Sonakshi Sinha: அவரிடம் இருந்த நம்பிக்கை.. அவர் விட்ட சவால்.. ஜாஹீரிடம் காதலில் விழுந்த தருணத்தை பேசிய சோனாக்‌ஷி சின்ஹா
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sonakshi Sinha: அவரிடம் இருந்த நம்பிக்கை.. அவர் விட்ட சவால்.. ஜாஹீரிடம் காதலில் விழுந்த தருணத்தை பேசிய சோனாக்‌ஷி சின்ஹா

Sonakshi Sinha: அவரிடம் இருந்த நம்பிக்கை.. அவர் விட்ட சவால்.. ஜாஹீரிடம் காதலில் விழுந்த தருணத்தை பேசிய சோனாக்‌ஷி சின்ஹா

Marimuthu M HT Tamil Published Feb 08, 2025 02:28 PM IST
Marimuthu M HT Tamil
Published Feb 08, 2025 02:28 PM IST

Sonakshi Sinha: பல ஆண்டுகள் டேட்டிங் செய்த பிறகு, திருமணம் செய்துகொண்ட சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜாகீர் இக்பால் ஜோடி, தங்களது நினைவுகளைப் பகிர்ந்துகொண்டது.

Sonakshi Sinha: அவரிடம் இருந்த நம்பிக்கை.. அவர் விட்ட சவால்.. ஜாஹீரிடம் காதலில் விழுந்த தருணத்தை பேசிய சோனாக்‌ஷி சின்ஹா
Sonakshi Sinha: அவரிடம் இருந்த நம்பிக்கை.. அவர் விட்ட சவால்.. ஜாஹீரிடம் காதலில் விழுந்த தருணத்தை பேசிய சோனாக்‌ஷி சின்ஹா

நடிகை சோனாக்‌ஷி சின்ஹா தமிழில், நடிகர் ரஜினிகாந்துடன் லிங்கா படத்தில் ஜோடியாக நடித்தவர்.

இந்துஸ்தான் டைம்ஸ் சிட்டி, ஷோ டாப்பர்ஸ் பக்கத்துக்கு காதலர் தினத்துக்காக புகைப்படம் எடுக்கும்போது, தனது மனைவி சோனாக்‌ஷி சின்ஹாவுடன் நெருக்கமாக இருக்கும் தருணத்தை ஜாஹீர் இக்பால் இழக்கவில்லை. அது இருவருக்கும் இடையே இருக்கும் காதலை பறைசாற்றியது.

இந்த போட்டோஷீட் பற்றி பேசிய சோனாக்‌ஷி சின்ஹா பற்றி கூறியதாவது, "இது மிகவும் நன்றாக இருந்தது.

இது நாங்கள் உண்மையில் காத்திருந்த ஒன்று. கடந்த ஏழு வருடங்களாக நாங்கள் ஒன்றாக பயணித்த படங்களைப் பெரும்பாலும் சமூக வலைதளங்களில் பதிவிடவில்லை.

ஆனால், இப்போது நாங்கள் திருமண உறவில் இருக்கிறோம். அனைத்து வேடிக்கையான நேரங்களிலும் இனி ஒளிந்து கொள்ளாமல் இருக்க முடியும்"என்று தெரிவித்தார்.

திருமணத்திற்கு முன் டேட்டிங்:

சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜாஹீர் இக்பால் இருவரும் கடந்த ஜூன் 23, 2024அன்று திருமணம் செய்துகொண்டனர். ஆனால் 2017ல் இருந்து காதலில் இருந்து வருகின்றனர். அவர்களின் முதல் சர்வதேச பயணம் 2018-ல் இலங்கை சென்றபோது தொடங்கியது. அடுத்து இருவரும் ஜோடியாக பாரிஸ், ப்ராக் ஆகியப் பகுதிகளுக்குச் சுற்றுலா சென்று வந்துள்ளனர்.

இதுதொடர்பாக ஜாஹீர் இக்பால் மேலும் கூறியதாவது, "நீங்கள் அனைவரும் பார்ப்பதை விட திருமணம் செய்து கொள்வது மிகவும் வேடிக்கையாக உள்ளது. இருவரும் சேர்ந்து சமூக வலைதளத்தில் பதிவு செய்ய நேரமில்லாத தருணங்கள் என்பது நீங்கள் பதிவிடும் தருணங்களை விட சிறந்தவை'' எனக் கூறியிருக்கிறார், சோனாக்‌ஷியின் காதல் கணவர் ஜாஹீர் இக்பால்.

முதல் சந்திப்பு எப்போது?:

சோனாக்‌ஷி சின்ஹா மற்றும் ஜாஹீர் இக்பால் இருவரும் 2017ஆம் ஆண்டில் ஒரு திரைப்படத் திரையிடலில் சந்தித்தனர். அன்றைய மாலை நேரத்தில் ஒன்றாக விமானத்தில் பறந்தபோது ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டனர்.

"எனக்கு அந்த இடம் தெரியும். நீங்கள் என்னை அங்கு அழைத்துச் சென்றால், நான் உங்களுக்காக ஆச்சரியங்களைக் காட்டுவேன். நாங்கள் எங்கள் திருமணத்தேதியாக ஜூன் 23ஆம் தேதியைத் தேர்ந்தெடுத்தோம். ஏனென்றால், அதுதான் நாங்கள் முதன்முதலாக சந்தித்த தேதி", என்று ஜாஹீர், சோனாவிடம் உடைந்து சிரிக்கிறார்.

நண்பரை திருமணம் செய்வது மிகச்சிறந்த விஷயம்: நடிகை சோனாக்‌ஷி சின்ஹா!

அடுத்து பேசிய சோனாக்‌ஷி சின்ஹா, "நான் அவரை முதலில் சந்தித்தபோது, அவர் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தார் என்று நினைத்தேன். அதுதான் நான் அவரை மிகவும் நேசிக்க வைத்தது. உரையாடலின் இடையே, 'யார் இவர், என்னை முதன்முதலாக சந்தித்து சவால் விடுகிறார்?' என்று நினைத்தேன்.

இன்று, உங்கள் சிறந்த நண்பரை திருமணம் செய்து கொள்வது மிகச் சிறந்த விஷயம் என்று நான் சொல்ல முடியும். எங்கள் மனதில், இருவரும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமண பந்தத்தில் இருக்கிறோம்", என்று சோனாக்‌ஷி சின்ஹா நகைச்சுவையாக கூறினார்.

முதல் காதலர் தினம் பற்றி மனம் திறந்த தம்பதி:

நீங்கள் தம்பதிகளாக கொண்டாடிய முதல் காதலர் தினம் உங்களுக்கு நினைவிருக்கிறதா? என்று கேள்வி கேட்க சோனாக்ஷி முதலில் செல்கிறார், "அவர் தான் எனக்கு முதலில் காதலர் தினத்திற்காக வாழ்த்தினார். அதை யார் கொண்டாடுகிறார்கள்? அன்றிலிருந்து அதை நான் கொண்டாட ஆரம்பித்தேன்.

நாங்கள் எங்கள் வழக்கமான நிகழ்வுகளில் இருந்து விலகி இருவரும் ஒன்றாக இரவு உணவுகள் எடுப்பது, சில திரைப்படங்களுக்குச் செல்வது போன்ற குளிர்ச்சியான தருணங்களை அனுபவிக்கிறோம்.

காதலர் தினத்தில் அவர் வட்டத்துக்கு வெளியே கொண்டாட்டங்களுக்குத் திட்டமிடுகிறார். ஜாஹீர் விரும்புவதால் நான் அதைக் கொண்டாடுகிறேன்" எனப் பதிலளித்தார்.

அதற்கு பதில் கூறிய ஜாஹீர் இக்பால், "சோனா ஆரம்பத்தில் 'நான் இந்த காதலர் தினத்தைக் கொண்டாட வேண்டாம்' என்று கூறினார். நான் உன்னுடன் இல்லாமல் ஒரு நாளில் எங்கோ செல்லப்போகிறேன் என்று சொல்லி பேசிட்டு தினமும் நானும் அடி வாங்குகிறேன்" எனப் பதிலளித்தார்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

தமிழ்த் திரைப்பட செய்திகள், டிவி தொடர்கள், OTT செய்திகள், திரைப்பட விமர்சனங்கள், பாலிவுட், ஹாலிவுட் படங்கள் தொடர்பான சமீபத்திய அப்டேட்களை, பொழுதுபோக்கு பிரிவில் பார்க்கலாம்.