Vijay Politics: மாஸ்டர் ஸ்கெட்ச்.. கட்சி பெயர் ரெடி.. அரசியலில் சூறாவளியாக களமிறங்க தயாரான தளபதி விஜய்!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Vijay Politics: மாஸ்டர் ஸ்கெட்ச்.. கட்சி பெயர் ரெடி.. அரசியலில் சூறாவளியாக களமிறங்க தயாரான தளபதி விஜய்!

Vijay Politics: மாஸ்டர் ஸ்கெட்ச்.. கட்சி பெயர் ரெடி.. அரசியலில் சூறாவளியாக களமிறங்க தயாரான தளபதி விஜய்!

Aarthi Balaji HT Tamil
Jan 29, 2024 07:16 AM IST

Vijay Politics Entry: விஜய் தனது கட்சிக்கு மூன்று பெயரை யோசித்து வைத்து இருக்கிறார்.

விஜய்
விஜய்

ஒரு மாதத்தில் தேர்தல் ஆணையத்தில் இந்த அமைப்பு பதிவு செய்யப்படும். மூன்று மணி நேரம் நடந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். "பொதுச் செயலாளர் (பஸ்ஸி என் ஆனந்த்) மற்றும் பொருளாளர் உட்பட பிற பதவி வகித்தவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கும் பொதுக்குழு ஒப்புதல் அளித்தது" என்று அந்த வட்டாரம் தெரிவித்தது. வரும் தேர்தலில் நடிகர் விஜய்யின் கட்சி போட்டியிட வேண்டும் என்று ஆதரவாளர்கள் விரும்புகின்றனர் , "அங்கீகரிக்கப்பட்ட சட்டவிதிகளுடன் கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இது ஒப்புதல் அளித்தது" என்று அந்த வட்டாரம் கூறியது.

சமீபத்திய தகவலின் படி விஜய் தனது கட்சிக்கு மூன்று பெயரை யோசித்து வைத்து இருக்கிறார். தமிழக முன்னேற்ற கழகம், வெல்லும் தமிழக கழகம், தமிழக மக்கள் ஜனநாயக கழகம் ஆகும். அனைத்திலும் தமிழக கழகம் என்ற வார்த்தை மட்டும் பொதுவாக இருக்க வேண்டும் என்பதில் கூடுதல் கவனம் செலுத்தினார். அடுத்த மாதம் அவர் கட்சி தொடங்க இருப்பதாகவும் அப்போது பெயரை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்சி தொடங்கிய பிறகு முழு நேர அரசியல்வாதியாக மாறுவாரா? அல்லது படம் நடிப்பாரா? என்ற தகவல் இன்னும் வெளியாகவில்லை.

நடிகர் விஜய் தனது பிளாக் பஸ்டர்களுடன் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது திரைப்பட வாழ்க்கைக்கு விடைபெறும் முன் தனது கடைசி ஸ்கிரிப்ட் - தளபதி 69 - ஒரு பிரபலமான தயாரிப்பு நிறுவனத்துடன் ஆராய்ந்து வருவதாக கூறப்படுகிறது. 

வெங்கட் பிரபுவுடன் அவரது சமீபத்திய படமான தளபதி 68, 'தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்' ஜூலை மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே 60% படப்பிடிப்பு நடந்து முடிந்து இருக்கிறது.

விஜய் தனது ரசிகர் மன்றத்தை ஒரு பொது நல அமைப்பாக மாற்றி, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஒரு அரசியல் கனவை வளர்த்து வருகிறார். அவரது அரசியல் பிரவேசத்திற்காக அமைப்பை சேர்ந்தவர்கள், இலவச உணவு விநியோகம், கண் தானம், இரவு நேர ஆய்வு மையங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். 

10, 12 வகுப்புகளில் முதலிடம் பெற்றவர்களை விஜய் விழாவாக ஏற்பாடு செய்து கெளரவித்தார். மேலும் பி.ஆர்.அம்பேத்கர், பெரியார் ஈ.வி.ராமசாமி மற்றும் கே.காமராஜ் போன்ற தலைவர்கள் மற்றும் அவர்களின் இலட்சியங்களைப் பற்றி படிக்குமாறு மாணவர்களை வலியுறுத்தினார். கன மழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு அவர் சமீபத்தில் சென்று, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்தார். 

தான் அரசியல் வர போகிறேன் என மறைமுகமாக சமீப காலமாக சொல்லி கொண்டே இருந்த விஜய் அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக கட்சி பெயர், கட்சியின் சின்னம் ஆகியவற்றை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

 

https://www.youtube.com/@httamil

 

Google News: https://bit.ly/3onGqm9

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.