தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sobhita Dhulipala: ஹாலிவுட் படத்தில் கால்கேர்ள் கேரக்டரில் நடித்தது எப்படி! பொன்னியின் செல்வன் வானதி பதில்

Sobhita Dhulipala: ஹாலிவுட் படத்தில் கால்கேர்ள் கேரக்டரில் நடித்தது எப்படி! பொன்னியின் செல்வன் வானதி பதில்

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Apr 07, 2024 04:59 PM IST

மங்கீ மேன் படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகியிருக்கும் நடிகை சோபிதா துலிபாலா, அந்த படத்தில் கால் கேர்ள் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாலிவுட்டின் அறிமுக படத்திலேயே விலை மாது கதாபாத்திரத்தில் நடித்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.

மங்கீ மேன் படத்தில் சோபிதா துலிபாலா
மங்கீ மேன் படத்தில் சோபிதா துலிபாலா

ட்ரெண்டிங் செய்திகள்

ஹாலிவுட்டில் அறிமுகம்

இதையடுத்து சோபிதா துலிபாலா மங்கீ மேன் என்ற படம் மூலம் ஹாலிவுட் திரையுலகில் அறிமுகமாகிறார். இந்த படத்தை ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த தேவ் பட்டேல் நடித்து, இயக்குகிறார். இதைத்தொடர்ந்து மங்கீ மேன் படம் சமீபத்தில் வெளியாகியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீபத்தில் நியூயார்க் டைம்க்கு அளித்த பேட்டியில் ஹாலிவுட்டில் அறிமுகமாகும் படத்திலேயே கால் கேர்ள் கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி சோபிதா துலிபாலா விளக்கியிருந்தார். இதுபற்றி அவர் கூறியதாவது: " மிகவும் அழகாக இருப்பவர்கள் சிக்கலானவர்களும் கூட. இந்த கதாபாத்திரத்தில் என்னை நம்பி நடிக்க வைத்ததை கௌரவம் கருதினேன். என்னை ஏதாவது ஒரு விஷயம் ஊக்கப்படுத்தினாலோ அல்லது கதை என்னை உள்ளே நுழைக்கும் மதிப்பு மிக்க விஷயங்கள் இருந்தாலோ அதில் நான் பங்கெடுக்க விரும்புவேன். 

நான் முதல் படத்தில் நடிப்பதற்கு முன்பே மங்கீ மேன் படத்தில் நடிப்பதற்காக ஆடிஷன் செய்யப்பட்டேன். பல ஆண்டுகள் கழித்து என்னை படக்குழுவினர்கள் தொடர்பு கொண்டார்கள். 2019இல் படத்தின் இயக்குநர் தேவ், இந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பேன் என ஆடிஷன் காட்சியை பார்த்த பின்பு முடிவு செய்ததாக தெரிவித்தார்.

ஹாலிவுட்டில் அறிமுகமாகும் படமே, அறிமுக இயக்குநர் படத்தில் நடித்தது பற்றி பலரும் கேட்டார்கள். இதில், நம்பிக்கை, பயம், பாதிப்பு என பல்வேறு விஷயங்கள் இருந்தாலும் அனைவரும் ஒரு குழுவாக செயல்பட்டோம். எல்லோரும் தூய்மையுடனும், மிகவும் ஆர்வத்துடனும் இருந்தார்கள். இதுவே அவர்களுடன் என்னை பயணிக்க வைத்தது.

மங்கீ மேன் திரைப்படம்

த்ரில்லர் படமாக உருவாகியிருக்கும் மங்கீ மேன், தன் தாயை கொலை செய்தவனை பழிவாங்கும் கதையாக உள்ளது. ஹனுமானின் புராணக்கதையால் ஈர்க்கப்பட்டு, இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை நடிகராக இருந்து வந்த தேவ் பட்டேல் இந்த படம் மூலம் இயக்குநராக உருவெடுத்துள்ளார்.

ஏப்ரல் 5ஆம் தேதி படம் உலகெங்கிலும் வெளியானது. இந்தியாவில் இந்த படம் படம் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் தவிர இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளும் படம் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியீட்டுக்கு சென்சாரில் இருந்து இதுவரை க்ரீன் சிக்னல் கிடைக்கவில்லை.

சோபிதா துலிபாலா

பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கிய ராம் ராகவ் 2.0 படம் மூலம் அறிமுகமானவர் சோபிதா துலிபாலா. ஆந்திராவை சேர்ந்த இவர் பேமினா மிஸ் இந்தியா 2013 பட்டத்தை வென்றுள்ளார். தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்திருக்கும் இவர் தமிழில் பொன்னியன் செல்வன் சீரிஸ் படங்களில் நடித்தார். அத்துடன் வெப்சீரிஸ்களிலும் கவர்ச்சிகரமான கதாபாத்திரங்களில் தோன்றி கவனம் ஈரத்து வருகிறார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

IPL_Entry_Point

டாபிக்ஸ்