Soundarya: 6 ஏக்கர் நிலபஞ்சாயத்து..ஸ்கெட்ச் போட்டு கொலை செய்தாரா மோகன்பாபு? - செளந்தர்யா கணவர் அறிக்கை சொல்வதென்ன?
'எனக்கு மோகன்பாபுவை கிட்டத்தட்ட 25 வருடங்களாக தெரியும். எனக்கும், அவருக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. செளந்தர்யாவுக்கும், மோகன்பாபுவுக்கும் இடையே' - செளந்தர்யா கணவர் அறிக்கை சொல்வதென்ன?

செளந்தர்யா குறித்தான மோகன் பாபு மீது வைக்கப்பட்டு இருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு அவர் கணவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார்.
தவறான தகவல்கள்
இது குறித்து செளந்தர்யாவின் கணவர் ரகு வெளியிட்ட அறிக்கையில் ‘ கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் இருக்கும் சொத்தை தொடர்புபடுத்தி மோகன்பாபு மற்றும் செளந்தர்யா குறித்து தவறான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.
அதை நான் முழுவதுமாக மறுக்கிறேன். எனக்கு மோகன்பாபுவை கிட்டத்தட்ட 25 வருடங்களாக தெரியும். எனக்கும், அவருக்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. செளந்தர்யாவுக்கும், மோகன்பாபுவுக்கும் இடையே எந்த நிலத்தகராறும் இல்லை.
மோகன்பாபு சட்டவிரோதமாக செளந்தர்யாவிடம் இருந்து நிலத்தை பெற்றுக்கொண்டதாக வெளிவரும் வதந்திகளில் உண்மை இல்லை. எனக்குத் தெரிந்து, மோகன்பாபு மற்றும் செளந்தர்யா இடையே நிலம் தொடர்பாக எந்த பண பரிவர்த்தனைகளும் இருந்ததில்லை.’ என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
கர்ப்பிணியாக இருந்தார்
கடந்த 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி நடந்த விமான விபத்தில் செளர்ந்தர்யாவும் அவரது சகோதரரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். அப்போது செளர்ந்தர்யாவிற்கு 31 வயது. அப்போது அவர் கர்ப்பிணியாக இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நடிகை செளந்தர்யாவின் மரணம் விபத்தல்ல, அவரை பிரபல நடிகர் மோகன்பாபு கொலை செய்து அதனை விபத்தாக சித்தரித்து விட்டதாக சமூக ஆர்வலர் எடுரு கட்லா சிட்டிமல்லு என்பவர் புகார் அளித்தார்.
இது குறித்து கம்மம் மாவட்ட ஆட்சியரிடம் அவர் அளித்த புகாரில், ‘ஹைதராபாத் ஜல்லேபள்ளியில் இருந்த செளந்தர்யாவிற்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை மோகன்பாபு கேட்டார். அதற்கு செளந்தர்யாவின் சகோதரர் அமர்நாத் மறுப்பு தெரிவித்த காரணத்தினால், இருவரையும் கொலை செய்த மோகன்பாபு, அதனை ஹெலிகாப்டர் விபத்து போல் சித்தரித்துவிட்டார். சௌந்தர்யா இறந்த பின், அவரது நிலத்தை ஆக்கிரமித்த மோகன்பாபு அதில்விருந்தினர் மாளிகை கட்டினார். அதனை அரசாங்கம் உடனடியாகக் கையகப்படுத்த வேண்டும்” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
செளந்தர்யாவின் பிறப்பும் குடும்பமும்
நடிகை சௌந்தர்யா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
சௌந்தர்யா 1972 ஆம் ஆண்டு ஜூலை 18 ஆம் தேதி கர்நாடக மாநிலம் கோலாரில் பிறந்தார். அவரது இயற்பெயர் சௌமியா சத்யநாராயண். அவரது தந்தை கே.எஸ். சத்யநாராயணன் ஒரு கன்னட திரைப்பட எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் ஆவார். அவரது தாயார் மஞ்சுளா. சௌந்தர்யா பெங்களூரில் உள்ள ஒரு கல்லூரியில் எம்பிபிஎஸ் படித்தார்.
செளந்தர்யாவின் திரைப் பயணம்
1992 ஆம் ஆண்டு கன்னடத் திரைப்படமான 'கந்தர்வா' மூலம் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
1993 ஆம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான 'ராஜேந்திரடு கஜேந்திரடு' மூலம் தெலுங்குத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
1993 ஆம் ஆண்டு 'பொன்னுமணி' என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
1996 ஆம் ஆண்டு 'கில்லி காஜா' என்ற திரைப்படத்தின் மூலம் மலையாளத் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
1999 ஆம் ஆண்டு 'சூர்யவம்சம்' என்ற திரைப்படத்தின் மூலம் ஹிந்தித் திரைப்படத்துறையில் அறிமுகமானார்.
முன்னணி நடிகர்களின் நாயகி செளந்தர்யா
ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி, விஷ்ணுவர்தன், மோகன்லால், வெங்கடேஷ், நாகார்ஜுனா, பால கிருஷ்ணா, கார்த்திக், பிரபு, போன்ற பல முன்னணி நடிகர்களுடன் செளந்தர்யா நடித்துள்ளார். அவர் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
அவர் சிறந்த நடிகைக்கான இரண்டு நந்தி விருதுகளையும், சிறந்த நடிகைக்கான ஒரு தேசிய திரைப்பட விருதையும் பெற்றுள்ளார்.
சௌந்தர்யா தமிழ், தெலுங்கு என பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். அவர் நடித்த சில திரைப்படங்கள்:
பொன்னுமணி
அருணாச்சலம்
காதலா காதலா
சொல்லாமலே
பெரிய மனுஷன்
சேனாதிபதி
தொடரும்
சுந்தராத் தெலுங்கு
சூரிய வம்சம் (இந்தி)
