Sobhita Dhulipala: ஹாலிவுட்டில் மதிப்பு மிக்க விருது வென்ற சோபிதா நடித்த படம்.. முழு விவரம்
Sobhita Dhulipala: சோபிதா துலிபாலா நடித்திருக்கும் ஹாலிவுட் படமான மங்கி மேன் இந்தியாவில் ரிலீஸ் ஆகாத நிலையில், ஓடிடியில் வெளியாக இருக்கிறது. ஸ்லம்டாக் மில்லினர் படத்தில் நடித்த தேவ் படேல் இந்த படத்தை இயக்கி, நடித்துள்ளார்.

பொன்னியின் செல்வன் சீரிஸ் படங்களில் வானதி என்ற கதாபாத்திரத்தில் அருள்மொழி வர்மணாக தோன்றிய ரவி மோகன் ஜோடியாக நடித்து தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் சோபிதா துலிபாலா. தெலுங்கு நடிகையான இவர் பாலிவுட் சினிமாக்களிலும், பல்வேறு வெப் சீரிஸ்களிலும் கலக்கி வருகிறார். கவர்ச்சிரமான கதாபாத்திரங்களில் தோன்றி ரசிகர்களை கிக் ஏற்றி வரும் இவருக்கும், தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது.
மங்கி மேன் படத்துக்கு விருது
இதையடுத்து கடந்த ஆண்டு 'மங்கி மேன்' என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார் சோபிதா துலிபாலா. பல்வேறு ஆஸ்கர் விருதுகளை குவித்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்தில் ஹீரோவாக நடித்த தேவ் படேல் இயக்கி, நடித்த இந்த படத்தில் சோபிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
ஆக்ஷன் த்ரில்லர் படமான மங்கி மேன் கனடா, அமெரிக்காவில் வெளியாகி ஹாலிவுட் ரசிகர்களை கவர்ந்து வசூலிலும் பட்டையை கிளப்பியது. இதையடுத்து இந்த படத்துக்கு ஹாலிவுட்டில் மதிப்புமிக்க விருது கிடைத்துள்ளது. அதன்படி ஹாலிவுட் படங்களை ரிவியூ செய்யும் பிரபல இணையத்தளமான ராட்டன் டொமோட்டேஸ் விருதுகளில் சிறந்த ஆக்ஷன் மற்றும் அட்வென்சர் படத்துக்கான விருதை மங்கி மேன் வென்றுள்ளது. டெட்பூல் 3, தி ஃபால் கை போன்ற படங்களை முறியடித்து மங்கி மேன் இந்த விருதை வென்றுள்ளது.
ரசிகர்கள் கொண்டாட்டம்
ஹாலிவுட் சினிமாக்களுக்கு வழங்கப்படும் விருதுகளில் மதிப்புமிக்க விருதாக கருத்தப்படும் ராட்டன் டொமேட்டோஸ் விருது, இந்திய வம்சாவளியான தேவ் படேல் இயக்கி, இந்திய நடிகையான சோபிதா நடித்திருக்கும் மங்கி மேன் படத்துக்கு கிடைத்திருப்பதை இந்திய சினிமா ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். இந்த விருதுக்கான பரிந்துரையில் டெட்பூல் அண்ட் வால்வரின், தி ஃபால் கை, ட்விஸ்டர் போன்ற பெரிய படங்கள் இடம்பிடித்திருந்தன. இருப்பினும் மங்கி மேன் விருதை வென்றிருப்பது பெருமைக்குரிய விஷயமாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ரிலீஸுக்கு தடை
கடந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி மங்கி மேன் படம் வெளியானது. இந்த படம் இந்தியாவில் ரிலீஸ் செய்யப்படவில்லை. இந்திய சென்சார் வாரியம் படத்தின் ரிலீஸுக்கு தடை விதித்தது. படத்தின் பிரதான கதாபாத்திரம் இந்தியர்கள் தெய்வமாக வணங்கும் ஹனுமனை ஈர்த்து அமைந்திருந்தது. இந்த சித்தரிப்பு இந்தியர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் விதமாக இருப்பதாக ஆட்சோபனை எழுந்த நிலையில், சென்சாருக்கு மறுக்கப்பட்டது.
படம் வெளியாகி சில நாள்களுக்கு பிறகு அமேசான் பிரைம் ஓடிடியில் வெளியிட்ட போதிலும், இந்தியாவில் ஸ்டிரீமிங் செய்யப்படவில்லை.
தேவ் படேல், பித்தோபாஷ், சோபிதா துலிபல்லா, சிக்கந்தர் கெர் மற்றும் மகரந்த் தேஷ்பாண்டே ஆகியோர் மங்கி மேன் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 10 மில்லியன் அமெரிக்க டாலரில் உருவான இந்த படம் 35 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வசூலித்ததாக கூறப்படுகிறது.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்