ரசிகர்களின் அமுல் பேபி..ஆடையில்லாமல் நடித்த சர்ச்சை நாயகி! தமிழ் சினிமாவில் ஜொலித்த அவ்விட தேசத்து பெண் அமலாபால்
HBD Amala Paul: ஆடை என்ற படத்தில் ஆடையில்லாமல் நடித்து சர்ச்சையை கிளப்பியவர் நடிகை அமலாபால். கேரளா வருகையாக தமிழ் சினிமாவில் ஜொலித்த நடிகையாக இருந்து வரும் அமலாபால் சமீபத்தில் தாயாகி இருக்கும் நிலையில், குழந்தை மற்றும் குடும்பம் என செட்டிலாகியுள்ளார்.

ஆடையில்லாமல் நடித்த சர்ச்சை நாயகி! தமிழ் சினிமாவில் ஜொலித்த அவ்விட தேசத்து பெண் அமலாபால்
கேரளாவில் இருந்து தமிழுக்கு வந்து முன்னணி நடிகையாக ஜொலித்தவர்களில் முக்கியமானவர் நடிகை அமலாபால். தாய்மொழியான மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில் ஹீரோயினாக நடித்திருக்கும் இவர் இந்த வெப்சீரிஸ்களிலும் நடித்து முத்திரை பதித்துள்ளார்.
சமீபத்தில் தாயான அமலாபால் நடிப்பில் இருந்து விலகி இருந்தாலும், சமூக வலைத்தளங்களின் பதிவு மூலம் ரசிகர்களுடன் எப்போது தொடர்பிலேயே இருந்து வருகிறார்.
அமலாபால் சினிமா பயணம்
கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த அமலாபால், மிடில் கிளாஸ் கிறிஸ்தவ குடும்பத்தை சேர்ந்தவராக உள்ளார். பள்ளி, கல்லூரி படிப்பை சமத்து பெண்ணாக முடித்த இவர் சினிமா மீதான ஆர்வத்தால் நடிகையாக விரும்பினார்.