Soori: கடைசி நேரத்தில் எழுந்த பிரச்னை.. டாப் நடிகர்கள் செய்யாத விஷயத்தை செய்த சூரி
Soori: கருடன் படத்திற்காக சூரி தானாக முன் வந்து செய்த விஷயம் அனைவரின் கவனத்தையும் பெற்று இருக்கிறது.
Soori: நடிகர்கள் சசிக்குமார், உன்னி முகுந்தன், மைம் கோபி, ஆர்.வி. உதயக்குமார் என பெரிய நடிகர் பட்டாளே கதாபாத்திரங்களாக களம் இறங்கி இருக்கும் திரைப்படம் கருடன். விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகமான நகைச்சுவை நடிகர் சூரி, கருடன் திரைப்படத்தில் நடித்து உள்ளார். இப்படம் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
கருடன் குழு
நெடுஞ்சாலை படப்புகழ் ஷிவிதா நாயர், விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்த ரோஷிணி ஹரிப்பிரியன், பிரகிடா ஆகியோர் கதையின் நாயகிகளாக நடித்து உள்ளார்கள்.
படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். மேலும், ரேவதி சர்மா, ஷிவதா நாயர், சமுத்திரக்கனி, மொட்டை ராஜேந்திரன், மைம் கோபி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து உள்ளனர். லார்க் ஸ்டுடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.
கருடன் கதை என்ன?
கிராமத்தில் உள்ள ஒரு இடத்தை தனக்கு சாதகமாக மாற்ற துடிக்கிறார் ஒரு அரசியல்வாதி. ஆனால், அந்த இடத்தின் மூலபத்திரம் கோயில் டிரஸ்டி வசம் இருக்கிறது. அந்த பத்திரத்தை கைப்பற்றி, இடத்தை எப்படியாவது தன்வசமாக்க வேண்டும் என திட்டமிடுகிறார் அரசியல்வாதியாக நடிக்கும் ஆர். வி. உதயக்குமார். அதே ஊரில் இரு நண்பர்கள் இணைபிரியா நட்புடன் இருக்கிறார்கள்.
அந்த இரு நண்பர்களில் ஒருவர் சசிக்குமார், மற்றொருவர் உன்னி முகுந்தன். உன்னியின் நிழலாக, அவருக்கு விஸ்வாசமாக இருப்பவர் தான் சொக்கன். அந்த சொக்கன் தான் சூரி. பத்திரத்தை கைப்பற்ற அரசியல்வாதியாக ஆர். வி. உதயக்குமார் என்னென்ன செய்கிறார். என்ன மாதிரி திட்டமிடுகிறார், அதற்காக என்ன மாதிரியாக சம்பவங்கள் நடக்கிறது என்பது தான் படத்தின் முழு கதை.
சூரி
இந்நிலையில் கருடன் படத்தின் ரிலீஸ் நேரத்தில் 7 கோடி ரூபாய் கடன் காரணமாக பிரச்னை எழுந்து உள்ளது. உடனே சூரி தான் தானாக முன் வந்து கருடன் படத்திற்காக கையெழுத்து போட்டு ஏற்றுக்கொண்டிருக்கிறார். அதனால் தான் படம் சரியாக வெளியானது.
சூரியின் கச்சிதமாக நடிப்பு
சூரியின் சொக்கன் அவரது பரிமாணங்கள் அனைத்தும் கச்சிதமாக வெளிப்படும் அளவுக்கு அக்கறையுடன் எழுதப்பட்டுள்ளது. இயக்குநர் வெற்றிமாறனின் விடுதலைக்குப் பிறகு ஹீரோவாக தனது வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பிட்டார் சூரி.
கருடன் வசூல்
கருடன் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி கருடன் படம் 18 கோடி ரூபாய் முதல் 20 கோடி ரூபாய் வரை வசூல் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இருப்பினும் இது உறுதியான தகவல் இல்லை. படத்திற்கு கிடைத்த பாசிட்டிவான வரவேற்பால் வார இறுதியில் கருடன் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.
டாபிக்ஸ்