செளந்தர்யா முதல் சில்க் வரை.. தொடரும் மரண மர்மம்.. இறந்த பின்னரும் சர்ச்சையை சந்தித்த சில நடிகைகளின் பட்டியல்!
தமிழ் சினிமாவில் இறந்த பின்னரும் சர்ச்சையில் சந்தித்த சில நடிகைகள் பற்றி இங்கே பார்க்கலாம்.

இரண்டு தசாப்தங்களுக்கு பிறகு செளந்தர்யாவின் விபத்து தூசித்தட்டப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையில், அவரைப்போன்று இறந்த பின்னரும் சர்ச்சையில் சிக்கிய நடிகைகள் சிலரை இங்கே பார்க்கலாம்.
செளந்தர்யா
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த விமான விபத்தில் செளர்ந்தர்யாவும் அவரது சகோதரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது செளர்ந்தர்யாவிற்கு 31 வயது.
அப்போது அவர் கர்ப்பிணியாகவும் இருந்தார். இந்த நிலையில், நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அவரை பிரபல நடிகர் மோகன்பாபு கொலை செய்து அதனை விபத்தாக சித்தரித்து விட்டதாக சமூக ஆர்வலர் எடுரு கட்லா சிட்டிமல்லு என்பவர் புகார் அளித்தார்.
அந்த புகாரில் செளந்தர்யாவிற்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை மோகன்பாபு கேட்டார். அதற்கு செளந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுப்பு தெரிவித்த காரணத்தினால், இருவரையும் கொலை செய்த மோகன்பாபு, அதனை ஹெலிகாப்டர் விபத்து போல் சித்தரித்துவிட்டார்.’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாற்றிய செளந்தர்யாவின் கணவர் ரகு அந்த தகவல்களில் உண்மையில்லை என்று கூறியிருக்கிறார்.
விஜே சித்ரா
சீரியல் நடிகை சித்ரா 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 9 ஆம் தேதி, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தற்கொலைக்கு காரணம் கணவர் ஹேமந்த்தும், ஹேமந்தின் நண்பரான இமானுவேல் என பரபரப்பான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
சித்ராவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை, திருவள்ளூர் மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நடிகை சித்ரா தற்கொலை வழக்கில் நடிகை சித்ராவின் கணவர் ஹேம்நாத் நிரபராதி என்று திருவள்ளூர் விரைவு மகிளா நீதிமன்ற நீதிபதி ரேவதி தீர்ப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் வழங்கினார். அதனை தொடர்ந்து மன உளைச்சலில் இருந்த சித்ராவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார்.
சில்க் ஸ்மிதா!
தமிழ் சினிமாவின் கவர்ச்சி நடிகைகளில் மிக் முக்கியமானவர் சில்க் ஸ்மிதா;17 வருடங்களில் 5 மொழிகளில், 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த இவர், வினுசக்ரவர்த்தியின் வண்டிச்சக்கரம் படத்தில், மதுபான கடையில் வேலை பார்க்கும் பெண் கதாபாத்திரத்தில் நடித்து தமிழில் அறிமுகமானார்.
அந்தப்படத்தில் இடம்பெற்ற கதாபாத்திரத்தின் பெயரான ‘சில்க்’ என்ற பெயரே அவரின் அடைமொழியாக மாறிவிட்டது. பல படங்களில் நடித்த இவர் 1996ம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தனது தன்னுடைய வீட்டில் உயிரிழந்து கிடந்தார். அவரது இறப்பு குறித்த மர்மங்கள் இன்று வரை உலா வந்து கொண்டிருக்கின்றன.
நடிகை மோனல்
முன்னணி நடிகையான சிம்ரனின் தங்கை என்ற அந்தஸ்துடன் தமிழில் களம் இறங்கியவர் மோனல். முதல் படத்தில் குணாலுடன் ஜோடி சேர்ந்த இவருக்கு அதில் இடம் பெற்ற பார்வை ஒன்றே போதுமே பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத்தந்தது.
தொடர்ந்து, பத்ரி, சமுத்திரம், விவரமான ஆளு, சார்லி சாப்ளின் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கெரியர் நன்றாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த 2002 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சென்னையில் உள்ள தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவருக்கு வெறும் 21 வயது.
பிரபல நடன இயக்குனர் கலாவின் தம்பி பிரசன்னாவை மோனல் விரும்பி வந்ததாகவும், ஆனால் கலா மாஸ்டர் குடும்பத்தார் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தாகவும், இதனால் பிரசன்னா மோனலை விட்டு விலகியதாகவும் சொல்லப்பட்டது. இதை தாங்க முடியாத மோனல், கடும் மன உளைச்சலுக்கு ஆளானதாகவும் அதன் காரணமாகவே தற்கொலை முடிவை எடுத்ததாகவும் கூறப்பட்டது.
நடிகை ஷோபா
குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய சிறுமியாகும் வரை பல்வேறு படங்களில் நடித்து வந்த ஷோபா பின்னர் மலையாளத்தில் 1978இல் வெளியான உத்ராதா ராத்திரி, என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
அதே ஆண்டில் பாலசந்தர் இயக்கத்தில் தமிழில் வெளியான நிழல் நிஜமாகிறது படம் மூலம் இங்கும் ஹீரோயினாக அறிமுகமானார். தொட்ர்ந்து ஒரு விடுகதை ஒரு தொடர் கதை, ஏனிப்படிகள், அழியாத கோலங்கள், பசி, மூடுபனி, முள்ளும் மலரும் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த ஷோபா தீடீரென்று தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அவரது இறப்பு குறித்து ராஜகம்பீரன் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில், ‘பாலு, ஈழத்திலிருந்து இந்தியாவிற்கு அகதியாக வந்தவர். அப்போது இந்தியாவில் அவருக்கான சூழல் எப்படி இருக்கும் என்பதை நீங்கள் யூகித்துக் கொள்ளலாம். இந்த நிலையில் தான் ஷோபாவிடம் பாலு மகேந்திரா, ஒருத்தியை கரம் பிடித்து விட்டு உன்னை காதலித்ததே தவறு. அப்படி ஒரு தவறு நிகழ்ந்திருக்கும் பட்சத்தில், நான் அவளை கைவிட்டால் எப்படி மனசாட்சி இடம் கொடுக்கும் என்று கேள்வி கேட்டார்.
ஆனாலும், ஷோபா விட்டுக் கொடுக்காமல் பிடிவாதமாக நின்றார். தொடர்ந்து, நீங்கள் உங்களது முதல் மனைவியை தேடி போனீர்கள் என்றால், இங்கே நடப்பதே வேறு என்று சொல்லி ஆரம்பித்து விட்டார். பாலு மகேந்திரா அதை கண்டுகொள்ளாமல், அந்த இரவு முதல் மனைவியின் வீட்டிற்கு சென்றார். அந்த இரவு ஷோபா தன்னுடைய வீட்டில் துயரம் தாளாமல் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதில் ஏற்பட்ட ஆற்றமையும், தவிப்புமே அவரை மூன்றாம் பிறை படத்தை உருவாக்க வைத்தது. இந்த பிரச்சினையில் இருந்து அவரை எம்.ஜி.ஆர் காப்பாற்றியதாக தகவலும் உண்டு.’ என்று பேசினார்.
ஸ்ரீதேவி
ஸ்ரீதேவி 1963 இல் ஸ்ரீ அம்மாயங்கர் அய்யப்பன் என்ற பெயரில் பிறந்தார். பின் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, 16 வயதினிலே, வறுமையின் நிறம் சிகப்பு, ஜானி. மூன்றாம் பிறை போன்ற படங்களில் நடித்து மக்கள் மனதை கொள்ளையடித்து கனவுக் கன்னியாக திகழ்ந்தார்.
அதைத் தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்ற ஸ்ரீதேவி சாந்தினி, லம்ஹே, மிஸ்டர் இந்தியா, சால்பாஸ், நாகினா, சத்மா மற்றும் இங்கிலீஷ் விங்கிலீஷ் போன்ற படங்களில் தன் முத்திரையை பதித்தார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடப் படங்களிலும் தனது அசாதாரண நடிப்பால் தடம் பதித்தார். இவரது கடைசிப் படம் மாம் படத்தில் நடித்ததிற்காக இவருக்கு தேசிய விருது ஸ்ரீதேவியின் மறைவிற்குப் பின் வழங்கப்பட்டது.
ஸ்ரீதேவி மறைவு
நடிகை ஸ்ரீதேவி 2018 பிப்ரவரி 24ம் தேதி அன்று துபாயில் ஒரு குடும்ப விழாவில் கலந்து கொள்ளச் சென்றிருந்தபோது தண்ணீர் தொட்டிக்குள் இறந்து கிடந்தார். அவர் எப்படி இறந்தார் என்ற மர்மம் இப்போதும் தொடர்கிறது.
