14 years of தீராத விளையாட்டுப் பிள்ளை: ஒரே நேரத்தில் 3 பேரை காதலிக்கும் இளைஞரின் கதை
தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படம் வெளியாகி 14ஆண்டுகளை நிறைவுசெய்துள்ளது.
தீராத விளையாட்டுப் பிள்ளை, நடிகர் விஷால் நடித்த ஒரு பிளே பாய் திரைப்படமாகும். ஒரே நேரத்தில் 3 பேரை காதலிக்கும் இளைஞரின் கதையை இப்படம் சுட்டிக் காட்டுகிறது. இப்படத்தை இயக்குநர் திரு எடுத்திருந்தார். விஷாலின் சகோதரர் விக்ரம் கிருஷ்ணா தயாரித்து இருந்தார். இந்த தீராத விளையாட்டுப் பிள்ளை திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகள் நடித்தனர். அவர்கள் முறையே சாரா ஜேன் டயஸ், தனுஸ்ரீ தத்தா, நீது சந்திரா ஆகியோர் ஆவர். பின், இப்படத்தின் காமெடி பகுதியில் சந்தானம், சத்யன், மயில்சாமி ஆகியோர் கூட்டுசேர்த்து நடித்து நகைச்சுவையில் கிச்சுகிச்சு மூட்டினர். இப்படம் பிப்ரவரி 12, 2010ல் ரிலீஸானது.
இப்படத்தின் வெற்றிக்கு யுவன் சங்கர் ராஜாவின் இசைபெரும்பங்கு வகித்தது. குறிப்பாக, ‘என் ஜன்னல் வந்த காற்றே ஒரு தேநீர் போட்டு தரவா’, ‘ஒரு புன்னகை தானே வீசிச்சென்றாய்’, ‘தீராத விளையாட்டுப் பிள்ளை’ ஆகிய மூன்று பாடல்களும் அடிக்கடி இன்னும் பலரால் முணுமுணுக்கும் பாடல்களாக இருந்து வருகின்றன.
தீராத விளையாட்டுப் பிள்ளை படத்தின் கதை என்ன?
கார்த்திக், வங்கி மேலாளர் தந்தைக்குப் பிறந்த, தந்தையின் செலவில் சொகுசுவாழ்க்கை வாழும் மகன். இவருக்கு சரியான வேலைகிடையாது. இவருக்கு மூன்றுவிதமான நண்பர்கள். ஒருவர் தேநீர் கடை உரிமையாளர் சேகர், இன்னொருவர் போக்குவரத்து காவலர் விஷ்ணு, மற்றொருவர் ஆட்டோ டிரைவர் குமார் ஆவர். சிறுவயது முதலே பேனாவில் ஆரம்பித்து போடும் ட்ரெஸ் வரை பெஸ்ட்டான ஒன்றையே தேர்வுசெய்யும் கார்த்திக், தனது வருங்கால வாழ்க்கைத்துணைக்காக ஒரே நேரத்தில் மூன்று வித மனநிலை கொண்ட, மூன்றுவித சூழல்களில் வளர்ந்த பெண்ணைக் காதலிக்கிறார். அதில் இருவரை நிராகரித்து ஒரு பெண்ணை மணக்க விரும்புகிறார். அது நிறைவேறியதா இல்லையா என்பதே கதை.
இதில் பின்தங்கிய குடும்பத்தில் இருந்து வந்து தடகள வீராங்கனையாகவும், பெண்ணியம் பேசியும் திரியும் ஜோதி என்னும் பெண்ணை முதலாவதாக கார்த்திக் காதலிக்கிறார். பின், பல்லாயிரம் கோடிகளுக்குச் சொந்தமான, கொஞ்சம் அதிகாரத்திமிர் பிடித்த, காதல் தோல்வியில் உலவும் தேஜஸ்வின் என்னும் பெண்ணைக் காதலிக்கிறார். பின், பாரம்பரியத்தைக் கட்டிக் காப்பாற்றும் பெண்ணாக, ஒருவரை மட்டுமே காதலித்து கல்யாணம் செய்ய விரும்பும் பிரியா என்னும் பெண்ணையும் பார்க்கிறார். அதன்பின் அவரையும் காதலிக்கிறார், கார்த்திக்.
இதில் தேஜஸ்வினி, கார்த்திக் செய்யும் திருகு தாளங்களை அறிகிறார். பின், அவரை பழிவாங்கத்துடிக்கிறார். ஜோதிக்கும், கார்த்திக் பற்றி உண்மை தெரிகிறது. காதல் முறிகிறது. இறுதியில் ஜோதியின் ரவுடி அண்ணனை எதிர்கொள்கிறார், கார்த்திக்.
கடைசியாக ஒரு விபத்தில் சிக்கும் கார்த்திக்கை வந்து நலம் விசாரிக்க வருகிறார், பிரியா. அதில் கார்த்திக்கும் பிரியாவும் சேர்கின்றனர்.
அதில் கார்த்திக் வேடத்தில் நடிகர் விஷாலும், பிரியாவாக சாரா-ஜேன் டயஸும் நடித்திருந்தனர். மேலும் ஜோதியாக தனுஸ்ரீ தத்தாவும், தேஜஸ்வினி ரங்கநாதனாக நீது சந்திராவும் நடித்திருந்தனர். இதில் காமெடியில் ஈடுபட்ட குமாராக சந்தானமும், விஷ்ணுவாக சத்யனும், சேகர் என்னும் கதாபாத்திரத்தில் மயில்சாமியும் நடித்திருந்தனர். கார்த்திக்கின் வங்கி மேலாளர் அப்பாவாக மெளலி நடித்திருப்பார்.
இப்படம் பின், ஏக் கிலாடி 3 ஹசீனாயின் என்னும் பெயரில் டப் செய்துவெளியானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விநியோகம் செய்ததால், இப்படம் சன் டிவியில் அடிக்கடி விளம்பரப்படுத்தப்பட்டு, ஹிட்டும் ஆனது. ரிலீஸாகி 14ஆண்டுகள் ஆனாலும் இன்றும் இப்படம் பார்க்க ஃப்ரெஷ்ஷாக இருக்கிறது என்பதில் ஐயமில்லை.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்