தமிழ் செய்திகள்  /  Entertainment  /  Sj Surya's Ill Health - Thanks To Fans Who Inquired About His Well-being

SJ Surya:எஸ்.ஜே.சூர்யாவுக்கு உடல்நலக்குறைவு - தன்னை நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி பதிவு

Marimuthu M HT Tamil
Feb 21, 2024 03:57 PM IST

எஸ்.ஜே. சூர்யாவுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

எஸ்.ஜே.சூர்யாவுக்கு உடல்நலக்குறைவு - தன்னை நலம் விசாரித்த ரசிகர்களுக்கு நன்றி எனப் பதிவு
எஸ்.ஜே.சூர்யாவுக்கு உடல்நலக்குறைவு - தன்னை நலம் விசாரித்த ரசிகர்களுக்கு நன்றி எனப் பதிவு

ட்ரெண்டிங் செய்திகள்

நடிகர் அஜித்தை வைத்து வாலி என்னும் மிகப்பெரிய ஹிட் கொடுத்த இயக்குநர் எஸ். ஜே. சூர்யா. அதன்பின், நடிகர் விஜயை வைத்து ‘குஷி’ என்னும் படத்தை இயக்கி, அதனையும் மெகா ஹிட் ஆக்கினார்.

அதன்பின், நடிப்புத்துறை மீது கொண்ட ஆர்வம் காரணமாக, ‘நியூ’படத்தை இயக்கி, நடித்து இருந்தார், எஸ்.ஜே.சூர்யா. இப்படமும் ஓரளவு வசூல் ரீதியாக ஹிட்டானது.

இதைத்தொடர்ந்து நடிப்பு மற்றும் இயக்கம் ஆகிய இரண்டு குதிரைகளிலும் சவாரி செய்யத்தொடங்கிய எஸ். ஜே.சூர்யா, அன்பே ஆருயிரே என்னும் படத்தை இயக்கி நடித்தார். அதன்பின், கள்வளின் காதலி, திருமகன், வியாபாரி, நியூட்டனின் மூன்றாம் விதி ஆகியப் படங்களில் ஹீரோவாக நடித்தார். பின், புலி, நண்பன் படத்தில் குணச்சித்திர ரோல்களில் நடித்தார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’இறைவி’ படத்தில் நடித்ததன்மூலம் தான் ஒரு மாறுபட்ட நடிகர் என்பதை, தமிழ் ரசிகர்களிடம் நிரூபித்தார். அதன்பின், ஸ்பைடர் முதல் மார்க் ஆண்டனி, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் வரை எந்தவொரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அநாயாசமாக செய்து பெயர் பெற்றுள்ளார்.

இந்நிலையில் பாபி சிம்ஹா, வேதிகா நடித்திருந்த ‘ரஸாக்கர்’ என்னும் பிரீயட் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவுக்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த எஸ்.ஜே. சூர்யா, அதில் பங்கேற்கவில்லை.

அதற்குரிய காரணத்தை பலரும் விசாரித்தநிலையில், அவரே, தனக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என எக்ஸ் தளத்தில் பதிவுசெய்துள்ளார்.

இதுகுறித்து எஸ்.ஜே.சூர்யா வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், ''அன்பிற்குரிய தம்பி பாபி சிம்ஹா, கொடுமையான வைரல் காய்ச்சல் காரணமாக, இந்த டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வில் என்னால் பங்கேற்கமுடியவில்லை. அதற்காக மிகவும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ரஸாக்கர் திரைப்படம் சிறப்பாக ரிலீஸ் ஆவதற்கும் மிகப்பெரிய வெற்றியை அடைவதற்கும் தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் குழுவுக்கு என் வாழ்த்துகள்’என மனதாரத் தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில் சற்றுமுன் அவர் போட்ட எக்ஸ் தளப் பதிவில், காய்ச்சலின் நான்காவது நாளான இன்று கொஞ்சம் உடல்நலம் மேம்பட்டுள்ளதாகவும், தன் மீது அன்பு செலுத்திய நண்பர்கள் அனைவருக்கும் நன்றி எனப் பதிவிட்டுள்ளார்.

 

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட் டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

IPL_Entry_Point

டாபிக்ஸ்