Soodhu Kavvum 2: "நாடு நாட்டு மக்களும்" என்ற டேக்லைன்! சூதுகவ்வும் 2 படத்தின் சூப்பரான அப்டேட்
நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதியின் அசத்தலான நடிப்பில் வெளியான சூதுகவ்வும் மிக குறைந்த பட்ஜெட்டில் உருவாகி சூப்பர் ஹிட்டானது. இந்த படத்தின் இரண்டாம் பாகம் ஷுட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது.
சூதுகவ்வும் இரண்டாம் பாகத்தை எஸ்ஜே அருண் இயக்கி வருகிறார். படத்தில் மிர்ச்சி சிவா பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அத்துடன் முதல் பாகத்தில் இடம்பிடித்த சஞ்சனா ஷெட்டி, ரமேஷ் திலக், கருணாகரன், ராதா ரவி, யோக் ஜேபி ஆகியோர் இந்த பாகத்திலும் நடித்துள்ளார்கள்.
இதையடுத்து சூதுகவ்வும் 2 ஷுட்டிங் முடிவடைந்துவிட்டதாகவும், வரும் கோடை விடுமுறையில் படம் திரைக்கும் வரும் எனவும் படத்தின் தயாரிப்பாளர் சி.வி. குமார் கூறியுள்ளார்.
ஷுட்டிங் நிறைவடைந்திருப்பதை விடியோவை எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் சி.வி. குமார், நாடும் நாட்டு மக்களும் என கேப்ஷனாக பதிவிட்டுள்ளார்.
முதல் பாகத்தில் இடம்பிடித்த பல்வேறு விஷயங்களை இந்த பாகத்திலும் கனெக்ட் செய்யும் விதமாக திரைக்கதை உருவாக்கியுள்ளார்களாம். முதல் பாகத்தில் விஜய் சேதுபதி சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடுத்தர வயது மிக்கவராக தோன்றியிருப்பார்.
அதே போல் சூதுகவ்வும் 2 படத்தில் மிர்ச்சி சிவா சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் தோன்றுவதாக கூறப்படுகிறது. கோடை விடுமுறைக்கு படம் ரசிகர்களுக்கு சிறந்த விருந்தாக அமையும் எனவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்