Sonu Nigam: வலியை பொருப்படுத்தாமல் இசை நிகழ்ச்சியில் ஆடல் பாடல்.. முதுகெலும்பில் ஊசி குத்திய உணர்வு.. சோனு நிகம் வீடியோ
Sonu Nigam: பாடல் பாடி, நடனமாடி ரசிகர்களை மகிழ்வித்த பாடகர் சோனு நிகம், முதுகுவலியால் அவதிப்பட்ட நிலையில் மற்றவர்களின் உதவியுடன் மேடையில் கீழே இறங்கினார். வலியில் இருந்து நிவாரணம் பெறும் விதமாக சில உடல் ஸ்டெர்சிங்கும் மேற்கொண்டார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி பாடகராக இருப்பவர் சோனு நிகாம். பாடகராக மட்டுமல்லாமல் நடிகர், இசையமைப்பாளர், டப்பிங் கலைஞராகவும் இருந்து வரும் இவர், புனே நகரில் இசை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்னர் முதுகுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். தனக்கு தாங்க முடியாத வலி ஏற்பட்டிருப்பதாக விடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் அனுமதி
மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் நடந்த இசை நிகழ்ச்சியில் கடும் முதுகு வலியை பொருப்படுத்தாமல் பாடல்கள் பாடியுள்ளார் சோனு நிகம். இந்த இசை நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இசை நிகழ்ச்சிக்கு தொடங்குவதற்கு சில மணி நேரங்கள் முன்பு கடுமையான முதுகுவலியால் அவதிப்பட்டபோதிலும், திட்டமிட்டபடி இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். வலியை பொருப்படுத்தாமல் மேடையில் பாடல் பாடி, நடனமாடி ரசிகர்கள் அனைவரையும் மகிழ்வித்தார். நிகழ்ச்சி முடிந்த பிறகு மருத்துவமனையில் வைத்து தனக்கு ஏற்பட்ட வீடியோவையும் சோனு நிகம் பகிர்ந்துள்ளார்.
இசை நிகழ்ச்சிக்கு முன் ஏற்பட்ட வலி
பாடகர் சோனு நிகம் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்திருக்கும் விடியோவில், படுக்கையில் படுத்தவாறு கேமராவை நோக்கி பேசியுள்ளார். அப்போது அவரது உதவியாளர்கள் உதவ முன்வந்த போது முகம் சுளித்தார். இசை நிகழ்ச்சிக்கான மேடையில் இருந்து மற்றவர்கள் உதவியுடன் அவர் கீழே இறங்குகிறார். அப்போது தனக்கு ஏற்பட்ட வலியில் இருந்து நிவாரணம் பெறும் விதமாக ஸ்டரெட்ச் செய்தார். இசை நிகழ்ச்சி தொடங்கும் முன் அவருக்கு வலி பிரச்னை ஏற்பட்டாலும், தனது உற்சாகத்தை இழக்காமல் மோடையில் நடனமாடியுள்ளார்.
என் வாழ்க்கையின் கடினமான நாள்
"என் வாழ்க்கையின் மிகவும் கடினமான நாள்களில் ஒன்றாக இது அமைந்தது. ஆனால் மிகவும் நிறைவானதாக இருந்தது. நான் பாடல் பாடிக்கொண்டே நடனமாடியபோது பிடிப்பு ஏற்பட்டது. ஆனாலும் ஏதோ ஒரு வழியாக சமாளித்தேன். என்னிடம் அதிகமாக எதிர்பார்க்கப்படும் போது, குறைவாக மக்களுக்கு தருவதை விரும்பவுதில்லை. நன்றாக நடந்து முடிந்ததில் சந்தோஷம்.
வலி மிகுந்த வேதனை தருகிறது. ஒரு ஊசி என் முதுகெலும்பில் குத்துவது போல் உணர்ந்தேன். நான் கொஞ்சம் நகர்ந்தேன், ஊசி என் முதுகெலும்புக்குள் நுழைந்தது போல் இருந்தது. மிகவும் மோசமான தருணம்" என வீடியோவில் கூறியுள்ளார்
இந்த ஆற்றல் என்றும் நிலைத்திருக்கும்
"முந்தைய நாள் இரவில் புனேவில் நடந்த இசை நிகழ்ச்சிக்கு முன்பு சோனு நிகமுக்கு முதுகு வலி அதிகமாக இருந்தது. இதையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மேடைக்கு வந்தவுடன், அவர் தனது வலியை மற்றவர்களுக்கு உணர வைக்க விடவில்லை. ரசிகர்களுக்காக இரு மடங்கு ஆற்றலுடன் இசை நிகழ்ச்சியில் பெர்பார்ம் செய்தார். இது உண்மையிலேயே அற்புதமான விஷயம். இந்த ஆற்றல் எப்போதும் அவருடன் இருக்கும் என்று நம்புகிறேன்" என ரசிகர் ஒருவர் பகிர்ந்த பதிவை சோனு நிகம் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார்.
சோனு நிகம் தமிழ் பாடல்கள்
பாலிவுட் சினிமாக்களில் அதிகமாக பாடல்களை பாடி வரும் சோனு நிகம் இந்தி தவிர தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், மராத்தி, குஜராத்தி, பெங்காலி, மராத்தி, நேபாளி, போஜ்புரி உள்பட பிற இந்திய மொழிகளிலும் சேர்த்து இதுவரை ஆயிரத்துக்கு மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் இடம்பிடித்த வாராயோ தோழி என்ற பாடல் மூலம் தமிழில் பாடகராக அறிமுகமானார் சோனு நிகம். இதையடுத்து தமிழிலும் ஏராளமான ஹிட் பாடல்கள் இவர் பாடியுள்ளார்.
தேசிய விருது, ஃபிலிம்பேர் விருது வென்றவராக இருந்து வரும் சோனு நிகம், இந்தியாவின் நான்காவகு உயரிய குடிமகன் விருதான பத்மஸ்ரீ விருதையும் வென்றுள்ளார்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்