இனி சினிமாவில் நடிக்கனும்ன்னா இது ரொம்ப முக்கியமாம்.. நடிகர் சங்கத்தில் இருந்து பறந்து வந்த உத்தரவு..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  இனி சினிமாவில் நடிக்கனும்ன்னா இது ரொம்ப முக்கியமாம்.. நடிகர் சங்கத்தில் இருந்து பறந்து வந்த உத்தரவு..

இனி சினிமாவில் நடிக்கனும்ன்னா இது ரொம்ப முக்கியமாம்.. நடிகர் சங்கத்தில் இருந்து பறந்து வந்த உத்தரவு..

Malavica Natarajan HT Tamil
Published Jun 14, 2025 01:07 PM IST

தமிழ் சினிமாவில் இனி திரைப்படத் துறை சார்ந்த சங்கங்களில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே நடிக்க வாய்ப்பு வழங்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது.

இனி சினிமாவில் நடிக்கனும்ன்னா இது ரொம்ப முக்கியமாம்.. நடிகர் சங்கத்தில் இருந்து பறந்து வந்த உத்தரவு..
இனி சினிமாவில் நடிக்கனும்ன்னா இது ரொம்ப முக்கியமாம்.. நடிகர் சங்கத்தில் இருந்து பறந்து வந்த உத்தரவு..

ஒத்துழைப்புக்கு நன்றி

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், "அன்புடையீர் வணக்கம். திரைத்துறையில் நடிகர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நட்புறவு பாலமாக இருந்து தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு உறுதுணையோடு ஒருமித்த ஆதரவு அளித்து வகுவதற்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

சங்கத்தினருக்கு வேலை வாய்ப்பு

தென்னிந்திய நடிகர் சங்க வளாகத்தில், 21.02.2025 தேதியன்று நடந்த கூட்டத்தில் வருகை புரிந்து மதிப்பு வாய்ந்த கருத்துகளை பகிர்ந்து கொண்டீர்கள். திரைப்படத்துறை சார்ந்த மற்ற அனைத்து சங்கங்களிலும் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே வேலை வாய்ப்பினை வழங்குவது போல நடிகர் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளவர்களுக்கு மட்டுமே திரைப்படங்களில் நடிப்பதற்கான முன்னுரிமை வழங்கப்படவேண்டும்.

உறுப்பினர் அட்டை கட்டாயம்

இனிவரும் காலங்களில். திரைப்படங்களில் கேமிரா முன்நின்று நடிக்கும் நடிகர் / நடிகையர்கள் மற்றும் திரைக்காட்சிகளில் வரும் துணை நடிகர் / நடிகையர்கள் அனைவரும் நடிகர் சங்க உறுப்பினர் அட்டை பெற்றவராகத்தான் இருக்கவேண்டும்.

சேர்க்கை கட்டணம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 'தொழில்முறை ஆயுள் உறுப்பினராக சேர்வதற்கு சேர்க்கை கட்டணமாக வசூலிக்கப்படும் தொகை மிகவும் ஏழ்மை நிலையிலுள்ள உறுப்பினர்களின் மகுத்துவம் கல்வி மற்றும் இதர உதவிகளுக்கும். ஈமசடங்கிற்கும் செலவிடப்பட்டு வருகிறது என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவருகிறோம்.

20 ஆம் தேதிக்குள்..

இதுவரை சங்கம் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் நடித்துக்கொண்டிருப்பவர்களிடம் அதனுடைய பயனை எடுத்துரைத்து 20.06.2025-க்குள் உறுப்பினர் அட்டை பெறும்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு தங்களுடைய மேலான ஆதரவினை அளித்து ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்கிறோம். நன்றி" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பொதுச் செயலாளர் அறிவிப்பு

இந்த அறிவிப்பை, நடிகர் சங்க செயலாளர் விஷால் அறிவித்துள்ளார். நடிகர் சங்கத்தில் இருப்போருக்கு முன்னுரிமை கொடுத்து நடிக்க வாய்ப்பு வழங்கும் நோக்கில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் சங்க கட்டடமும் கல்யாணமும்

நடிகர் விஷால் நடிகர் சங்க பொருளாளராக பொறுப்பேற்ற பின், நடிகர் சங்கம் கட்டிய பிறகே திருமணம் செய்துகொள்வதாக அறிவித்தாார். இந்த நிலையில், நடிகர் சங்க கட்டட பணிகள் விரைவில் முடிவடைய உள்ளதாகவும் வரும் ஆகஸ்ட் மாதத்தில் கட்டடம் திறக்கப்பட்ட பின் அவர் தன் காதலி சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்வதாகவும் அறிவித்தார்.