HBD Miya George: 'இன்று நேற்று நாளை’ படம் மூலம் பிரபலமான நடிகை மியா ஜார்ஜின் பிறந்த நாள் இன்று!
நடிகை மியா ஜார்ஜின் பிறந்தநாள் தொடர்பான சிறப்புக்கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழில் அமர காவியம்,இன்று நேற்று நாளை ஆகியப் பல்வேறு படங்களில் நடித்தவர், மியா ஜார்ஜ். பிறந்தநாள் கொண்டாடும் இவர் திரைத்துறையில் பல்வேறு பங்களிப்புகளை செய்துள்ளார். அது குறித்துப் பார்ப்போம்.
நடிகை மியா ஜார்ஜின் பூர்வீகம்? நடிகை மியா ஜார்ஜ், மும்பையின் தோம்பிவிளியில் வசித்த ஜார்ஜ் ஜோசப் மற்றும் மினி தம்பதியினருக்கு, 1992ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி பிறந்தார். இவரது தந்தை பொறியாளராக மும்பையில் பணிசெய்ததால் அவரது குடும்பம் அங்கு வெகுசில ஆண்டுகளாக வசித்தது. பின்னர், மியாவுக்கு நான்கு வயது இருக்கும் போது, கோட்டயம் மாவட்டத்தில் உள்ள பாலா என்னும் ஊருக்குப் புலம் பெயர்ந்தது. மியா ஜார்ஜ், தனது பள்ளிப்படிப்பை, பாரங்கனம் என்னும் ஊரிலுள்ள புனித இருதய பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், புனித மேரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் படித்தார். அதன்பின்னர், பாலையில் உள்ள அல்போன்ஸா கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலமும், புனித தாமஸ் கல்லூரியில் எம்.ஏ. ஆங்கில இலக்கியமும் படித்தார்.
இவருக்கு ஜினி என்கிற ஒரு அக்கா இருந்தார். அவர் லிஜோ ஜார்ஜ் என்பவரைத் திருமணம் செய்து பெங்களூருவில் வசித்து வருகிறார். அதேபோல், கடந்த கொரோனா காலத்தில் 2020 செப்டம்பர் 12ஆம் தேதி அஸ்வின் பிலிப் என்னும் தொழில் முனைவோரை, எர்ணாகுளத்தில் உள்ள புனித மேரி திருச்சபையில் வைத்து திருமணம் செய்துகொண்டார், மியா ஜார்ஜ். அதன்பின்னர், 2021ஆம் ஆண்டு, இத்தம்பதியினருக்கு ஒரு மகன் பிறந்தார். அதே ஆண்டு அவரது தந்தை மரித்தார்.
திரைத்துறையில் பங்களிப்பு: தொலைக்காட்சி சீரியல்களில் துணை நடிகையாக இருந்த மியாவுக்கு, அல்போன்ஸம்மா என்னும் சீரியலும், குஞ்சலி மரக்கார் என்னும் சீரியலும் பிரேக்கை தந்தன. அதன்பின்னர், 2010ஆம் ஆண்டு ஒரு ஸ்மால் ஃபேமிலி என்னும் மலையாள சினிமாவில் நடிகையாக அறிமுகம் ஆனார், மியா ஜார்ஜ். அதனைத்தொடர்ந்து அவர் நடித்த டாக்டர் லவ், ஈ அடுத்த காலத்து ஆகியப் படங்கள் அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தன.
அதன்பின்,2014ஆம் ஆண்டு அமர காவியம் என்னும் முழு காதல் படத்தில் கார்த்திகா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் கவர்ந்தார், மியா ஜார்ஜ். அடுத்து ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷாலுடன் ஜோடியாக ‘இன்று நேற்று நாளை’திரைப்படத்தில் நடித்தார். அதன்பின் தமிழில் சசிகுமாருடன் சேர்ந்து ‘வெற்றிவேல்’ திரைப்படத்திலும்’; ஒரு நாள் கூத்து படத்தில் லட்சுமி என்னும் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். இவையாவும், அவருக்கு நற்பெயரைப் பெற்றுத்தந்தன. பின், ரம், எமன் ஆகியப் படங்களில் நடித்த கோப்ரா மற்றும், தி ரோட் படங்களில், கதாநாயகி பிம்பத்தில் இருந்து விலகி வந்து குணச்சித்திர வேடங்களிலும் நடிக்கத் தொடங்கினார்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்