Serial Actress Rani: ‘சொர்க்கம் சீரியல் பார்த்துட்டு அடிக்கவே வந்துட்டாங்க; எனக்கு அழுவதெல்லாம் செட் ஆகாது’ -நடிகை ராணி!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Serial Actress Rani: ‘சொர்க்கம் சீரியல் பார்த்துட்டு அடிக்கவே வந்துட்டாங்க; எனக்கு அழுவதெல்லாம் செட் ஆகாது’ -நடிகை ராணி!

Serial Actress Rani: ‘சொர்க்கம் சீரியல் பார்த்துட்டு அடிக்கவே வந்துட்டாங்க; எனக்கு அழுவதெல்லாம் செட் ஆகாது’ -நடிகை ராணி!

Kalyani Pandiyan S HT Tamil
Jul 29, 2024 06:27 AM IST

Serial Actress Rani: “கோயில் அருகே ஷூட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது, அந்த சீரியலில் நடப்பது உண்மையான நம்பிய சிலர் என்னை அடிக்கவே வந்து விட்டார்கள். நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க, காருக்குள் சென்று கண்ணாடியை ஏற்றி உள்ளேயே இருந்தேன்” - சீரியல் நடிகை ராணி!

Serial Actress Rani: ‘சொர்க்கம் சீரியல் பார்த்துட்டு அடிக்கவே வந்துட்டாங்க; எனக்கு அழுவதெல்லாம் செட் ஆகாது’ -நடிகை ராணி!
Serial Actress Rani: ‘சொர்க்கம் சீரியல் பார்த்துட்டு அடிக்கவே வந்துட்டாங்க; எனக்கு அழுவதெல்லாம் செட் ஆகாது’ -நடிகை ராணி!

பட்டப்படிப்பின் இறுதித்தேர்வை கூட நான் எழுத வில்லை

இது குறித்து அவர் பேசும் போது, “ எங்கள் வீட்டில் முழுக்க, முழுக்க பெண் குழந்தைகள். அப்பா, நாங்கள் சிறுவயதாக இருக்கும் போதே இறந்து விட்டதால், எங்கள் வீட்டு பெண்களுக்கு சீக்கிரமாக கல்யாணம் முடிக்க வேண்டும் என்று சொல்லி, கல்யாணம் முடித்து வைத்து விட்டார்கள். 

எனக்கு, நான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் பொழுதே, கல்யாணம் முடித்து வைத்து விட்டார்கள். என்னுடைய பட்டப்படிப்பின் இறுதி தேர்வை கூட நான் எழுதவில்லை. என்னுடைய மகன் பிறந்த பிறகுதான், நான் சீரியலுக்குள்ளேயே என்ட்ரி ஆனேன். கடவுளின் அருளால் நான் என்ட்ரி ஆனதிலிருந்து இப்போது வரை தொடர்ந்து வேலை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். 

முத்திரை குத்துவது பற்றி கவலைப்பட்டதே கிடையாது

என்னுடைய பெரும்பான்மையான கேரக்டர்கள் அனைத்துமே நெகட்டிவான கேரக்டர்கள்தான். ஆனால், என்ன நமக்கு மட்டும் இப்படி நெகட்டிவான கேரக்டர்களாக வந்து கொண்டிருக்கிறதே.. நம்மை இப்படியே முத்திரை குத்தி விடுவார்களோ என்று நான் ஒரு நாளும் நினைத்ததில்லை. 

காரணம் என்னவென்றால், கிளிசரின் போட்டுக் கொண்டு அழுவதெல்லாம் எனக்கு சுத்தமாக பிடிக்காது குறைந்த நாட்கள் ஷூட்டிங் சென்றாலும், அங்கு நான் தான் அந்த கேரக்டரின் வழியாக, ராணி போல தெரியவேண்டும் என்று நினைப்பேன். அதனால் அதை நான் மிகவும் சந்தோஷமாகத்தான் செய்து கொண்டிருக்கிறேன். 

அடிக்கவே வந்து விட்டார்கள் 

நான் சீரியலில் நடிப்பதை உண்மை நம்பிக் கொண்டு பலர்  நிஜ வாழ்க்கையில் என்னிடம், நீ மிகவும் கொடுமைப்படுத்துகிறாய் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள். கடந்த 10 வருடங்களுக்கு முன்பாக, ஒரு சம்பவம் நடந்தது. அப்போது நான் சொர்க்கம் சீரியலில் வில்லியாக நடித்துக் கொண்டிருந்தேன். அந்த சீரியலில் என்னுடைய கதாபாத்திரத்தின் பெயர் கவிதா. அதில் கதாநாயகியாக மௌனிகா மேடம் நடித்து இருந்தார். 

அந்த சீரியலை பொருத்தவரை, மௌனிகா மிகவும் சாஃப்ட்டான கேரக்டர். நான் அவரை போட்டு துன்புறுத்துவது போன்று அந்த சீரியலின் கதை அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு முறை கோயில் அருகே ஷூட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது, அந்த சீரியலில் நடப்பது உண்மையான நம்பிய சிலர் என்னை அடிக்கவே வந்து விட்டார்கள். நான் அவர்களிடம் இருந்து தப்பிக்க, காருக்குள் சென்று கண்ணாடியை ஏற்றி உள்ளேயே இருந்தேன்” என்று பேசினார். 

பொறுப்புத் துறப்பு:

இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்களில் இருந்து சேகரித்து, உங்களுக்குத் தரப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Whats_app_banner

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.