Tamil News  /  Entertainment  /  South Indian Movie Cinema Actor Raghuvaran 14th Death Anniversary Today
வில்லன், குணச்சித்திர நடிகர் ரகுவரன் நினைவு நாள் இன்று
வில்லன், குணச்சித்திர நடிகர் ரகுவரன் நினைவு நாள் இன்று

Raghuvaran: “I Know”, "மிஸ்டர் அம்மையப்பன்"! மறக்க முடியுமா ரகுவரன் வில்லதனத்தை

19 March 2023, 6:40 ISTMuthu Vinayagam Kosalairaman
19 March 2023, 6:40 IST

ரகுவரன் என்றால் வில்லன் என்பதையும் கடந்த பாசமிகு அண்ணன், கண்டிப்பான அப்பா, நண்பன் என இவர் நடிக்காத கேரக்டர்களே இல்லாத அளவு தனது அற்புத நடிப்பால் ரசிகர்களின் மனங்களில் குடிபுகுந்துள்ளார். மார்க் ஆண்டனி அரங்கநாதன், சிதம்பரம் என இந்த பெயர்களை கேட்டால் சட்டென ரகுவரன் நினைவுக்கு வருவதே இதற்கு சாட்சி

கேரளாவை பூர்வீகமாக கொண்ட ரகுவரன் 1980 முதல் 2009 வரை தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக இவர் அறிமுகமானாலும், தனது வித்தியாசமான குரல் மாடுலேஷன், ஸ்டைல், லுக் போன்றவற்றின் மூலம் வில்லன் நடிகராக பெயர் பெற்றார்.

ட்ரெண்டிங் செய்திகள்

அதேசமயம் வில்லன் என்று மட்டுமில்லாமல் அண்ணன், அப்பா, போலீஸ், டாக்டர் போன்ற வித்தியாசமான குணச்சித்தர வேடங்களில் தோன்றி தனது அற்புதமான நடிப்பால் முத்திரை பதித்தார். இவரது எந்த கதாபாத்திரத்தில் நடித்து இதுபோன்றதொரு கேரக்டர் வாழ்க்கையில் சந்தித்து விடக்கூடாது என ஆத்திரத்தையும், அல்லது இதுபோன்தொரு நபர் நம் வாழ்க்கையிலும் கிடைக்க மாட்டாரா என்கிற ஆர்வத்தை ஏற்படுத்துவதில் ரகுவரன் என்கிற மகா நடிகனின் ஸ்பாஷிலிட்டி.

ரகுவரன் நடித்த ஒவ்வொரு படங்களில் அவரது கதாபாத்திரம், நடிப்பு திறன் பற்றியும் பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் ஒளிந்துள்ளது. கேஎஸ் ரவிக்குமாரின் அறிமுக படமான புரியாத புதிர் படத்தில் ஒரு சேடிஸ்ட் கனவனாக நடித்திருப்பார் ரகுவரன்.

மனைவி மீது சந்தேகம் கொள்ளும் அவர், ஒரு காட்சியில் மனைவி ரேகாவை வேறொரு ஆணுடன் இருப்பதை தவறாக புரிந்துகொண்டு "I know" என்ற ஒற்றை டயலாக்கை சுமார் 40 முறைக்கு மேல் வெவ்வேறு மாடுலேஷனில் சொல்லி அந்த கதாபாத்திரத்தின் குருர தனத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

புரியாத புதிர் "I Know" காட்சியில் ரகுவரன்
புரியாத புதிர் "I Know" காட்சியில் ரகுவரன்

ரகுவரன் என்றாலே இந்த காட்சி பற்றி பேசாமல் கடக்க முடியாத அளவு அவரது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியத்துவமான படமாக இது அமைந்தது. இந்த படத்தின் ஷுட்டிங்கின்போது ஒரு காட்சி குறித்து விளக்கம் அளித்துவிட்டு இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் சென்றுவிட, பின்னர் ஷாட் ரெடி என அழைத்தும் ரகுவரன் வரவில்லை. என்னவென்று சென்று இயக்குநர் பார்த்தபோது கழுத்தில் கத்தி முனையை வைத்து தனக்கு தானே ரிகர்சல் செய்து கொண்டிருந்தாராம் ரகுவரன்.

இதைக்கண்டு ஷாக்கான இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார், உடனடியாக ரகுவரனை கத்தியடமிருந்து விளக்கி ஆசுவாசப்படுத்தினார். அப்போதும் அவர் சொன்ன கதாபாத்திரம் இப்படிதான் இருக்க வேண்டும் என கேஎஸ் ரவிக்குமாரிடம் சொன்ன சம்பவம், நடிப்பு மீது ரகுவரனுக்கு இருக்கும் டெடிகேஷனின் சான்று.

ரகுவரனின் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நினைவுகூற தக்கவையாக சம்சாரம் அது மின்சாரம் படத்தின் சிதம்பரம், ஆஹா படத்தின் ரகு, லவ்டுடே சந்திரசேகர், முகவரி சிவா என சொல்லிக்கொண்டே போகலாம். கடைசியாக தனுஷுடன் இணைந்து யாரடி நீ மோகினி படத்தில் உடல்நிலை சரி இல்லாதபோதிலும் தனது தனித்துவம் மாறாத நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கண்களை குளமாக்கினார்.

சம்சாரம் அது மின்சாரம் படத்தில் ரகுவரன்
சம்சாரம் அது மின்சாரம் படத்தில் ரகுவரன்

மிகச் சிறந்த நடிகனாக வலம் வந்த ரகுவரன் அளவுக்கு மீறிய குடிப்பழக்கத்தினால், உடல் உறுப்புகள் செயலிழந்து மார்ச் 19, 2008இல் உயிரிழந்தார். தனது மாறுபட்ட நடிப்பால் எப்போதுமே ஷாக் கொடுக்கும் ரகுவரன், 50 வயதுக்கு முன்னரே இந்த மண்ணை விட்டு சென்று இறப்பிலும் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார்.

டாபிக்ஸ்