அரபு நாட்டை அசர வைத்த தமிழச்சி..சினிமா, வெப் சீரிஸில் கலக்கி வரும் இளைஞர்கள் கனவுக்கன்னி நிவேதா பெத்துராஜ்
ஐக்கிய அரபு அமீரகத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்று அரபு நாட்டை அசர வைத்த தமிழச்சியாக இருப்பவர் நடிகை நிவேதா பெத்துராஜ். சினிமா, வெப் சீரிஸில் என பிஸியாக இருந்து வரும் இளைஞர்களின் கனவுக்கன்னியாக திகழ்கிறார்.
தமிழ்நாட்டை சேர்ந்த நடிகையாக இருந்தாலும் தெலுங்கு, இந்தி உள்பட பிற மொழி சினிமாக்களிலும் தனது திறமையை வெளிபடுத்தி புகழ் பெற்ற நடிகைகளுள் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நிவேதா பெத்துராஜ். தென்னிந்திய சினிமாக்களில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நிவேதா பெத்துராஜ், இளைஞர்கள் மனம் கவர்ந்த நாயகியாக திகழ்கிறார்.
சினிமா பயணம்
மதுரையை பூர்வீகமாக கொண்ட நிவேதா பெத்துராஜ் குடும்பம், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் சில காலம் வசித்தது. அங்குதான் நிவேதாவின் ஆரம்ப கால பள்ளி படிப்பை முடித்தார். பின்னர் துபாய்க்கு குடிபெயர அங்குள்ள பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்து, ஸ்காட்லாந்தில் உள்ள எடின்பர்க் பல்கலைகழகத்தில் மேனேஜ்மெண்ட் படித்து முடித்தார்.
மாடலிங் மீது ஆர்வம் ஏற்பட்டு ஃபேஷன் ஷோக்களில் பங்கேற்று வந்த நிவேதா, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற அழகிப்போட்டியில் மிஸ் இந்தியா யுஏஇ பட்டம் வென்று வாகை சூடினார். தொடர்ந்து மிஸ் இந்தியா வேர்ட்வைடு 2015 போட்டியிலும் பங்கேற்று பைனலிஸ்டாக வந்தார்.
மாடலாக வலம் வந்த இவரை 2016இல் வெளியான ஒரு நாள் கூத்து படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக்கினார் இயக்குநர் நெல்சன் வெங்கடேசன், படத்தில் பெண் ஐடி ஊழியராக இவரது மெச்சூரான நடிப்பை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. இதன் பின்னர் 2017இல் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக பொதுவாக என் மனசு தங்கம் என்ற படத்தில் நடித்தார். இந்த படத்துக்கு பின்னர் உதயநிதி ஸ்டாலினுடன் கிசுகிசுவில் சிக்கினார்.
தெலுங்கில் அறிமுகம்
2017இல் தெலுங்கில் உருவான மென்டல் மதிலோ படம் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அடுத்த ஆண்டில் டிக் டிக் டிக் என்ற படத்தில் மிதமான கவர்ச்சி வேடத்தில் தோன்றி ரசிகர்களை கிறங்கடித்தார்.
தொடர்ந்து தமிழ், தெலுங்கு என மாறி மாறி நடித்து வந்த நிவேதா, ரசிகர்களை கவரும் விதமான நடிப்புடன் அளவான கவர்ச்சி என பாலிசியை கடைப்பிடித்து வந்தார்.
இமேஜை மாற்றை ஒற்றை பாடல்
2021இல் பிரபு தேவா ஜோடியாக இவர் நடித்த பொன் மாணிக்கவேல் என்ற படம் வந்தது. அதுவரை ஹோம்லியான ஹீரோயின் என்று இருந்த இமேஜை, இந்த படத்தில் இடம்பிடித்த உதிரா என்ற பாடலில் தவிடுபொடியாக்கினார். பிரபுதேவாவுடன் நெருக்கமான காட்சிகளில் தோன்றி ரசிகர்களை சுடேற்றினார்.
தொடர்ந்து 2023இல் வெளியான காலா என்ற டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் வெப்சீரிஸிலும் லிப் லாக், குளியலறை காட்சிகளில் தோன்றி கவர்ச்சி விருந்து படைத்தார். இதேபோல் வெங்கட் பிரபு இயக்கத்தில் கவர்ச்சியில் தாராளம் காட்டி இவர் நடித்திருக்கும் பார்ட்டி என்ற படம் இன்னும் திரைக்கு வராமல் இருக்கிறது.
சமூக வலைத்தளங்களிலும் ட்ரெண்டாக இருந்து வரும் நிவேதா பெத்துராஜ் அவ்வப்போது போட்டோஷுட் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களையும் குஷிப்படுத்தி வருகிறார். இன்ஸ்டாவில் இவரை 4 மில்லியனுக்கும் அதிகமானோர் ஃபாலோ செய்து வருகிறார்கள். தன்னை சுற்றி பல்வேறு சர்ச்சைகள், வதந்திகள் வலம் வந்த போதிலும் அதை பற்றி பெரிதாக கண்டுகொள்ளாமல் சினிமா, வெப் சீரிஸ் என பிஸியான நடிகையாக திரையுலகில் ஜொலித்து வரும் நிவேதா பெத்துராஜ் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.