HBD Mandira Bedi: மந்திரா பேடி எனும் கவர்ச்சி மந்திரத்துக்கு பிறந்த நாள்.. 52 வயதிலும் ஃபிட் லுக்
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Hbd Mandira Bedi: மந்திரா பேடி எனும் கவர்ச்சி மந்திரத்துக்கு பிறந்த நாள்.. 52 வயதிலும் ஃபிட் லுக்

HBD Mandira Bedi: மந்திரா பேடி எனும் கவர்ச்சி மந்திரத்துக்கு பிறந்த நாள்.. 52 வயதிலும் ஃபிட் லுக்

Marimuthu M HT Tamil
Apr 15, 2024 09:35 AM IST

HBD Mandira Bedi: நடிகை மந்திரா பேடியின் பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. அவர் தொடர்பான கட்டுரை..

நடிகை மந்திரா பேடி
நடிகை மந்திரா பேடி

நடிகை, தொலைக்காட்சி தொகுப்பாளர், ஃபேஷன் டிசைனர், கட்டழகு மாடல் எனப் பல்வேறு துறைகளில் கொடிகட்டிப் பிறந்த மந்திரா பேடியின் 52ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரைப் பற்றி அறிந்துகொள்ள ஏராளமான விஷயங்கள் உள்ளன. வாருங்கள் அறிந்துகொள்வோம்.

யார் இந்த மந்திரா பேடி?: மந்திரா பேடி மேற்கு வங்க மாநிலம், கல்கத்தாவில் வீரேந்தர் சிங் மற்றும் கீதா பேடி ஆகியோருக்கு 1972ஆம் ஆண்டு, ஏப்ரல் 15ஆம் தேதி பிறந்தார். இவரது மூத்த சகோதரர் ஒரு வங்கி முதலீட்டாளர். மந்திரா பேடியின் குடும்பம் சிறு வயதிலேயே மும்பைக்குப் புலம் பெயர்ந்தது. மும்பையின் கேத்ட்ரல் மற்றும் ஜான் கோனான் பள்ளியில், மந்திரா பேடி பள்ளிப் படிப்பை முடித்தார். அதன்பின், மும்பையில் உள்ள புனித சேவியர் கல்லூரியில் இளங்கலைப் பட்டப் படிப்பையும், மும்பையில் உள்ள ஷோபியா பாலிடெக்னிக் கல்லூரியில் தனது மற்றுமொரு கோர்ஸையும் முடித்தார்.

தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை, மந்திரா பேடி, புகழின் உச்சியில் இருந்தபோது ராஜ் கவுசல் என்னும் நபரை, பிப்ரவரி 14, 1999ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். 2011ஆம் ஆண்டு இருவரும் தங்களது முதல் குழந்தையைப் பெற்றெடுத்தனர். ஜனவரி 19, 2011ஆம் தேதி மந்திரா பேடி மற்றும் ராஜ் கவுசல் தம்பதியினருக்கு அழகிய ஆண் குழந்தைப் பிறந்தது. அக்குழந்தைக்கு வீர் எனப் பெயரிட்டார். அதன்பின், மந்திரா பேடியும் அவரது கணவரும் தாரா பேடி என்னும் 4 வயது குழந்தையை தத்து எடுத்து வளர்க்கத் தொடங்கினர். ஆனால், ராஜ் கவுசல் துரதிர்ஷ்டவசமாக 30, ஜூன் 2021ல் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்தார்.

சினிமா மற்றும் மாடல் வாழ்க்கை: மந்திரா பேடி, தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் 1994ஆம் ஆண்டு சாந்தி என்னும் சீரியல் மூலம் கதையின் நாயகியாக நடித்தார். இந்த சீரியல் 1994ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை, தூர்தர்ஷனில் ஒளிபரப்பானது. இதனால், இந்தி மொழி பேசும் மாநிலங்களில் மந்திரா பேடியை தெரியாதவர்களே இல்லை எனும் அளவுக்குப் பெயர் பெற்றார். அதன்பின், அஹாத், அயுரத், கர் ஜமாய், ஹலோ ஃபிரெண்ட்ஸ், துஷ்மன், சி.ஐ.டி,டில் சாத்தா ஹை ஆகிய சீரியல்களில் நடித்தார். மேலும், ஜெய் மஹாபாரத் எனப் பல்வேறு சீரியல்களில் நடித்தார்.

 ஐசிசி கிரிக்கெட் போட்டிகள், சாம்பியன்ஸ் டிராஃபி, ஐபிஎல் ஆகியவற்றில், மந்திரா பேடி வர்ணனையாளராக செயல்பட்டதன்மூலம் புகழின் உச்சிக்குச் சென்றார்.

இந்நிலையில் தான், ‘சாதி கா லட்டு’ என்னும் பாலிவுட் படத்தில் முதன்முதலாக ஹீரோயினாக நடித்தார். அதன்பின், தான் சிம்பு ஸ்கிரிப்ட் எழுதிய ‘மன்மதன்’ படத்தில் மனநல மருத்துவர் என்னும் ரோலில் நடித்து, ’தத்தை தத்தை’ பாடலிலும் நடித்து, தமிழ் சினிமா ரசிகர்களை, தனது கவர்ச்சியால் கட்டியிழுத்தார், மந்திரா பேடி.

2013ஆம் ஆண்டு மந்திரா பேடி, துணி பிஸினஸில் இறங்கினார். இப்படி, நடிகை, தொகுப்பாளினி, தொழில் முனைவோராக கலக்கிவரும், மந்திரா பேடி இன்று தனது 52ஆவது பிறந்த நாளைக் கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளைக் கொண்டாடுவதில் பெருமிதம் கொள்கிறது, இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்!

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.