Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் நடந்த இன்டர்வியூ.. சிக்கலில் முத்து.. போட்டுக் கொடுத்த போட்டியாளர்கள்..
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் நடந்த இன்டர்வியூ.. சிக்கலில் முத்து.. போட்டுக் கொடுத்த போட்டியாளர்கள்..

Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் நடந்த இன்டர்வியூ.. சிக்கலில் முத்து.. போட்டுக் கொடுத்த போட்டியாளர்கள்..

Malavica Natarajan HT Tamil
Jan 15, 2025 09:02 PM IST

Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் நடந்த நேர்காணலின் போது, சௌந்தர்யா, பவித்ரா ஆகியோர் முத்துக்குமரன் மேல் உள்ள தங்கள் எதிர் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் நடந்த இன்டர்வியூ.. சிக்கலில் முத்து.. போட்டுக் கொடுத்த போட்டியாளர்கள்..
Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் நடந்த இன்டர்வியூ.. சிக்கலில் முத்து.. போட்டுக் கொடுத்த போட்டியாளர்கள்..

பிக்பாஸ் என்ட்ரி

பிக்பாஸ் வீட்டில் 100 நாட்கள் நிறைவடைந்த நிலையில், பணப் பெட்டி வைப்பது, பணப் பெட்டியுடன் சேர்த்து விளையாட்டிலும் தொடர்வது என போட்டியில் பல்வேறு புதிய விதிகள் அமலுக்கு வந்தது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து எலிமினேட் செய்யப்பட்ட போட்டியாளர்களும் அடுத்தடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்து, 90 நாட்களுக்கும் மேலாக வீட்டில் விளையாடி வரும் போட்டியாளர்களின் மனதை மாற்ற முயற்சி செய்தனர்.

ஆறுதல் சொன்ன பிக்பாஸ்

இதில் பலரும் சௌந்தர்யாவின் பிஆர் டீம் குறித்து பல கருத்துகள் கூறி அவரை அழ வைத்தனர். பின் அவரை பிக்பாஸும் விஜய் சேதுபதியும் சமாதானம் செய்தனர். இருந்தாலும், வீட்டிற்குள் வரும் போட்டியாளர்கள் பல பிரச்சனைகளை தெரிந்தும் தெரியாமலும் ஏற்படுத்தி வந்த வண்ணமே இருக்கும் நிலையில், பிக்பாஸ் வீட்டிற்கு போட்டியாளர் அல்லாத நபர் ஒருவர் என்ட்ரி கொடுத்துள்ளார்.

மாகபா ஆனந்த் என்ட்ரி

அவர் வேறு யாரும் அல்ல விஜய் டிவி புகழ் மாகபா ஆனந்த் தான். பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த அவர், போட்டியாளர்கள் அனைவரையும் தனித்தனியாக இன்டர்வியூ எடுத்துள்ளார். அதில், போட்டியாளர்களின் நிறைகள், குறைகள், மறக்க முடியாத சம்பவம் குறித்த கேள்விகளை எழுப்பி வந்தார்.

இதுகுறித்து விஜய் டிவி வெளியிட்ட ப்ரோமோ வீடியோவில், கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் என்னைப் பற்றிய பேச்சுகள் வந்தது. அதன் காரணமாகத் தான் நான் இப்போது இந்த வீட்டிற்குள் வந்துள்ளேன் எனக் கூறி போட்டியாளர்கள் அனைவரிடமும் கேள்வி எழுப்பினார்.

முத்து மேல் வருத்தம்

பவித்ராவை இன்டர்வியூ செய்த மாகபா ஆனந்த், பிக்பாஸ் வீட்டில் இத்தனை நாள் விளையாடி இருக்கிறீர்கள். கேப்டன்சி டாஸ்கில் ஜெயித்தும் ஏன் விளையாடவில்லை. இந்த வீட்டில் யார் மீது வருத்தம் உள்ளது என்றெல்லாம் கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய பவித்ரா, எனக்கு இந்த வீட்டில் முத்து மேல் தான் வருத்தம் இருக்கு. கேப்டன்சி போட்டியில் விட்டுக் கொடுத்தேன்னு அவர் சொல்லாம இருக்கலாம் எனக் கூறினார்.

வாயால் மாட்டிக் கொள்ளும் முத்து

பின் பேசிய சௌந்தர்யா, முத்துக்குமரன் மிகவும் சேப் கேம் விளையாடுறாரு, அப்புறம் அவரே கருத்து சொல்றேன்னு ஏதாவது பேசி மாட்டிக்கிறாரு என கூறியுள்ளார்.

ப்ரோமோவின் படி, மாகபாவிடம் பேசிய இருவருமே முத்துக்குமரனை குறைவைத்து பேசியதால், அவர் இறுதி போட்டிக்கு செல்வதில் ஏதேனும் சிக்கல் ஏற்படுமோ என்ற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இதுகுறித்து முத்துக்குமரன் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கணிக்க முடியாத சீசன்

முன்னதைக பிக்பாஸ் வீட்டின் இறுதி போட்டிக்கு ராயன் நேரடியாக தேர்வாகியுள்ளார். இதையடுத்து, மீதமுள்ள போட்டியாளர்கள் தங்களை இறுதி போட்டிக்குள் நுழைக்க தீவிர முயற்சியை மேற்கொண்டு வருகிறார்.

பிக்பாஸ் வீட்டின் 7 சீசன்களை பார்த்துவிட்டு இந்த சீசனையும் பார்க்கும் பார்வையாளர்களுக்கு இந்த சீசன் தொடங்கிய நாள் முதல் தற்போது 100 நாட்கள் கடந்தது வரை எல்லா டாஸ்க்குகளும் புதிதாகவே இருந்து வருகிறது. இதனால் இந்த போட்டியின் போக்கை கணிக்க முடியாமல் உள்ளதாக பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.