முதலமைச்சர் பதவியை ஏற்குமாறு சொன்னார்கள்.. மற்றொரு பவர்புஃல் பதவி! இந்த ஒரே காரணத்துக்காக ஏற்க மறுத்தேன் - சோனு சூட்
முதலமைச்சர் பதவி எனக்கு தருவதாக கூறினார்கள். ஆனால் பாகுபாடு காட்டாமல் மக்களுக்கு உதவுவும் சுதந்திரத்தை இழக்க நேரிடும் என்ற பயத்தில் தான் அதை நிராகரித்தேன் என்று ரியல் லைஃப் ஹீரோ என்று ரசிகர்களால் அழைக்கப்படும் வில்லன் நடிகர் சோனு சூட் கூறியுள்ளார்.

தென்னிந்திய சினிமாக்களில் வில்லன் நடிகராக நன்கு அறியப்பட்டவர் சோனு சூட். பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இவர் கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில் தேசிய ஹீரோவாக போற்றப்பட்டார். புலம்பெயர் தொழிலாளிகளுக்கு இவர் செய்த உதவி, அவர்களின் நலன் அளிக்கும் விதமாக பல்வேறு தேவைகளை பூர்த்தி செய்தார். இதன் மூலம் வில்லன் நடிகரான சோனு சூட்க்கு ரசிகர் வட்டம் பெருகியது. இதையடுத்து தன்னை தேடி முதலமைச்சர் பதவி வந்ததாகவும், அதை நிராகரித்ததாகவும் நடிகர் சோனு சூட் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஹூயுமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டியில், அரசியலில் இணைவது பற்றி கேட்டால் உங்கள் பதில் என்ன என கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சோனு சூட், " எனக்கு முதலமைச்சர் பதவிக்கான வாய்ப்பு வழங்கப்பட்டது. நான் அதை ஏற்க மறுத்ததால், துணை முதலமைச்சர் பதவியை தருவதாக கூறினார்கள். நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்தவர்களாக இருப்பவர்கள் ராஜ்யசபா எம்பி ஆவதற்கான வாய்ப்பும் கொடுத்தனர். அரசியலில் எதற்கும் போராட வேண்டிய அவசியம் இல்லை என்று எடுத்துச் சொன்னார்கள். சக்தி வாய்ந்த நபர்கள் என்னை சந்தித்து, உலகில் மாற்றத்தை ஏற்படுத்துமாறு ஊக்குவித்தது உற்சாகமான கட்டமாக இருந்தது" என்றார்.
அப்போது, அரசியல்வாதிகளை காட்டிலும் மக்கள் நீங்கள் அரசியலில் இணைய வேண்டும் என விரும்புகிறார்கள் என கேட்டபோது, " நீங்கள் வாழ்க்கையில் பிரபலமடைய தொடங்கும் போது, நாம் வாழ்க்கையில் உயர தொடங்குகிறோம். மேலும் உயரம் செல்ல செல்ல ஆக்ஸிஜன் குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் ஒருவர் எவ்வளவு சுவாசிக்க முடியும் என்பதை அறிவது முக்கியம். மக்கள் இரண்டு காரணங்களுக்காக அரசியலில் நுழைகிறார்கள்: பணம் சம்பாதிப்பதற்காகவும், அதிகாரத்துக்காகவும். இவற்றில் எதிலும் எனக்கு மோகமும், ஆசையும் இல்லை. மக்களுக்கு உதவுவது என்றால், நான் அதை ஏற்கனவே செய்து வருகிறேன்.