Sneha Prasanna: ‘அய்யோ.. பெரும்பாவம் பண்ணிட்டாங்க’.. கிரிவல பாதையில் செருப்பு.. சர்ச்சையில் சினேகா - பிரசன்னா!
தமிழ் செய்திகள்  /  பொழுதுபோக்கு  /  Sneha Prasanna: ‘அய்யோ.. பெரும்பாவம் பண்ணிட்டாங்க’.. கிரிவல பாதையில் செருப்பு.. சர்ச்சையில் சினேகா - பிரசன்னா!

Sneha Prasanna: ‘அய்யோ.. பெரும்பாவம் பண்ணிட்டாங்க’.. கிரிவல பாதையில் செருப்பு.. சர்ச்சையில் சினேகா - பிரசன்னா!

Kalyani Pandiyan S HT Tamil
Published Mar 30, 2025 08:26 AM IST

Sneha Prasanna: ஒரு கட்டத்தில் கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார். இதற்கிடையே, நடிகர் பிரசன்னாவை காதலித்த சினேகா, அவரையே திருமணமும் செய்து கொண்டார். இந்தத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

Sneha Prasanna: ‘அய்யோ.. பெரும்பாவம் பண்ணிட்டாங்க’.. கிரிவல பாதை செருப்பு.. சர்ச்சையில் சினேகா - பிரசன்னா!
Sneha Prasanna: ‘அய்யோ.. பெரும்பாவம் பண்ணிட்டாங்க’.. கிரிவல பாதை செருப்பு.. சர்ச்சையில் சினேகா - பிரசன்னா!

அதன் பலன், கமல்ஹாசன், விஜய், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. இதற்கிடையே, நடிகர் பிரசன்னாவை காதலித்த சினேகா, அவரையே திருமணமும் செய்து கொண்டார். இந்தத்தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

மனமுருகி வழிபட்டனர்

அண்மையில் சினேகாவும், பிரசன்னாவும் பங்குனி பிரதோஷத்தை முன்னிட்டு, திருவண்ணாமலையில் இருக்கும் அண்ணாமலையார் கோயிலுக்கு சென்றனர். அங்கு சென்ற அவர்கள் கிரிவலபாதையில் ( மலைப்பாதை) நடைபயணத்தை மேற்கொண்டனர். அந்தப்பயணத்தில் செய்ய வேண்டிய சடங்குகளை செய்து, தேங்காய்களை உடைத்து மனமுருகி வழிபட்டனர்.

இதில் சர்ச்சையாகி இருக்கும் விஷயம் என்னவென்றால், கிரிவல பாதையை இருவரும் செருப்பு அணிந்தே கடந்து சென்றதுதான். இது பக்தர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாக தெரிகிறது. பொதுவாக கிரிவலம் செல்லும் பக்தர்கள், அண்ணாமலையார் மீது உள்ள பக்தியின் பொருட்டு, செருப்பில்லாமல் கிரிவலப்பாதையை கடப்பர்.

நிலைமை இப்படி இருக்கும் நிலையில், சினேகாவும் பிரசன்னாவும் செருப்போடு கிரிவலப்பாதையை கடந்தது பெரும் பாவம் என்று சில பக்தர்கள் கூறியிருக்கின்றனர். இன்னும் சிலர் சினேகா, பிரசன்னாவிற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். இது தற்போது சமூகவலைதளங்களில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.

யார் இந்த சினேகா?:

சினேகா அக்டோபர் 12ஆம் தேதி மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பையில் 1981ஆம் ஆண்டு பிறந்தவர்.சினேகாவின் இயற்பெயர் சுபாஷினி ராஜாராம் நாயுடு. சிறுவயதில் அவரது குடும்பம் துபாய்க்குப் புலம் பெயர, அங்கேயே அவரது படிப்பும் தொடர்ந்தது. தனது 19 வயதில் மலையாளத்தில் 'இங்கனே ஒரு நிலாப்பக்‌ஷி’ என்னும் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

முன்னதாக, இப்படத்தில் 7 கிளாஸிக்கல் பாடல்கள் இருப்பதாகவும், அதற்கு நடனம் தெரிந்தவர்கள் வேண்டும் என்று இப்பட இயக்குநர்கள் அனில் - பாபு ஆகியோர் தேடும்போது, சினேகாவின் நடனத்திறமை பற்றி தெரியவர பின், தனது முதல் படத்தில் கமிட் ஆகியுள்ளார், நடிகை சினேகா.

தமிழ் சினிமாவில் சினேகாவின் அறிமுகம்:

பின் தமிழில் நடிகர் பிரசாந்துடன் இணைந்து ‘விரும்புகிறேன்’ படத்தில் கமிட் ஆனார். ஆனால், இப்படம் சில பிரச்னைகளால் ரிலீஸுக்குத் தாமதமாக, முன்னதாக நடிகர் மாதவனுடன் ஜோடிசேர்ந்து நடித்த ‘என்னவளே’ திரைப்படம் சினேகாவின் முதல் படமாக ரிலீஸ் ஆனது.

20ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நடிகை சினேகா தெலுங்கிலும் தொடர்ச்சியாக முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அதேபோல் கன்னடம், மலையாளப் படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர், நடிகை சினேகா.