Orange Mittai:தனிமையைப் போக்க ஆம்புலன்ஸில் ஊர் சுற்ற நினைக்கும் நோயாளியின் காமெடி தெறிப்புத் தருணங்கள் ‘ஆரஞ்சு மிட்டாய்’
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Orange Mittai:தனிமையைப் போக்க ஆம்புலன்ஸில் ஊர் சுற்ற நினைக்கும் நோயாளியின் காமெடி தெறிப்புத் தருணங்கள் ‘ஆரஞ்சு மிட்டாய்’

Orange Mittai:தனிமையைப் போக்க ஆம்புலன்ஸில் ஊர் சுற்ற நினைக்கும் நோயாளியின் காமெடி தெறிப்புத் தருணங்கள் ‘ஆரஞ்சு மிட்டாய்’

Marimuthu M HT Tamil Published Jul 31, 2024 10:16 AM IST
Marimuthu M HT Tamil
Published Jul 31, 2024 10:16 AM IST

9 Years Of Orange Mittai: தனிமையைப் போக்க ஆம்புலன்ஸில் ஊர் சுற்ற நினைக்கும் நோயாளியின் காமெடி தெறிப்புத் தருணங்கள் தான் ‘ஆரஞ்சு மிட்டாய்’ திரைப்படம். இப்படம் குறித்து விரிவாகப் பார்ப்போம்.

Orange Mittai:தனிமையைப் போக்க ஆம்புலன்ஸில் ஊர் சுற்ற நினைக்கும் நோயாளியின் காமெடி தெறிப்புத் தருணங்கள் ‘ஆரஞ்சு மிட்டாய்’
Orange Mittai:தனிமையைப் போக்க ஆம்புலன்ஸில் ஊர் சுற்ற நினைக்கும் நோயாளியின் காமெடி தெறிப்புத் தருணங்கள் ‘ஆரஞ்சு மிட்டாய்’

ஆரஞ்சு மிட்டாய் படத்தின் கதை என்ன?:

108 ஆம்புலன்ஸ் வண்டியில் அவசர கால மருத்துவ உதவியாளராகப் பணிபுரியும் சத்யாவுக்கும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆறுமுகத்துக்கும் ஒரு நோயாளி கைலாசம் என்பவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வர உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. அதன்படி, ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆறுமுகமும், அவசர கால மருத்துவ உதவியாளர் சத்யாவும் அகஸ்தியாபட்டிக்கு பல்வேறு தடைகளைத் தாண்டிச் செல்கின்றனர். அங்குசென்றால், ஒரு பாழடைந்த வீட்டில் இருக்கும் முதியவர் கைலாசம் இருக்கிறார். வாருங்கள் மருத்துவமனைக்குச் சென்றால் பவுடர் போட்டு, தலைசீவி அலங்கரித்து ஒன்றுமில்லாதவர்போல, சாப்பிடுவதற்கு ஆரஞ்சு மிட்டாய்களை அள்ளி வைத்துக்கொண்டு மருத்துவமனைக்குக் கிளம்புகிறார். இது சத்யாவுக்கும் ஆறுமுகத்துக்கும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. ஒருவழியாக அவரை ஏற்றிக்கொண்டு செல்லும் வழியில், ஆம்புலன்ஸை மறித்து ஒரு குடிகாரனை மருத்துவமனையில் சேர்க்கச் சொல்லி அனுப்பிவைக்கின்றனர், பக்கத்து கிராம மக்கள். பின் இருவரையும் ஏற்றிக்கொண்டு, செல்லும் ஆம்புலன்ஸ், கடைசியாக இரவில் பெரியவர் கைலாசத்தை மருத்துவமனையில் இறக்கிவிடுகிறது. அப்போது சத்யாவும் கிளம்பப் பார்க்கிறார். 

அப்போது சத்யா,பெரியவர் கைலாசத்தைப் பார்த்து சொல்லிவிட்டுக் கிளம்ப நினைக்கிறார். அப்போது ’என்ன ஐயா, உங்கள் பிரச்னை’ என்று கேட்கிறார். அப்போது பெரியவர் கைலாசம், ’தன் உடல்நிலை மிக மோசமாக இருப்பது தனக்குத் தெரியும்’ என்றும்; ’தனக்குப் பிடித்ததுபோல் வாழ நினைப்பதாகவும்’ சொல்கிறார். மேலும், வீட்டில் தனிமையாக இருப்பதை விட, ஆம்புலன்ஸில் வெளியில் சென்று வருவதை சற்று கைலாசத்துக்கு நிம்மதியைத் தருகிறது என்பதை அவசர மருத்துவ உதவியாளர் சத்யா புரிந்துகொள்கிறார். பின், மருத்துவமனையில் அட்மிஷன்போட விருப்பமில்லாமல் பெரியவர் கைலாசம், தன்னை வெளியில் அழைத்துச் செல்ல சத்யாவிடம் கேட்கிறார். இதற்கிடையே நோயாளியை தாமதமாக கொண்டு வந்து மருத்துவமனையில் சேர்த்தமைக்காக சத்யாவுக்கு ஒரு மாதம் சஸ்பென்ஸ்சன் பரிசாக கிடைத்திருக்கிறது.

இதனால் சத்யா, கைலாசத்தை அழைத்துக்கொண்டு, அவரின் மகனின் வீட்டுக்குச் செல்கிறார். அப்போது கைலாசத்தின் மகன், தன் தந்தை இறந்தால் மட்டும் சொல்லவும் என்று சொல்கிறார். இதனால், மகன் தந்தையைப் புறக்கணிப்பதை உணர்ந்த சத்யா, அவரை அவரது அகஸ்தியாபட்டியில் உள்ள வீட்டில் விட்டுவிட முடிவுசெய்கிறார். அப்போது பெரியவர் கைலாசம், சத்யாவுக்கும் அவரது காதலி காவ்யாவுக்கும் இருக்கும் பிரச்னையை சரிசெய்ய, அவரை காவ்யாவின் வீட்டுக்கு அழைத்துச் செல்கிறார். அப்போது அங்கு சென்று பேசும் சத்யா, ’தன்னால் பலசரக்கு கடை எல்லாம் வைக்கமுடியாது’ என்றும்; ’தன்னால் இந்த அவசர கால மருத்துவ உதவியாளர் பணியில் தான் மிகவும் பிடித்துப் பணிசெய்யமுடியும்’ என்றும் சொல்லிவிட்டு வந்துவிடுகிறார்.

இறுதியில் பெரியவர் கைலாசத்தை அவரது ஊரில் இறக்கிவிடும் சத்யா, பின் இருவருக்கும் இடையே இருக்கும் நட்பை உணர்கிறார். பின் நண்பர்கள் ஆகின்றனர். 

இறுதியில், கைலாசம் தன் வாழ்க்கையை அமைதியாக தனக்குப் பிடித்தமாதிரி வாழத்தொடங்குகிறார். அவ்வப்போது சத்யாவிடம் ஒன்றுசேர்ந்து ஆரஞ்சு மிட்டாய்களை சுவைத்து கதைபேசுகிறார். 

ஆரஞ்சு மிட்டாய் படத்தில் நடித்தவர்கள் விவரம்:

இப்படத்தில் பெரியவர் கைலாசமாக விஜய்சேதுபதியும், ஆம்புலன்ஸ் அவசர கால உதவியாளர் சத்யாவாக ரமேஷ் திலக்கும் நடித்துள்ளனர். ஆம்புலன்ஸ் ஓட்டுநராக ஆறு பாலா நடித்துள்ளார். கைலாசத்தின் மகனாக கருணாகரனும், சத்யாவின் காதலி காவ்யாவாக அஸ்ரிதாவும் நடித்துள்ளனர். படத்தில் இறுதியாக, அசோக் செல்வன் ஒரு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். 

ஆரஞ்சு மிட்டாய் படத்தில் வரும் சத்தமில்லாத காமெடிகள்:

முதியவர் கைலாசத்தை தூக்கச் செல்லும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஆறுமுகம், அவரது வீட்டுக்குச் செல்லும் குறுகலான பாதையில் செல்லும்போது சிரிப்பு வந்துவிடுகிறது. மேலும், முதியவர் கைலாசம் மருத்துவமனைக்கு கிளம்பும்காட்சி, செல்லும் வழியில் ஒரு குடிகார நோயாளியை ஏற்றும் காட்சி, ஒரு ஆட்டோவில் சென்று இறங்கியதும் பெரியவர் கைலாசம் குத்தாட்டம்போடுவது, ஹைலைட்டாக ஆறுமுகத்துக்கும் முதியவர் கைலாசத்துக்கும் நடக்கிற உரையாடலில் நீங்க நல்லவரா, கெட்டவரா என ஆறுமுகம் கேட்கும் இடம் எனப் படத்தின் பல்வேறு பகுதிகளில் சத்தமில்லாத காமெடி தெறிப்புத் தருணங்கள் இருக்கின்றன. 

இசை:

 ஆரஞ்சு மிட்டாய் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். பின்னணி இசையில் ஜஸ்டின் தேவைப்படும் இடங்களில் மட்டும் இசையைப் பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார். குறிப்பாக, காமெடி காட்சிகளில் எனலாம். இப்படத்தில் ‘ஸ்ட்ரெயிட்டா போயி’ எனும் பாடலையும், ‘ ஒரே ஒரு ஊர்ல’ ஆகியப் பாடல்களையும் விஜய்சேதுபதி எழுதியிருந்தார்.

படத்தின் பெரிய பிளஸ், 1 மணிநேரம் 30 நிமிடங்கள் மட்டுமே ஓடும் கதைக்களம். சொல்லவரும் கருத்தை எளிமையாக ரசிக்கும்படி சொல்வதால், தற்போது டிவியில் இப்படத்தினைப் போட்டாலும், ’ஆரஞ்சு மிட்டாயை’ ரசிக்கலாம்,சுவைக்கலாம்!

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.