SK 21 Update: வெறித்தனமான ஒர்க் அவுட்டில் சிவகார்த்திகேயன்!சர்ப்ரைஸ் அப்டேட் - படக்குழு பகிர்ந்த விடியோ
ராணுவ வீரர் போல் உடல் அமைப்பை பெறுவதற்கு எஸ்கே 21 படத்துக்காக தெறிக்கவிடும் விதமாக ஒர்க் அவுட் செய்துள்ளார் சிவகார்த்திகேயன்.
சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்குமார் பெரிய சாமி இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். உலகநாயகனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்து வருகிறார். எஸ்கே21 என்று அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தில் ராணுவ வீரர் போல் உடல் கட்டமைப்பை பெறுவதற்காக கடும் பயிற்சியை சிவகார்த்திகேயன் மேற்கொண்டுள்ளார்.
இதையடுத்து சிவகார்த்திகேயனின் ஒர்க் அவுட் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ராணுவ வீரர் கதாபாத்திரத்துக்காக தன்னை தயார்படுத்தி கொள்ள வெறித்தனமான ஒர்க் அவுட்டில் சிவகார்த்திகேயன் ஈடுபடுவது விடியோ காட்சியில் இடம்பிடித்துள்ளது.
அத்துடன் இந்த படத்தின் டைட்டில் டீஸர் வரும் 16ஆம் தேதி மாலை 5 மணக்கு வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை காமெடிக்கு முக்கியத்துவம் அளித்தும், பேமில் ஆடியன்ஸை கவரும் விதமாகவும் நடித்து வந்த சிவகார்த்திகேயன் எஸ்கே 21 படத்தில் முழுக்க அதிரடியாக ஹீரோவாக தோன்றவுள்ளார்.
இந்த படத்துக்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இதர நடிகர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் பெயர் டைடில் டீசர் வெளியீட்டின் போது அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கல் வெளியீடாக திரைக்கு வந்த அயலான் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட்டானது. அத்துடன் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை குவித்தது.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்