Divya Kallachi: 'குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் செய்த திவ்யா கள்ளச்சி'- பகீர் குற்றச்சாட்டு வைத்த பெண்
Divya Kallachi: பிரபல யூடியூபரான திவ்யா கள்ளச்சி, சிறு குழந்தைகளை வைத்து பாலியல் தொழில் செய்து, பணம் பறித்து வருவதாக சமூக ஆர்வலர் சித்ரா குற்றம்சாட்டி உள்ளார்.

Divya Kallachi: யூடியூப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவம் பிரபலமானவர் திவ்யா கள்ளச்சி. இவர் தமிழ் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளிலும் பேசி வந்தார். இவரது வீடியோக்கள் பலராலும் கிண்டல் செய்யப்பட்டு வந்ததை பாசிட்டிவ்வாகக் கொண்டு அடுத்தடுத்த வீடியோ போட்டு பிரபலமாகி அதிக பணம் சம்பாதிக்க ஆரம்பித்தார்.
திவ்யா கள்ளச்சி மீது புகார்
இந்நிலையில், திவ்யா கள்ளச்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார் வளர்ந்து வரும் சமூக ஆர்வலர் சித்ரா. இதுகுறித்து சித்ரா சென்னை பிரஸ் கிளப்பில் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, சமூக சீர்கேட்டிற்கு எதிரா நான் குரல் கொடுத்து வரேன். அதற்காக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்திட்டு வர்றேன். அந்த சேனல் மூலமா வந்த வருமானம் 2 லட்சத்துக்கும் மேல திடீர்ன்னு காணாம போச்சு. அத யாரோ ஹேக் பண்ணிருக்காங்கன்னு தெரிஞ்சு அத கண்டுபிடிக்க பாத்தோம். அப்போ, அந்த காசு எல்லாம் திவ்யா கள்ளச்சிங்குற ஐடிக்கு போயிருந்தது தெரிஞ்சது.