அகில் அக்கினேனி - ஜைனப் ரவ்தீஜ் வரவேற்பு நிகழ்ச்சியில் குவிந்த தென்னிந்திய பிரபலங்கள்! வைரல் புகைப்படங்கள் உள்ளே!
அகில் அக்கினேனி மற்றும் ஜைனப் ரவ்தீஜ் ஆகியோரின் திருமண வரவேற்பு தென்னிந்திய திரைப்படத் துறையினரின் முன்னிலையில் ஒரு பிரமாண்டமான விழாவாக நடைபெற்றது.

நாகார்ஜுனா மற்றும் அமலா அக்கினேனியின் மகனும் நடிகருமான அகில் அக்கினேனி, தனது காதலி ஜைனப் ரவ்தீஜை வெள்ளிக்கிழமை நெருக்கமான உறவுகள் முன்னிலையில் ஹைதராபாத்தில் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தைத் தொடர்ந்து அக்கினேனி குடும்பத்தினர் ஒரு ஆடம்பர வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தினர். இதில் தென்னிந்திய திரைப்படத் துறையின் மிகப்பெரிய நட்சத்திரங்கள் உட்பட பல பிரபலங்கள் கலந்துகொண்டு புதுமணத் தம்பதியினரை வாழ்த்தினர்.
பிரமாண்ட வரவேற்பு
அகில் அக்கினேனி மற்றும் ஜைனப் ரவ்தீஜ் திருமண வரவேற்பு நிகழ்ச்சி அவர்களுக்கு சொந்தமான அன்னபூர்ணா ஸ்டுடியோவின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக பக்கத்தில் இருந்து பிரமாண்ட வரவேற்பு புகைப்படங்கள் பகிரப்பட்டன. அதில் அகில் வெள்ளை நிற உடையில் ஸ்டைலாகவும், அவரது மனைவி ஜைனப் பளபளக்கும் வைர நகைகளுடன் கூடிய பீச் நிற உடையிலும் விருந்தினர்களை வரவேற்றனர்.