Trisha Krishnan: ‘குந்தவையே வருக..’ செட்டில் பூங்கொத்து கொடுத்த சிரஞ்சீவி! - முழு விபரம் இங்கே!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Trisha Krishnan: ‘குந்தவையே வருக..’ செட்டில் பூங்கொத்து கொடுத்த சிரஞ்சீவி! - முழு விபரம் இங்கே!

Trisha Krishnan: ‘குந்தவையே வருக..’ செட்டில் பூங்கொத்து கொடுத்த சிரஞ்சீவி! - முழு விபரம் இங்கே!

Kalyani Pandiyan S HT Tamil
Feb 05, 2024 05:57 PM IST

மெகா ஸ்டார் சிரஞ்சீவி உடன் ஜோடி சேர்ந்த த்ரிஷா கிருஷ்ணன் !!

த்ரிஷா!
த்ரிஷா!

சிரஞ்சீவி தான் அடுத்ததாக நடிக்கும்  “விஸ்வம்பரா” படத்திற்காக, சில நாட்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள ஒரு பிரம்மாண்ட செட்டில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொண்டார். 

இந்த படத்திற்காக ஹைதராபாத்தில் மொத்தம் 13 பிரம்மாண்ட செட்களை படக்குழு அமைத்தது. இதற்கிடையில், இப்படத்தில்  சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்க த்ரிஷா கிருஷ்ணனை தயாரிப்பாளர்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.

நடிகை த்ரிஷா இன்று நடந்த படப்பிடிப்பில் கலந்துகொண்டார். மெகா ஸ்டார் சிரஞ்சீவி, இயக்குநர் வசிஷ்டா மற்றும் தயாரிப்பாளர்கள் அனைவரும் இணைந்து நடிகை திரிஷாவுக்கு வரவேற்றனர். 

முன்னதாக நடிகை திரிஷா, சிரஞ்சீவியுடன் “ஸ்டாலின்” என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறார். தற்போது “விஸ்வம்பரா” படத்தில் சிரஞ்சீவியுடன் மீண்டும் இணைந்திருக்கிறார். 

UV கிரியேஷன்ஸ் சார்பில் விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படம், சிரஞ்சீவி திரை வாழ்க்கையில் மிகப்பெரும் பொருட்செலவில் உருவாகும் திரைப்படமாக உருவாவதாக சொல்லப்படுகிறது. 

இப்படத்திற்கு எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார். ஏ.எஸ்.பிரகாஷ் தயாரிப்பு வடிவமைப்பாளராகவும், சுஷ்மிதா கொனிடேலா ஆடை வடிவமைப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர். ஸ்ரீ சிவசக்தி தத்தா மற்றும் சந்திரபோஸ் ஆகியோர் பாடலாசிரியர்களாகவும், ஸ்ரீனிவாஸ் கவிரெட்டி, காந்தா ஸ்ரீதர், நிம்மகத்தா ஸ்ரீகாந்த் மற்றும் மயூக் ஆதித்யா ஆகியோர் ஸ்கிரிப்ட் அசோசியேட்டுகளாகவும் பணியாற்றுகின்றனர்.

2025 ஆம் ஆண்டு சங்கராந்தி கொண்டாட்டமாக ஜனவரி 10 ஆம் தேதி இப்படத்தை வெளியிடுவதாக தயாரிப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.