Actor Soori: மாமா.. மாமா.. ‘தாய்மாமனுக்கும் 6 வயது பையனுக்கும் உள்ள உறவுதான்..’ சுட்டியான சூரி -மாமன் டைரக்டர் பேட்டி
Actor Soori: தாய்மாமனுக்கும் 6 வயது பையனுக்கும் உள்ள உறவுதான் சூரி நடிக்கும் மாமன் படத்தின் அடிநாதம் என்று இயக்குநர் பிரசாந்த் பாண்டிராஜ் பேசி இருக்கிறார்.

சூரி நடிக்கும் 'மாமன்' படத்தின் பர்ஸ்ட் லுக் நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அதன் கதைக்களம் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்.
என்ன கதை?
மாமன் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஆறு வயது சிறுவனுக்கும், அவருடைய தாய் மாமனுக்கும் இடையேயான உறவை உணர்வுபூர்வமாக பேசும் படைப்பாக இப்படம் தயாராகி வருகிறது.
அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்தினருடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து ரசிக்கும் வகையில் ஃபேமிலி என்டர்டெய்னராக 'மாமன்' உருவாகி வருகிறது'' என்றார்.
‘விலங்கு' சீரிஸ் பிரபலம்
முன்னதாக, விமல் நடிப்பில் ஜீ தமிழ் ஓடிடி தளத்தில் வெளியான 'விலங்கு' எனும் இணைய தொடரை இயக்கிய இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'மாமன் '.
இந்தத்திரைப்படத்தில் சூரி, ராஜ் கிரண், ஐஸ்வர்யா லட்சுமி, சுவாசிகா, ஜெயபிரகாஷ், பாபா பாஸ்கர், விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம், நிகிலா சங்கர், மாஸ்டர் பிரகீத் சிவன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்த திரைப்படத்திற்கு ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை கணேஷ் சிவா மேற்கொள்ள, கலை இயக்கத்தை ஜி. துரை ராஜ் கவனிக்கிறார். தாய் மாமன் உறவைப் பற்றி மண் மணம் கமழும் படைப்பாக தயாராகும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. குமார் தயாரிக்கிறார்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு தற்போது திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. இதில் சூரியின் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது; மேலும் இந்த திரைப்படம் எதிர்வரும் கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே 'கருடன்' எனும் வெற்றி படத்திற்குப் பிறகு மீண்டும் நடிகர் சூரி- தயாரிப்பாளர் கே. குமார் ஆகியோர் இணைந்திருப்பதால், 'மாமன்' திரைப்படத்திற்கு ரசிகர்களிடையேயும், திரையுலக வணிகர்களிடையேயும் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர் வெற்றி
வெற்றிமாறனின் விடுதலை திரைப்படத்தில் கதையின் நாயகனாக அறிமுகமான நடிகர் சூரி, அடுத்ததாக கருடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த இரு திரைப்படங்களும் வெற்றிபெற்றது. அதனை தொடர்ந்து பேட்டி கொடுத்த அவர், இனி வரும் காலங்களில் பெருமளவு காமெடி கதாபாத்திரங்களை ஒதுக்கி வைத்து விட்டு, கதையின் நாயகனாக தொடரப்போவதாக தெரிவித்து வந்தார்.
அண்மையில், நடைபெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் நடிகர் சூரி காளையான ராஜாக்கூர் கருப்பன் பங்கேற்ற நிலையில், வாடிவாசல் தாண்டி சீறி பாய்ந்த சூரியின் கருப்பனை மாடுபிடி வீரர்கள் யாராலும் பிடிக்க முடியவில்லை. மாடுபிடி வீரர்களை மிரள வைத்த சூரியின் காளை சீறி பாய்ந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகின. சூரியின் காளை வெளியே வந்தபோது, இது நடிகர் சூரியின் காளை என வர்ணனையாளர்கள் அறிவித்தபோது, அங்கிருந்த துணை முதலமைச்சர் உதயநிதி, சூரி வரவில்லையை என கேட்டார்.
50 முறைக்கு மேல் பிடிபடாத கருப்பன்
வாடிவாசலில் அவிழத்து விடுவதற்கு முன்னர் நடிகர் சூரியின் காளையை கட்டவிழத்து விடுவதற்கு வந்த காளையின் பராமரிப்பாளர் கூறயதாவது, "நடிகர் சூரியின் இந்த காளை 50 முறைக்கு மேல் வாடிவாசலில் அவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதுவரை பிடிபடாத மாடாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் அலங்காநல்லூரில் இந்த மாடு கட்டவிழ்த்துவிடப்படும். அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. வெற்றியுடன் வாருங்கள் என எங்களை அனுப்பி வைத்துள்ளார்" என்றார்.

டாபிக்ஸ்