M.S.Subbulakshmi: குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. இசை ராணி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் தினப் பகிர்வு-special article on music queen ms subbulakshmi is birthday sharing 2024 - HT Tamil ,பொழுதுபோக்கு செய்திகள்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  M.s.subbulakshmi: குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. இசை ராணி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் தினப் பகிர்வு

M.S.Subbulakshmi: குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. இசை ராணி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் தினப் பகிர்வு

Marimuthu M HT Tamil
Sep 16, 2024 07:23 AM IST

M.S.Subbulakshmi: குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. இசை ராணி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் தினப் பகிர்வு குறித்துக் காண்போம்.

M.S.Subbulakshmi: குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. இசை ராணி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் தினப் பகிர்வு
M.S.Subbulakshmi: குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. இசை ராணி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பிறந்தநாள் தினப் பகிர்வு

எம்.எஸ்.சுப்புலட்சுமி 1916ஆம் ஆண்டு, செப்டம்பர் 16 அன்று சென்னை மாகாணத்தின் மதுரையில் வீணை இசைக்கலைஞர் சண்முகவடிவு அம்மாள் மற்றும் சுப்பிரமணிய ஐயர் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவரது பாட்டி அக்கம்மாள் வயலின் கலைஞர் ஆவார்.

சிறு வயதிலேயே கர்நாடக இசையைக் கற்கத் தொடங்கிய இவர், செம்மங்குடி சீனிவாச ஐயரின் பயிற்சியின்கீழ் கர்நாடக இசையிலும், பின்னர் பண்டிட் நாராயணராவ் வியாஸின்கீழ் இந்துஸ்தானி இசையிலும் பயிற்சி பெற்றார்.

எம்.எஸ். சுப்புலட்சுமி வளர்ந்த சூழல்:

தேவதாசி சமூகத்தைச் சேர்ந்த இவரது தாயார் ஒரு இசைக்கலைஞராகவும், வழக்கமான மேடைக் கலைஞராகவும் இருந்தார். மேலும் சுப்புலட்சுமி இசை கற்றலுக்கு மிகவும் உகந்த சூழலில் வளர்ந்தார். காரைக்குடி சாம்பசிவ ஐயர், மழவராயனேந்தல் சுப்பராம பாகவதர், அரியக்குடி ராமானுஜ ஐயங்கார் ஆகியோருடன் தொடர்ந்து உரையாடியதன் மூலம் இவரது இசை ஆர்வம் உருவானது மற்றும் அதிகரித்தது எனலாம்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி தனது பதினோராவது வயதில், 1927ஆம் ஆண்டில், திருச்சிராப்பள்ளி மலைக்கோட்டை கோயிலின் 100 கால் மண்டபத்தில் தனது முதல் பொது நிகழ்ச்சியை வழங்கினார்; வயலினில் மைசூர் சௌடியாவும்; மிருதங்கத்தில் தட்சிணாமூர்த்தி பிள்ளையும் உடன் இருந்தனர். இதை திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் எஃப்.ஜி.நடேச ஐயர் ஏற்பாடு செய்திருந்தார்.

1936ஆம் ஆண்டில் சுப்புலட்சுமி சென்னைக்கு குடிபெயர்ந்தார். 1938ஆம் ஆண்டில் சேவாசதன் திரைப்படத்தில் அறிமுகமானார். மீண்டும் எஃப்.ஜி.நடேச ஐயருக்கு ஜோடியாக திரைப்பட உலகில் அறிமுகமானார்.

எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு ஆரம்பத்தில் அவரிடம் இருக்கும் ஆர்வத்தைப் பார்த்து, அவரது தாய் சண்முகவடிவே கர்நாடக இசைப் பயிற்சியைக் கொடுத்துள்ளார். சுப்புலட்சுமிக்கு 10 வயதாக இருந்தபோது முதல் ரெக்கார்டிங் வெளியிடப்பட்டது.

எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு கிடைத்த அங்கீகாரங்கள்:

இந்தியாவின் கலாச்சார தூதராக லண்டன், நியூயார்க், கனடா, தூர கிழக்கு மற்றும் பிற இடங்களுக்கு எம்.எஸ்.சுப்புலட்சுமி பயணம் செய்தார். 1963ஆம் ஆண்டில் எடின்பரோ சர்வதேச இசை மற்றும் நாடக விழாவில் இவரது கச்சேரிகள்; கார்னகி ஹால், நியூயார்க்; 1966இல் ஐ.நா தினத்தன்று ஐ.நா பொதுச்சபை; ராயல் ஆல்பர்ட் ஹால், லண்டன், 1982; மற்றும் 1987இல் மாஸ்கோவில் நடந்த இந்திய விழா ஆகியவை அவரது வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மைல்கற்களாக இருந்தன.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா பாடியதில் மிகப்பிரபலமான பாடல் குறையொன்றுமில்லை மறைமூர்த்தி கண்ணா.. குறையொன்றுமில்லை கோவிந்தா என்னும் பாடல் ஆகும்.

1997ஆம் ஆண்டில் அவரது கணவர் கல்கி சதாசிவம் இறந்த பிறகு, அவர் தனது அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் நிறுத்தினார். எம்.எஸ்.சுப்புலட்சுமி 11 டிசம்பர் 2004அன்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் எம்.எஸ்.சுப்புலட்சுமி காலமானார்.

பத்ம பூஷண், சங்கீத நாடக அகாதமி விருது , சங்கீத கலாநிதி , ரமோன் மகசேசே விருது (ஆசியாவின் நோபல் பரிசாகக் கருதப்படுகிறது), 1975இல் பத்ம விபூஷண் விருது, 1975இல் இந்திய நுண்கலைக் கழகத்தால் வழங்கப்படும் சங்கீத கலாசிகாமணி விருது, 1988இல் வழங்கப்பட்ட காளிதாஸ் சம்மன் விருது, 1990ஆம் ஆண்டில் தேசிய ஒருமைப்பாட்டுக்கான இந்திரா காந்தி விருது, 1998-ல் பாரத ரத்னா விருது ஆகியன இவருக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளன.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.