குறுக்குப் புத்தி.. இது ரொம்ப தப்பு.. சௌந்தர்யாவோட அம்மா, அப்பா அழுதுட்டு இருக்காங்க - தோழி ஆவேசம்!
இந்த பிக்பாஸ் வீட்டில் செளந்தர்யாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதற்கு பிஆர் டீம் தான் காரணம் என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு சௌந்தர்யா தோழி பேட்டி கொடுத்துள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் பிரமாண்டமாக ஆரம்பிக்கப்பட்டது. கடந்த 2 மாதங்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்நிகழ்ச்சியில் தற்போது 12 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகம் தேவை இல்லை. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். நிகழ்ச்சி ஆரம்பம் ஆனதில் இருந்தே, போட்டியாளர்கள் போட்டியை சுவாரசியமாக கொண்டு செல்ல வேண்டும் என்பதை காட்டமாக பேசி, வாரம் வாரம் ட்ரில் எடுத்து வரும் அவரின் தொகுத்து வழங்கும் பாங்கு அனைவரையும் கவர்ந்து வருகிறது.
விமர்சனத்திற்கு பஞ்சமில்லை
இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி நிறைவடையவுள்ளதால் பரபரப்பாக சென்றுக் கொண்டிருக்கின்றது. கடந்த 7 சீசன்கள் வெற்றிகரமாக நடத்தி முடித்த பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது டிஆர்பி ரேட்டிங்கில் சரிவை கண்டுள்ளது.
நாளுக்கு நாள் புதிது, புதிதாக டாஸ்க்குகளை பிக்பாஸும் கொடுத்து நிகழ்ச்சியை சுவார்சியமாக்க முயற்சி செய்து வருகிறார். அதனால் நிகழ்ச்சி விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டு இருக்கிறது.
இன்னும் ஒரு மாதத்தில் நிகழ்ச்சி முடிவுக்கு வரவுள்ள நிலையில் தீபக், முத்துக்குமரன், விஜே விஷால், அருண் பிரசாத், ஜெஃப்ரி, ராணவ், ரயான், சௌந்தர்யா, ஜாக்குலின், அன்ஷிதா, பவித்ரா, மஞ்சரி ஆகிய 12 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர்.
வெளியேற்றப்பட்ட போட்டியாளர்கள்
முன்னதாக, ரவீந்தர் சந்திரசேகர், தர்ஷா குப்தா, சுனிதா, அர்னவ், ரியா,வர்ஷினி வெங்கட், மற்றும் சிவகுமார், ஆனந்தி, சாச்சனா, தர்ஷிகா, சத்யா ஆகியோர் வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் ரஞ்சித் வெளியேற்றப்பட்டார்.
75 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் இன்னும் வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளே இருக்கின்றனர். அதிகபட்சமாக இன்னும் நான்கு வாரங்களில் இருக்கும் நிலையில் தொடர்ச்சியாக இன்னும் சில டபுள் எவிக்ஷன் நடக்கவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது.
செளந்தர்யாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு
இந்த பிக்பாஸ் வீட்டில் செளந்தர்யாவுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகமாக இருக்கிறது. இதற்கு பிஆர் டீம் தான் காரணம் என பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தனியார் ஊடகத்திற்கு சௌந்தர்யா தோழி பேட்டி கொடுத்துள்ளார்.
அதில், “சௌந்தர்யா நிஜத்துல எப்படியோ அப்படிதான் பிக்பாஸ் வீட்டுக்குள்ளயும் இருக்கா. ஆனா நிகழ்ச்சிக்குள்ள போன சில நாட்கள்லயே வலுவான போட்டியாளரா உருவாகிடுவாளோன்னு பயந்த சில சக போட்டியாளர்களுடைய ஆதரவாளர்கள் வெளியில இருந்து ‘அவங்க பி.ஆர்.டீம் வச்சிருக்காங்க'ன்னு பேசத் தொடங்கிட்டாங்க.
பி.ஆர் ஒர்க்னு எப்படிச் சொல்ல முடியும்?
ஏற்கெனவே அவங்களுக்கு சப்போர்ட்டரா இருக்கிறவங்க ஆதரவா சமூக ஊடகங்கள்ல பேசறதையெல்லாம் பி.ஆர் ஒர்க்னு எப்படிச் சொல்ல முடியும்?. இப்படியொரு ஷோவுக்குள் கிட்டத்தட்ட எழுபது நாட்களைக் கடந்திருக்கா. அதை பி.ஆர் ஒர்க்னு சொல்றது குறுக்குப் புத்தி.
சௌந்தர்யாவோட குரல் பிறந்ததுல இருந்தே அப்படிதான். சின்ன வயசுலயே இந்தக் குரலால அவ நிறைய அவமானங்களை சந்திச்சிட்டா. பிக்பாஸ் வீட்டுக்குள்ள இருக்கும் போட்டியாளர்கள்ல, இவ நல்ல ஃப்ரண்டுன்னு நம்பின சிலர்கூட இவளை கேலி செஞ்சாங்க. ஸ்கூல் நாட்கள்ல எப்படி இந்த குரல் பிரச்னைக்காக அழுதாங்களோ, அதேபோல இப்ப சில நேரம் ஷோ பார்த்துட்டு 'இன்னும் எத்தனை நாள்தான் இதை வச்சே அவளை மட்டம் தட்டுவாங்க என சௌந்தர்யாவோட அம்மா, அப்பா அழுதுட்டு இருக்காங்க.” எனக் கூறியுள்ளார்.
பொறுப்புத் துறப்பு:
இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.
டாபிக்ஸ்