல்,படத்தின் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின், தான் நடித்து தயாரித்தப்  படங்களில் தனக்கு மிகப்பெரிய லாபம் தந்த படம், சரவணன் இருக்க பயமேன் தான் என பேட்டி ஒன்றில் குறிப்பிட்டார். 

இயக்குநர் எழிலின் நகைச்சுவை பாணியில் அமைந்த படம் என்பதால், எப்போது டிவியில் போட்டாலும் பலராலும் இப்படம் ரசிக்கப்படுகிறது.  

IPL_Entry_Point

டாபிக்ஸ்