உள்ளூரில் விலைபோகாத மாடா வெளியூரில் விலைபோகும்.. தியேட்டரில் நோ ரெஸ்பான்ஸ்.. ஓடிடியில் சக்கைபோடு போடும் சொர்க்கவாசல்
OTT Tamil Thriller Movie: உள்ளூரில் விலைபோகாத மாடா வெளியூரில் விலைபோகும்.. தியேட்டரில் நோ ரெஸ்பான்ஸ்.. ஓடிடியில் சக்கைபோடு போடும் சொர்க்கவாசல் படம் குறித்துப் பார்ப்போம்.
உள்ளூரில் விலைபோகாத மாடா வெளியூரில் விலைபோகும்.. தியேட்டரில் நோ ரெஸ்பான்ஸ்.. ஓடிடியில் சக்கைபோடு போடும் சொர்க்கவாசல் குறித்துப் பார்ப்போம்.
சில படங்கள் தியேட்டர்களில் கலவையான வரவேற்பைப் பெற்றாலும், ஓடிடி தளங்களில் அவை சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. அப்படி, ஓடிடியில் ஸ்ட்ரீமிங் செய்த பிறகு, பல படங்கள் நேர்மறையான பதிலைப் பெற்றிருக்கிறது.
சமீபத்திய தமிழ்த் திரைப்படமான 'சொர்க்கவாசல்' படத்திலும் இதேதான் நடந்தது. த்ரில்லர் படமாக இருந்த சொர்க்கவாசல் படத்திற்கு, தியேட்டரில் பெரிய வசூல் கிடைக்கவில்லை. இதற்குக் கலவையான விமர்சனங்களே எழுந்தன.
இருப்பினும், ஆர்.ஜே.பாலாஜி நடித்த சொர்க்கவாசல் படத்துக்கு, இப்போது ஓடிடியில் நல்ல கருத்துகளை கிடைத்து வருகிறது.
படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் பாசிட்டிவாக ரியாக்ட் செய்து வருகின்றனர். இப்படம் தற்போது ஓடிடியில் டாப் 5 இடங்களில் உள்ளது. அந்த விவரங்களைப் பற்றிப் பார்ப்போம்.
சொர்க்கவாசல் படத்துக்குக் கிடைத்த வரவேற்பு:
சொர்க்கவாசல் திரைப்படம் தற்போது (ஜனவரி 5) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் இந்தியாவில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. நல்ல பார்வையாளர்களுடன் டாப்-5 இடங்களில் இடம்பெற்று ட்ரெண்டிங்கில் உள்ளது.
இந்தப் படம் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட்டது. அதன் பின்னர் நல்ல பார்வைகளைப் பெற்று வருகிறது.
சொர்க்கவாசல் சுமார் பதினைந்து கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாகும். படம் எதிர்பார்த்த அளவுக்கு எடுபடவில்லை. சுமாரான வசூலையே ஈட்டியது. இருப்பினும், சொர்க்கவாசல் திரைப்படம், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் நன்றாக ஓடி வருகிறது. இது ஸ்ட்ரீமிங்கில் சிறப்பாக செயல்படுகிறது. சொர்க்கவாசல் படத்தை சித்தார்த் விஸ்வநாத் இயக்கியுள்ளார்.
நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமிங்:
இப்படம் தமிழில் மட்டுமே திரையரங்குகளில் வெளியானது. இருப்பினும், நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நான்கு மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இது தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளிலும் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. படம் நல்ல பார்வைகளைப் பெற இதுவும் ஒரு காரணம் ஆகும்.
உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படம்:
சொர்க்கவாசல் திரைப்படம், ஒரு சிறைச்சாலையின் பின்னணியில் அமைக்கப்பட்டுள்ளது. அகால மரண தண்டனைக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவரின் செயல்பாடுகள் மற்றும் அங்கு நடந்த கலவரங்களைச் சுற்றி படம் சுழல்கிறது.
1999ஆம் ஆண்டு மெட்ராஸ் சென்ட்ரல் சிறையில் நடந்த கலவரத்தை மையமாக வைத்து சித்தார்த் விஸ்வநாதன் இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். உண்மைச் சம்பவங்களை தழுவி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த சொர்க்கவாசல் படத்தில் ஆர்.ஜே.பாலாஜியுடன் செல்வராகவன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார். பார்த்திபன் என்னும் கதாபாத்திரத்தில் ஆர்.ஜே. பாலாஜியின் நடிப்பு சுவாரஸ்யமாக இருந்தது.
மேலும் இப்படத்தில், நட்டி, கருணாஸ், சானியா ஐயப்பன், சாராஃப் யுதீன், ஹக்கீம் ஷா, ரவி ராகவேந்திரன், பாலாஜி சக்திவேல், அந்தோணிதாசன் எனப்பலர் நடித்துள்ளனர்.இப்படத்திற்கு கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார்.
சொர்க்கவாசலின் வசூல் ரூ.8 கோடிக்கும் குறைவாக மட்டுமே வசூலித்து, வணிக ரீதியாக திரையரங்குகளில் தோல்வியைத் தழுவியது. ஆனால், தற்போது ஓடிடியில் நெட்பிளிக்ஸ் தளத்தில் சிறப்பாக இயங்கி வருகிறது.
சொர்க்கவாசல் ட்ரெய்லரை சிலாகித்து பேசிய லோகேஷ் கனகராஜ்:
முன்னதாக, சொர்க்கவாசல் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசியதாவது, ’சொர்க்க வாசல் படத்தில் பணிபுரிந்த எல்லோரையும் தெரியும். ஆறு மாதத்து முன்பு ஆர்.ஜே.பாலாஜி இந்தப் படத்தின் காட்சிகளைக் காட்டினான். அப்போது சொன்னேன், ஆர்.ஜே. பாலாஜி நடிகராக வருகிறார் என்று. அதுக்கு முன்னாடி நீ நடிக்கலைன்னு சொல்லலடா. இந்த படத்தில் சூப்பராக இருந்தது. உன்னை நினைக்கும்போதும் சித்தார்த்தைப் பார்க்கும்போதும் ரொம்ப சந்தோஷமாக இருக்கு. அடுத்து ட்ரீம் வாரியர்ஸுக்கு என் வாழ்த்துகள். அவங்க எப்படி படம் எடுத்து ரிலீஸ் செய்வாங்கன்னு எல்லோருக்கும் தெரியும்.
ஆர்.ஜே.பாலாஜியும் நானும் ஜெயிலில் ஒன்றாக இருந்தவங்க கிடையாது. கைதி 2 வில் கொஞ்சம் ஜெயில் சீக்வென்ஸ் எல்லாம் இருந்தது. சொர்க்கவாசல் படத்திலும் ஜெயில் சீக்வென்ஸ் இருக்குது. எப்படி வச்சிருக்காங்கன்னு தெரியல. அதைப் பார்த்து எனக்குத் தகுந்தது மாதிரி நான் மாத்திக்கணும்.ஏனென்றால் ரொம்ப ஆழமாக இருந்தது. எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. நன்றி’’ எனப் பேசி முடித்தார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.